Knolஇல் எழுத முயன்றது


தென்னக பிலிம்பேர் விருதில் ஜெயப்ரதா காட்சியளித்தார். இந்த வருட ஆரம்பத்தில் புருஷன் போனி கபூர் சமேத ஸ்ரீதேவி தனி ஆவர்த்தனமே ஆடியிருந்தார். அது ஹிந்தி ஃப்லிம்ஃபேர்.

ஆபிதின், சாரு நிவேதிதா, நாகூர் ரூமி எல்லோரும் கலைப்பயணத்தை ஒருங்கேத் துவக்கியவர்கள்.

கஜோலும் ஷில்பா ஷெட்டியும் ஒரே படத்தில் ‘பாசிகர்’ ஆனார்கள்.

இந்த மாதிரி ஒன்றாகத் தோன்றி திசை மாறியவர்களை Knolஇல் துட்டாக ஆக்க எண்ணம்.

பிள்ளையார் சுழித்தேன்.

சரிப்படாமல் போக, ‘உன்னைத்தானே தஞ்சமென்று’ ராதிகா, ‘சங்கீத ஸ்வரங்கள்’ பானுப்ரியா, ‘அதிசய ராகம்’ ஸ்ரீவித்யா, ‘கீழ்வானம் சிவக்கும்’ மேனகா, ‘விழிகள் மேடையாம்’ பூர்ணிமா ஜெயராம், ‘கண்ணின் மணியே’ சுகாசினி, ‘சேலை கட்டும்’ அமலா, ‘தென்றல் வந்து’ ஜெயஸ்ரீ என்று மனங்கவர்ந்த நாயகிகளைக் கொண்டு தொடராக மாற்றப் பார்த்தேன். அதிலும் ட்விட்டர் போல் சுருக்கெழுத்து கவனச்சிதறல்.

எழுதாமல் விட்டதை தூக்கிப் போடாமல் இருக்க Obsessive blogging disorder போய் Blogging Attention Disorder BAD ஆக வந்துவிட்டது.

இன்றும் கஜோல் சூப்பர் ஹீரோயின். ஷில்பா ஷெட்டி அனைத்து உலகத் தொலைக்காட்சிகளிலும் பேட்டியளிப்பவர். ரிச்சர்ட் ஜெருக்கு முத்தம் கொடுத்தால் சர்ச்சை வரவழைப்பவர். Celebrity பிக் பிரதரில் வாகை சூடியவர்.

ஷாரூக் இன்னும் ஹீரோவாகவே தேய்கிறார்.

நடனத்தில் எத்தனைவகைப்படும்? ட்விஸ்ட், வால்ட்ஸ், சல்ஸா, பாங்ரா பலவகைப்படும். இராயர் காபி க்ளபில் இலக்கியம் பயிற்றுவித்தால் கல்லூரி டான்ஸ் க்ளபில் கூடப்படிப்பவரின் இடையைப் பிடிப்பதை பயிற்றுவித்தார்கள். ஷாரூக் மாதிரி கண்ணாடி; ஷில்பா ஷெட்டி மாதிரி சகா. இந்தப் பாட்டில் வரும் ட்விஸ்ட் மட்டும் வரவேயில்லை.

மூதாட்டி ஜெயபிரதாவை பார்த்தவுடன் ‘சலங்கை ஒலி’ தோன்ற; அது ‘வறுமையின் நிறம் சிவப்பு’க்கு இட்டுச்செல்ல; அங்கிருந்து நடிப்பு வராத கேஸ் என்று மார்க் போட்ட கஜோல் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ ஆக தங்கிப் போனதில் தாவி; ஷில்பா ஷெட்டிக்கு கணவன் கிடைப்பானா ஆணாதிக்கமாக; ரோஜா நாயுடு கட்சியில் சேர்ந்து தோற்ற காட்சியை கூகிள் புகைப்படத் தேடலில் துழாவி Knolஇல் நின்றது.

ஒரே சமயத்தில் கமலுடன் ஜோடி கட்டியவர்கள். விகல்பமில்லாமல் ஹிந்திக்கு சென்று தொடை தெரிய கச்சை கட்டியவர்கள். சமகாலத்தினர்.

எல்லோராலும் ஜெயலலிதாவாக முடிவதில்லை.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.