சமீபத்தில் படிக்க வேண்டும் என்று நூலகத்தில் முன்பதிவு செய்துவைத்துக் கொண்ட புத்தகங்களின் பட்டியல்:
1. Nudge: Improving Decisions About Health, Wealth, and Happiness: Richard H. Thaler, Cass R. Sunstein
- மக்கள் எடுக்கும் முடிவுகளில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்துவது எவ்வாறு?
- மோசமான தேர்ந்தெடுப்புக்கு வழிவகுக்காமல், வாழ்க்கையில் வெற்றியும் சமூகத்திற்கு நன்மையும் கிடைக்கும் வழி செல்ல வைப்பது எப்படி?
தொடர்புள்ள வலையகம்: Nudge
2. McMafia: A Journey Through the Global Criminal Underworld: Misha Glenny
- சிரியானா, ட்ராஃபிக் மாதிரி உலகத்தில் நடக்கும் அக்கிரமங்களை அறிந்து கொள்ள வேண்டுமா?
- இஸ்ரேலின் விலைமாதுக்கள் முதல் 93 மும்பை குண்டுவெடிப்புகள் வரை உள்ள தொடுப்பு
தொடர்புள்ள பேட்டி: McMafia: A Journey Through the Global Criminal Underworld by Misha Glenny – Carnegie Endowment for International Peace
3. அ) When Men Become Gods: Mormon Polygamist Warren Jeffs, His Cult of Fear, and the Women Who Fought Back: Stephen Singular
ஆ) Stolen Innocence: My Story of Growing Up in a Polygamous Sect, Becoming a Teenage Bride, and Breaking Free of Warren Jeffs: Elissa Wall, Lisa Pulitzer
இ) Escape: Carolyn Jessop, Laura Palmer
- அமெரிக்காவில் பைபிள் பெல்ட் என்றழைக்கப்படும் டெக்சாஸ் சார்ந்த சுற்றுப்புறங்களில் இயங்கும் Fundamentalist Church of Latter Day Saints (FLDS) குறித்த பின்னணி
- கடவுள் நம்பிக்கைகளுக்கும் சட்டத்திற்கும் இடையே உள்ள உறவு
- மனித உரிமைகளும் மதங்களும் எங்கு உரசுகின்றன?
4. Worst-Case Scenarios: Cass R. Sunstein
- எம்பி3 பேட்டி: Sunstein on Worst-case Scenarios, EconTalk Permanent Podcast Link: Library of Economics and Liberty
- உலக வெம்மையாக்கலும் தீவிரவாத ஆபத்துக்களும் – எவ்வாறு ஒப்பிடலாம்?
- இந்தியா & ஆப்பிரிக்கா: சுனாமி, ஏவியன் பறவை காய்ச்சல், ஒசோன் படலம் – பேராபத்து களங்கள்
5. அ) Freedom From Oil: How the Next President Can End the United States’ Oil Addiction: David Sandalow
ஆ) Over a Barrel: The Costs of U.S. Foreign Oil Dependence: John Duffield
- உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளம் இருந்தும் அமெரிக்கா ஏன் எண்ணெய் மேலே மட்டும் சார்ந்திருக்கிறது?
- ஒவ்வொரு நாளும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எண்ணெய் இறக்குமதியாகிறது. இது அதிகாரபூர்வ தகவல். இதில் வெளியே தெரியாமல் மறைந்திருக்கும் செலவினங்கள் எவ்வளவு?
- சுருக்கமான செயல்திட்டம்: How the Next President Can End Our Oil Addiction
- பாட்காஸ்ட் பேட்டி: Freedom from Oil: How the Next President Can End the United States’ Oil Addiction – Brookings Institution
6. The Really Inconvenient Truths: Seven Environmental Catastrophes Liberals Don’t Want You to Know About–Because They Helped Cause Them: Iain Murray
- ஆல் கோர் நோபல் பரிசு பேசுவதற்காக சுற்றுச்சூழல் குறித்து ஏட்டுச்சுரைக்காயாக கவலைப்படுகிறாரா?
- பூச்சிக்கொல்லிகளை தடை செய்ததும் மலேரியா பரவியதும்
- உணவுத் தட்டுப்பாடு x பயிர்களில் தயாரகும் எண்ணெய் – சாப்பாட்டு பஞ்சம்
7. Invisible Nation: How the Kurds’ Quest for Statehood Is Shaping Iraq and the Middle East: Quil Lawrence
- குர்திஸ்தான் வலுப்பெறுவதை மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளை துருக்கி எந்நாளும் விரும்பாது.
- இரானுக்கும் சிரியாவுக்கும் கூட குர்து பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தின் மீது நிறையவே பாசம் இருக்கிறது. இப்படியாகப் பட்ட சந்தர்ப்பத்தில் உள்ள அலசல்
8. அ) Free Ride: John McCain and the Media: David Brock, Paul Waldman
ஆ) Amazon.com: The Real McCain: Why Conservatives Don’t Trust Him and Why Independents Shouldn’t: Cliff Schecter
- அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் ஜான் மெகெயின் குறித்த பின்னணித் தகவல்கள்
- மெக்கெயின் – இடதுசாரியா? மிதவாத வலதுசாரியா? கைதேர்ந்த அரசியல்வாதியாக எவ்வாறு ‘வெளிப்படையானவர்’ போல் வேஷம் கட்டுகிறார்?
9. An Unbroken Agony: Haiti, From Revolution to the Kidnapping of a President: Randall Robinson
- அமெரிக்காவின் அருகில் இருந்தாலும் ஆப்பிரிக்காவை விட பரம ஏழையாக இருக்கும் ஹைதி நாட்டின் மேலோட்டமான சரித்திரம்
- சமீபத்தில் நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதி ழான் – பெர்ட்ரான்ட் ஆர்ட்டிசைட் குறித்த டைரிப் பதிவுகள்
10. Stuffed and Starved: The Hidden Battle for the World Food System: Raj Patel
- நவோமி க்ளெய்ன், சாய்னாத் என்று டிஸாஸ்டர் கேபிடலிசம் படிப்பவர்களுக்கு, மேலும் புரிதல்கள் கிடைக்கும்
- அமெரிக்காவில் உழவர்களுக்கு கிடைக்கும் மானியங்கள், வரிவிலக்குகள் எவ்வாறு உலக சந்தையை பாதிக்கிறது?
- மொத்த உணவு வர்த்தகத்திற்கு பல்லாயிரக் கணக்கான தயாரிப்பாளர்களும் கொள்முதலாளர்களும் இருந்தாலும் ஒரு கைக்குள் அடங்கும் இடைத்தரகர்கள்தான் விலையை நிர்ணயிக்கிறார்கள்
11. Inside the Jihad: My Life with Al Qaeda: Omar Nasiri
- அல் க்வெய்தா, ஜிஹாத் எல்லாம் குழந்தைகளும் அறிந்த பெயராக ஆகுமுன் உள்ளே இருந்து உளவாளியான கதை
12. Snoop: What Your Stuff Says About You: Sam Gosling
- அலுவலில் உங்கள் இடம் எப்படி இருக்கிறது? என்ன பொருட்கள் வைத்திருக்கிறீர்கள்? என்பதை வைத்து வேலைக்கு ஏற்றவரா என்று அலசலாம்
- காதலிப்பவரின் உண்மையான குணாதிசயங்கள் என்ன என்று உளவியல் ரீதியாக அறிவது எவ்வாறு?
- வலைப்பதிவரின் எண்ணவோட்டங்கள் எப்படி என்பதை கேள்வி-பதில் போன்ற எளிய அலசல்களில், புறச்சூழலை ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்
13. The Fate of Africa: A History of Fifty Years of Independence: Martin Meredith
- ஆப்பிரிக்கா ஏன் ஏழை நாடாகவே இருக்கிறது?
- ஜிம்பாப்வே போன்றோர் ஐம்பது கோடி மதிப்புள்ள நாணயம் அச்சிட்டாலும் இரண்டு அமெரிக்க டாலருக்கு ஒப்பாகுமளவு பணவீக்கம் எப்படி அரங்கேறுகிறது?
14. Maxims and Reflections (Penguin Classics): Johann Wolfgang von Goethe
- அந்தக் காலத்தில் ட்விட்டர் இல்லை. அதற்காக சும்மா விட்டுவிட முடியுமா? சில எடுத்துக்காட்டுகள்:
- என்ன வார்த்தை சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதம் நிழலாடுவது இயல்பு
- பாராட்டிப் பேசுவதும் வெட்டிப் பேசுவதும் சுவாரசியமான உரையாடலுக்கு வசதிப்படாது
- உங்களைப் பார்த்து மற்றவர் சிரித்தால் நேர்பட இயங்குகிறீர்கள் என்று அர்த்தம்
- மேலும்: Johann Wolfgang von Goethe – Wikiquote
15. Weird History 101: John Richard Stephens
- சரித்திரத்தை ரொம்ப சேரியமாய் எடுத்துக் கொண்டு வாசித்தறிவது இயல்பு. பிரச்சினை செய்து பரபரப்புக்கு பதிவு போட விஷயம் தேடுவது வலை இயல்பு. இரண்டாவது பிரிவுக்கு ஏற்ற புத்தகம்
16. அ) The Translator: A Tribesman’s Memoir of Darfur: Daoud Hari
ஆ) They Poured Fire On Us From The Sky: The True Story of Three Lost Boys from Sudan: Alphonsion Deng, Benson Deng, Benjamin Ajak, Judy A. Bernstein
- சூடானில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிவரின் குறிப்புகள்
- தன் குடும்பம் கரையேற்றப்பட்ட பிறகும், பிறருக்காக மீண்டும் தாய்நாடு சென்று பணியாற்றிவரின் வரலாறு.
- தனி மனிதரால் என்ன செய்ய முடியும் என்பதற்கான விடை
17. Aristotle and an Aardvark Go to Washington: Thomas Cathcart, Daniel Klein
- அரசியல்வாதி பேச்சை கனகாரியமாக எடுத்து ஆராய்ந்து, ஓட்டைகளை நகைச்சுவையாக கட்சிப் பாகுபாடின்றி கோர்க்கும் புத்தகம்.
- இவர்களின் முந்தைய புத்தகத்தின் ரசிகன் என்பதால், எமாற்றி இருக்க மாட்டார்கள்.
18. The Logic of Life: The Rational Economics of an Irrational World: Tim Harford
- ஆணுறை அணியாமல் விலைமாதுக்கள் ஏன் உறவு கொள்கிறார்கள்?
- கால்பந்தாட்ட பெனால்டி கிக்கில் எந்தப் பக்கம் அடிப்பது என்று பெக்கம் எப்படி முடிவெடுகிறார்?
- திருமணத்திற்கும் விவாகரத்திற்கும் இடையே உள்ள பொருளாதார அடிப்படை, கணக்கு என்ன?
19. The Year of Living Biblically: One Man’s Humble Quest to Follow the Bible as Literally as Possible: A. J. Jacobs
- பைபிளில் சொல்வது போல் பரீட்சார்த்தமாக வாழ்ந்த காலத்தின் அனுபவங்கள்
- பொய் சொல்லக்கூடாது, வதந்தி பேசக்கூடாது, அடுத்தவரின் பொருள் மேல் கண்வைக்க கூடாது என்று கர்ம சிரத்தையாக கடைபிடிக்க முடியுமா?
- வாரத்தில் ஒரு நாள் வேலை பார்க்காமல் (அதாவது வலைப்பதியாமல்) வெறுமனே இருக்க முடியுமா?
20. How to Read Literature Like a Professor: Thomas C. Foster
- இலக்கியத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதற்கு கோனார் நோட்ஸோ க்ளிஃப் உரையோ உங்களுக்குத் தேவையா?
- எந்த உவமை வந்தாலும், குறிப்பால் உணர்த்தினாலும் தட்டையாக உணராமல், உள்ளே உறைந்திருக்கும் பொருளைப் (உள்குத்து) புரிந்து கொள்வது எப்படி?











அம்மாடி .. !!
பயனத்திற்கு ஆப்பிரிக்க புத்தகத்தை கையில் எடுத்திருக்கிறேன்.
நெட்ஃப்ளிக்சில் படம் பார்க்காமல் வைத்திருப்பது போல் இதுவும் தூங்கும் விழைப்பட்டியல் 🙂
பாஸ்டன் பாலாவிடம் கேள்வி :
நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
பதில் :கணினி,,இணையம்.,புத்தகம்-
மூன்றிலும் ஒரே நேரத்தில்
கேள்வி : அப்படியானால் நீங்கள் ஒரு worm ஆ?
பதில்: ஒம் 🙂