அமெரிக்க அதிபர் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், தனது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக பெண்ணொருவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
அலாஸ்கா மாகாணத்தின் ஆளுநர்களிலேயே மிகவும் இளையவரான சேரா பேலின் அம்மையாரை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே ஆளுநராக இருந்துவருபவர் அவர்.
நாற்பத்து நான்கு வயதுடைய பேலின் அம்மையார் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. கருக்கலைப்பை கடுமையாக எதிர்த்துவந்தவர் அவர்.
ஜான் மெக்கெய்னின் இந்தத் தேர்வு, மிகவும் தைரியமான ஒன்று என்று கருதப்படுவதாக ஓஹியோ டேடன் நகரில் நடந்துவரும் குடியரசுக் கட்சி மாநாட்டில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
நன்றி: பிபிசி










