தேர்ந்தெடுக்கப்பட்ட டெலிகேட்ஸ் ஆதரவு ஒபாமாவிற்கு இருந்தாலும் சூப்பர் டெலிகேட்ஸ் ஆதரவு மூலம் ஹில்லரி, ஒபாமாவின் வெற்றியை தடுக்க ஒரு வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை இருந்தது. ஆனால் வடகரோலினா, இண்டியானா தேர்தலுக்கு பிறகு ஒபாமா பக்கம் சூப்பர் டெலிகேஸ் சாய தொடங்கியுள்ளனர்.
ஹில்லரி சூப்பர் டெலிகேட்ஸ் ஆதரவில் முன்னிலை வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றைய நிலவரப்படி இந்த ஆதரவை ஒபாமா சமன் செய்துள்ளார். இருவருக்கும் இப்பொழுது 273 சூப்பர் டெலிகேட்ஸ் ஆதரவு தற்பொழுது உள்ளது. ஒபாமாவிற்கு இன்னும் ஆதரவு அதிகரிக்க கூடும்.
இதனால் ஹில்லரி போட்டியில் இருந்து விலக வேண்டும் என்னும் கோரிக்கை இன்னும் வலுவடையும். ஏற்கனவே ஹில்லரி அத்தகைய ஒரு நெருக்கடியை எதிர்கொண்டே வருகிறார்.

சி.என்.என் செய்தி : Obama, Clinton tied in race for superdelegates











Template & layout of your blog are beautiful!
முதலில் ஒபாமா இனிச்சரி என்று நினைத்தேன். ஆயினும் மீண்டு வந்திருக்கின்றார்… தொடர்ந்து வெற்றியீட்ட வாழ்த்துக்கள்!