சாரா பேலின் துணை ஜனாதிபதியாகிறாரோ இல்லையோ… அமெரிக்க நிறுவனங்களும் பங்குச்சந்தையும் அதலபாதாளம் பாய்ந்தாலும் குடியரசுக் கட்சியின் உபவேட்பாகர்தான் செய்திகளில் எக்கச்சக்கமாய் புழங்குகிறார். அவரைக் குறித்து கண்டதும் கேட்டதும்:
வலைப்பதிவுகள்/கருத்து:
- சாரா பேலின் பெண் என்னும் கருத்தாக்கத்தில் எப்படி புகைப்படம் எடுக்கிறார்கள், அமெரிக்க ஊடகங்களில் எத்தகைய நிழற்படங்கள் வெளியாகின்றன என்பது குறித்த ஏமி வில்சனின் பதிவு: Picturing Sarah Palin « working
- வாக்கு வங்கி அரசியலாக கைக்குழந்தையை அலைக்கழிக்கிறாரா (அ) அமெரிக்காவில் அலுவலில் சின்னஞ்சிறுசுகளை கொண்டுவர முடியுமா: Sarah Palin and bringing your baby to work – Maryland parents :: The Baltimore Sun’s Kate Shatzkin
ஊடகங்கள்/வாழ்க்கை குறிப்பு:
- ஆளுநராக ஆட்சிக்கு வந்ததும் சாரா பேலின் செய்த சாகசங்கள் வழக்கமான அரசியல் போலத்தான்: வேண்டியவர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை அமுக்கியதும் வேண்டாதவர்களைப் போட்டுத் தள்ளியதும்
- தீராத விளையாட்டு அம்மா: நியூ யார்க் டைம்ஸ்
பொதுக்கூட்டம்/பேட்டி தர அச்சம்:
- சாதாரணமாக மெகயின் நடத்தும் ‘நேருக்கு நேர்’ நிகழ்வுகளில் எவர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால், பேலினுடன் முதன் முறையாக கலந்துகொண்ட டவுன் ஹால் சந்திப்பில் இந்த பாரம்பரியத்தை தவிர்த்துவிட்டார்கள்: McPalin town hall was pre-ticketed « FOX Embeds « FOXNews.com
- அந்த நிகழ்வு தொடர்பான நியு யார்க் டைம்ஸ் வலைப்பதிவு: Palin Unscripted – The Caucus Blog – NYTimes.com
- ஏபிசி தொலைக்காட்சியின் பதிவு: Political Radar: Palin Takes Questions at a McCain Town Hall
- அலாஸ்காவில் இருந்து எட்டிப் பார்த்தால் அயல்நாடு தெரியும் என்று சொன்ன பேலின் ‘எப்பொழுது வேண்டுமானாலும் உலக அறிவு குறித்த வினாக்களுக்கு பதிலளிக்கத் தயார்‘ என்றிருக்கிறார்.
இணையம்/தேடல் புராணம்:
- சாரா பேலின் என்று கூகுளிப்பவர்களில் பெரும்பாலானோர் ‘சூடான படங்கள்‘ என்றே வினவி இருக்கிறார்கள். தேடற்பதங்கள்:
- Vogue Magazine
- Photos
- Beauty Pageant
- Bio
- Biography
- Pictures
- Scandal
- எட்டு தங்கம் வென்ற மைக்கேல் ஃபெல்ப்ஸ், கிசுகிசு பத்திரிகைகளில் ஆஸ்தான நாயகி ப்ரிட்னி ஸ்பேர்ஸ், பாப் கலாச்சாரத்தின் பாரிஸ் ஹில்டன், பராக் ஒபாமா ஆகிய அனைவர் குறித்த ஒட்டுமொத்த தேடல்களை விட சாரா பேலின் குறித்த தேடல்களே அதிகம்:
ஆகஸ்ட் 29க்கு முன் பேலின் சம்பந்தமாக யூட்யுபில் 300 விழியங்கள் இருந்தன. தற்போதைய எண்ணிக்கை: 130,000+- சாரா பேலினின் விக்கிப்பிடியா பக்கத்தை ஒன்றேகால் மில்லியன் வாசகர்கள் எட்டிப்பார்த்துள்ளனர்:
உல்டா புல்டா/அங்கதம்:
- ஆனந்த் சொன்னது போல் “அமெரிக்க கொடி பிகினி உடையோடு, துப்பாக்கியை உயர்த்திக் காட்டும் படத்தை, யாரேனும், மின்னஞ்சலில் அனுப்பி இருக்கக்கூடும்.” அது போன்ற பல்வேறு போட்டோஷாப் ஆக்கங்களை ‘மீடியா ஷிஃப்டின் ஐடியா லேப்’ ஆராய்கிறது.
- டினா ஃபே சாரா பேலிநாக வந்திருந்த சாடர்டே நைட் லைவ்:
புறத்தோற்றம்/பிரபலம்:
- சாரா பேலினின் சிகையலங்காரம் – அலாஸ்கா ஆளுநருக்கு முடிவெட்டிய கதை
- சாரா பேலின் கண்ணாடிக்கு ஏற்பட்ட கிராக்கி: வால்ஸ்ட்ரீட் ஜர்னல் – ஸ்டைலு ஸ்டைலுதான் (வழி)
- எம்ஜியார் கண்ணாடி, தொப்பிக்கு கிடைக்கும் மவுசு போல் ‘நீங்களும் சாரா போல் தோற்றமளிக்கலாம்‘: முன்னூறுக்கு விற்ற கண்ணாடிகளின் விலை $700 ஆன கதை
- விற்பனைக்கு: சாரா பேலின் போல் தலைமுடி தோப்பா
- சாரா பேலின் அணியும் காலணி ப்ராண்ட்: Double Dare Naughty Monkey shoes (என்னுடைய மொழிபெயர்ப்பு: ரெட்டைக்குழல் குறும்புக் குரங்கு காலணிகள்)
- அமெரிக்காவில் ஹாலோவீன் வருகிறது. அலுவல் முதற்கொண்டு பள்ளிச் சிறார்கள் வரை தங்களுக்கு பிடித்தவர்களாக மாறுவேடம் தரிக்கும் கோலம் காணக்கிடைக்கும். சாரா பேலின் போல் தோற்றமளிக்க சில துப்புகள் இங்கே கிடைக்கிறது.
இளமைக்காலம்:
- சின்ன வயதில் சாரா பேலின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்ததின் விழியம்:
மின்னஞ்சல்:
- அவரின் யாஹு மின்னஞ்சல் கொந்தர்களால் கவரப்பட்டது: Sarah Palin’s Private E-Mails
- தொடர்புள்ள விரிவான செய்தி: Serves You Right for Using Yahoo Mail … | John Paczkowski | Digital Daily
குறிப்புகள்/இன்ன பிற:
- கடைசியாக அலாஸ்கா அரசியலின் உள்விஷயங்கள் குறித்த வலைப்பதிவு துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு முந்திய சாரா பேலிநை அடையாளம் காட்டுகிறது.













