தோல்வியடைய முயன்று வெற்றி பெற்றால், தோல்வியா? வெற்றியா??


பொன்ஸ், பத்ரி, பாரா, சுப்புடு, ஜெமோ போன்ற வலைப்பதிவுகள், பல முன்னணி திரட்டிகளில் காணக் கிடைப்பதில்லை. திரட்டிகளில் இருக்கும் பதிவுகள் என்பது ஒரு அணித்தொகுப்பு என்று வைத்துக் கொண்டால், இந்த மாதிரி இணைக்காத பதிவுகள் மற்றொரு அணிக்கோர்ப்பா?

பெர்ட்ரண்ட் ரஸல் கேட்டிருக்கிறார்.

ஒரு ஊரில் ஒரு நாவிதன் இருக்கிறார். அனவருக்கும் இவர் மட்டும்தான் சவரம் செய்கிறார். சொந்தமாக மழிக்காத எல்லாருக்கும் சேர்த்து, இவர் ஒருவர்தான் இருக்கிறார். அப்படியானால் நாவிதன் தனக்குத்தானே சவரம் செய்வாரா?

ஆம், என்றால் நாவிதன்தானே இவருக்கு சவரம் பார்க்க வேண்டும்? இல்லை என்றால், சொந்தமாகத்தானே சவரம் செய்து கொள்கிறார்.

இது அம்பட்டமுரண்படு மெய்மை.

இதன் மேற்சென்று க்ரெலிங்கும் நெல்சனும் விரிவான முரணுரையை சொல்கிறார்கள்.

வார்த்தைகள் இருவகைப்படும். Autological & Heterological – முறையே, காரணப்பெயர் & இடுகுறிப்பெயர் போல் வைத்துக் கொள்ளலாம்.

முதலில் autological – வார்த்தையின் பொருளுக்கு ஏற்றபடு அமைந்திருக்கும். ஆங்கில உதாரணமாக”seventeen-lettered” (மொத்தம் பதினேழு எழுத்துகள் இருக்கிறது); சில பொருத்தமான தமிழ் எடுத்துக்காட்டுகள்:

  • குட்டி (சிக் + நச்)
  • இடக்கு மடக்கு (சொல்வதற்குள் பொருட்குற்றம் ஏற்படலாம்)

இந்த மாதிரி பொருளுக்கும் வார்த்தை ஒலிக்கும் சம்பந்தமில்லாதவை Heterological. ஆங்கிலத்தில் monosyllabic (எத்தனை உயிரெழுத்து சப்தங்கள் நிறைந்த வார்த்தை… அதைப் போய்…)
தமிழில்…

  • நீண்ட
  • தானியம் (ஆட்டோவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்)
  • முழுமையற்றது

இப்பொழுது செந்தில், கவுண்டமணியிடம் கேள்வி கேட்கும் சமயம்:

இடுகுறி பெயர் என்பது காரணப்பெயரா அல்லது இடுகுறிப் பெயரா?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.