வார்த்தை :: மே மாதம் – சிவிறுதல்


இது முதல் மாத அறிமுகம்: வார்த்தை – எனி இந்தியன் இதழ் (ஏப்ரல்)

சென்ற மாத ‘வார்த்தை’க்கு மதிப்பெண். இந்த மாதம் நச்சுன்னு சில வரிகளில் அறிமுகம்:
(குறிப்பிடத்தக்க, தவறவிடக்ககூடாத இடுகைகள் தடிமன் செய்யப்பட்டிருக்கின்றன)

வியனுலகு அனைத்தையும் அமுதென நுகர்வோம் – தலையங்கம் :: பிகேசி

அச்சு ஊடகங்களில் அதிகம் எழுதாத குறைந்தது எழுவர் எழுதியிருந்தனர்… முன்னோடி பத்திரிகைகளின் சாயல் தெரிகிறது என்று சிலர் சொன்னார்கள்.

இணையத்தில் இருந்து சிலரை அறிமுகம் செய்துவைத்தாலும் அவர்களும் வலைப்பதிவுகளுக்கேயுரிய எந்தவித மாற்றமும் இல்லாமல் அறிமுகமாவது பொம்மரில்லுவை சந்தோஷ் சுப்ரமணியம் ஆக்கியது போல.

கடிதங்கள்

மாற்று சிந்தனைகளை முன்வைக்கவில்லை

ஜெயகாந்தன் பதில்கள்

குசேலன் படத்தில் பத்து நாயகிகளோடு சூப்பர் ஸ்டார் மட்டும்தான் நடனம் ஆட வேண்டுமா? அயிட்டம் பாட்டு

ஹொகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: நடிகர் சங்கக் கூச்சலும் சட்டத்தின் நடைமுறையும் – கே.எம். விஜயன்

வக்கீலய்யாவின் குறையைப் போக்குகிறது.

நகரும் கண்டத்தில் தமிழை நகர்த்தும் தமிழர் – முருகபூபதி

ஏதாவது புதிய நிரலி ப்ராஜெக்ட் ஆரம்பிப்பதற்கு முன் வார்ப்புருவில் சில கோப்புகளைக் கேட்பார்கள் – இங்கே ஆசிரியர் வார்ப்புருவுக்குள் ஆயிரம் வார்த்தைகளில் ஆஸ்திரேலியாவும் தமிழும் வருங்காலமும் என்கிறார்.

பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள் – கே. பாலமுருகன்

மிக மோசமான தொனியில் செய்துகாட்டிக் கிண்டல் அடிப்பதையும் எவ்வளவு சாதாரணமாக நமட்டுச் சிரிப்புடன் கடந்து விடுகிறான். கடந்து செல்லுதல் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? இவன் கிறுக்குத் ‘தேவனாகத்தான்’ இருக்க முடியும். கிறுக்கனாக இருந்தால்தான் இவர்களைக் கடக்க முடியும்

சிறுகதை என்பது episodic ஆக இருக்கும். இதில் novelistic தன்மைகள் எட்டிப் பார்த்தாலும் புரியாத பாஷை படத்தின் துணையெழுத்தை மட்டும் படித்து விட்டு திரைக்காட்சியைத் தவறவிட்ட அயல்தன்மை.

தமிழில் தேவாரம்: பின்தொடரும் நிழல்கள் – வெளி ரங்கராஜன்
ஐபிஎல் கிரிக்கெட் குறித்து context sensitive ஆக பதிவிட வேண்டும் என்னும் ஆர்வத்தில் ஊக்கமாதுக்களையும் பார்வை நங்கையரையும் மட்டும் சாடிப் பதிவிடுவது போல் ஜாதி, சிதம்பரம் என்று திசை மாறி தடுமாறாமல் ஆட்டத்தைக் குறித்தும் செல்போக்குகளைக் குறித்தும் எளிமையான வரலாற்று அலசல்.

ஆர்தர் சி. கிளார்க்: அறிவியல் புனைவும் முன்னோக்கிய பார்வையும் – துகாராம் கோபால்ராவ்

பல்வேறு இலக்கியப் பிரிவுகள் இருக்கின்றன. இவைகளில் எதுவுமே தமிழில் வருவதில்லை. வருவதும், மொழிபெயர்ப்புகளாகவே இருக்கின்றன. இவற்றுக்கான ஊற்றுத்தளம் இங்கே இல்லை. முயல்பவர்களுக்கு பிரசுரிக்க தளம் இல்லை. படிக்கும் வாசகர் வட்டம் இல்லை. ஐந்து கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் இதற்கு ஆயிரம் பிரதிகள் கூட அச்சடித்து விற்கும் பத்திரிகைகள் இல்லை

நீங்கள் வார்த்தை வாங்குவதற்கான காரணம் #1

கார்ட்டூன்: துக்கா
பாலபாரதி கட்டுரை அனுபவமாக விவரித்ததை எளிமையான அணுகக் கூடிய கருத்துப்படமாக்குகிறார்.

அரவக்கோனின் இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்: புத்தக விமர்சனம் – மோனிகா
சன் டிவி தயாரிக்கும் படத்தை, டாப் 10 இல் முதலிடம் கொடுத்து 25 வாரம் சுரேஷ் விமர்சிப்பார். ஆனால், எனி இந்தியன் வெளியீட்டை, எனி இந்தியன் வெளியீடே நிறைகுறைகளை முழுமையாக அலசுவது வரவேற்கத்தக்க ஆச்சரியம்!

யுகசந்தி – சுகா

மலையாளிகள் வாழ்க்கையிலிருந்து படம் எடுக்கிறார்கள். நமக்கெல்லாம் அந்த மாதிரியான உணர்வு எப்போது வரப்போகிறது என்றெல்லாம் புலம்பினேன். பொறுமையாக நான் சொல்வதைக் கேட்ட பாலு மகேந்திரா “நீ ஜேகேயோட ‘மௌனம் ஒரு பாஷை’ படித்ததில்லையா” என்று கேட்டார்.

சென்றவாட்டி சுகாவிற்கு சொன்ன அதே கருத்துதான் இந்தவாட்டியும்.

உயிர்சுழி – சுப்ரபாரதி மணியன்
பாலமுருகன் pretentious ஆன ஆக்கம் கொடுத்து வாசகனை டிம்பக்டூவுக்கு அனுப்பி வைத்ததற்கு நேர்மாறான அனுபவம். விறுவிறுப்பு, பதைபதைப்பு, இருண்மை என்று கவிதை போல் விரிந்தாலும் திகிலும் சுவையும் மீள்வாசிப்பிலும் தொடரும் சுழி.

வார்த்தை இதழை வெளியீட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை

சர்வாதிகாரத்தை விட கொடுமையானது ஜனநாயகம். (பலத்த கைதட்டு)… யாராவது அமெரிக்காகாரன் வந்து அடக்கினால்தான் சரியாக இருக்கும்…. இலக்கியவாதிகள் பொறுமையில்லாதவர்கள் அல்ல. அவர்களுக்கு எங்கே செல்லுமோ அங்கே அவர்கள் எல்லாம் செய்வார்கள். செல்லாத இடமும் அவர்களுக்குத் தெரியும்.

எதைப் பற்றியும் அல்லது இதுமாதிரியும் தெரிகிறது – வ. ஸ்ரீனிவாசன்

சலிப்புக்கு மாற்றாக அமைவது என வ.ஸ்ரீனிவாசனின் பத்தியையும் சொல்லலாம். குறுங்கட்டுரைகளைப்போலவே வணிக இதழில் இடமில்லாமல் சிற்றிதழாளர்களால் கவனிக்கப்படாமல் தேங்கிப்போன ஓரு எழுத்துத்தளம் இது. பத்தி என்பதன் சிதறுண்ட வடிவமும் மொழிவிளையாட்டுகளும் நகைச்சுவையும் …சரியான உதாரணம் ஸ்ரீனிவாசனின் கட்டுரை.

முதல் இதழில் கலக்கிவிடுவது எளிது. இரண்டாவது ஆட்டத்திலும் எதிர்பார்ப்பை திருப்திபடுத்தி ஜெமோ சொல்வது போல் தோனி ஆகியிருக்கிறார்.

நிழலின் குரல் – ஜெயந்தி சங்கர்
முந்தைய சிறுகதைகளை விட இதில் அனுபவம் மேலும் ஒன்றவைத்து கேள்விகளை தேக்கி உள்விவாதங்களை எழுப்புகிறது. ‘ஒவ்வொரு கதைக்கும் அதன் பௌதிக அளவைச் சாராத சந்தம்/கதி/லயம் இருக்கிறது‘ என்று சென்ற கட்டுரையில் வ.ஸ்ரீ சொல்லியது போல் அப்பாவின் பதில் அதிகப்பட்டு இருப்பதை தவிர்த்து தணிக்கை செய்து இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

அமெரிக்கா என்றொரு அற்புதம் (ஒரு தேர்தல், ஒரு மதத்தலைவர், ஒரு திரைப்படம்) – கோபால் ராஜாராம்

முன்தொக்காக வந்திருந்த லூயிஸ் கரோல் குறிப்பு பிடித்திருந்தது. மற்றபடிக்கு தமிழக டம்மீஸ்களுக்கான அமெரிக்க ‘க.பெ.’

ஏ.ஜே.பி. தைலர் எழுதிய மார்க்சியம் ஒரு மீள்நோக்கு – தமிழில்: மணி வேலுப்பிள்ளை
ஜார்ஜ் புஷ் பேசினால் என்ன சுவைக்கப் போகிறது என்று அசிரத்தை கலந்த அலட்சியத்துடன் ஆரம்பித்தாலோ என்னவோ ஆச்சரியப்பட வைக்கிறது.

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் – பி.ச. குப்புசாமி

பாடலில் இருந்த சொல்லின்பம் அத்தகையது போலும். இவ்வாறுதான் வாழ்க்கையைப் பற்றி அர்த்தப்படுத்திக் கொள்ள நேர்கிறது! இப்படியெல்லாம் கூட அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது என்றால், அப்புரம் வாழ்ந்துதான் என்ன பயன்?

கலாம் முதல் ஒபாமா வரை தாரக மந்திரமாக்கும் நம்பிக்கை முதல் உறுதிமொழி வரை ஊக்கமருந்தாக்கும் வித்தையை வித்தையில்லாமல் உள்ளது உள்ளபடி பகிரும் பாங்கு.

One response to “வார்த்தை :: மே மாதம் – சிவிறுதல்

  1. பிங்குபாக்: State of Tamil Blogs & 2009 Predictions « Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.