Monthly Archives: மார்ச் 2008

பழைய நெனப்புதான்… பேராண்டீ

உங்களுக்கு அடக்கம் தேவை… ஆணவம் கூடாது என்கிறாரே முதல்வர்?

குமுதத்தில் வந்த விஜயகாந்த் பேட்டியில்: அடடா… அடக்கத்தைப்பற்றி, அரசியல் நாகரிகம் பற்றி இவர் பேசலாமா? அந்தக் காலத்தில் இந்த ‘அடக்கமான தலைவர்’ எவ்வளவு பேசியிருக்கார் தெரியுமா? காமராஜரையும், ராஜாஜியையும் இவர் பேசாத பேச்சா? எல்லாமே பேப்பரில் இருக்கு. மதுரையில் இந்திராகாந்தியை கறுப்புக் கொடி காட்டி அடித்தவர்கள்தானே… இவர்கள்! நான் அந்த பயங்கரத்தை கண்ணால பார்த்து ஓடினவன். அப்போ எனக்குச் சின்ன வயசு.

சட்டசபையில் திராவிடநாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பினார் காங்கிரஸின் அனந்தநாயகி. இவர் உடனே எழுந்து, ‘நாடாவைக் கழற்றி பாவாடையை தூக்கிப் பார். அங்கே தெரியும்’ என்றார். சட்டசபை அல்லோலகல்லோலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான் அப்படி சொன்னதாக அப்புறம் வியாக்யானம் தந்தார். கச்சத்தீவுப் பற்றி எனக்குத் தெரியாது என்கிறாரே…. சட்டசபையில் அனந்தநாயகி கேள்விக்கு இவர் பதில் சொன்னதே ஞாபகம் இருக்கே?

காமராஜர்… காமராஜர் என்று இப்போது முழங்குகிறாரே… விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரை தோற்கடிக்கவேண்டும் என்று ஒரே மூச்சில் நின்றவர்தான் இவர். அண்ணா ‘வேண்டாம்’ என்றதையும் கேட்கவில்லை. இவர் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய்க் கொடுத்தார் — திருட்டுத்தனமாக! யாரிடமிருந்து அடக்கத்தை கற்றுக் கொள்வது? என்னை எறும்பு என்றார். ஆமை என்றார். இப்போது சந்துல சிந்து பாடறார் என்கிறார். ஆணவத்தில் பேசுவது யார்?

தொடர்புள்ள மன்னிப்பு: IdlyVadai – இட்லிவடை: தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை

முன்று மாநிலங்களில் ஹில்லரி வெற்றி

இன்றைய ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தலில் ஹில்லரி மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். ஒபாமா ஒரு மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார். மிக முக்கிய மாநிலங்களான ஓகாயோ, டெக்சாஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் ஹில்லரி வெற்றி பெற்றுள்ளார். இந்த இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால் தான் இந்த போட்டியில் ஹில்லரி தொடர முடியும் என்ற நிலை இருந்தது.

ஹில்லரியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்

  • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒபாமா நாப்டா – NAFTA குறித்த சில சர்ச்சைகளில் சிக்கினார். இது ஒபாமாவின் பொருளாதார நிலைப்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி இருந்தது.
  • ஓகாயோ போன்ற தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் கிளிண்டனுக்கு செல்வாக்கு அதிகம். இம் மாநிலங்களில் இருக்கும் தொழிற்சாலைகள் சீனா போன்ற நாடுகளுக்கு செல்வது முக்கிய தேர்தல் பிரச்சனையாக இருந்தது. ஹில்லரியின் பொருளாதார அனுபவத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் இந்த வெற்றியை பார்க்க முடியும்.
  • லேட்டினோ பிரிவினரின் ஆதரவு
  • பெரிய மாநிலங்களில் பெரும்பாலும் ஹில்லரியே வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹில்லரியின் வெற்றி ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும் என்பதை தெளிவாக்குகிறது. போட்டியின் போக்கு ஒபாமா சார்பாக இருந்த நிலையில் இருந்து மாற்றம் அடையுமா என்ற கேள்வியும் எழுகிறது. மெக்கெயினின் போர் அனுபவத்திற்கு எதிராக ஹில்லரியின் பொருளாதார அனுபவம் ஒரு வலுவான வாதமாக இருக்கும் என ஜனநாயக கட்சியினர் நினைக்க கூடும்.

ஒபாமா இந்த தேர்தலில் இது வரை பெரிய அளவிலான “கொள்கை குழப்பங்கள்” குறித்த தாக்குதல்களை எதிர்கொண்டதில்லை. எனவே நாப்டா தொடர்பான ஹில்லரியின் தாக்குதலுக்கு ஒபாமாவால் சரியான பதிலடியை கொடுக்க முடியவில்லை. ஒபாமா தன்னுடைய பிரச்சார உத்திகளை மாற்ற வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.

குடியரசுக் கட்சியின் மெக்கெயின் வெற்றி பெற்றுள்ளார். தன்னுடைய தேர்தல் உத்திகள் எப்படி இருக்கும் என்பதையும் இன்றைய பேச்சில் தெளிவுபடுத்தியுள்ளார்

– ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறாது
– பொருளாதாரம் உலகமயமாக்கல் பாதையில் தான் நகரும். எந்த மாற்றமும் இருக்காது

என்பன அவரது கொள்கையில் முக்கிய அம்சங்கள். இது புஷ் ஆட்சியின் தொடர்ச்சி என ஜனநாயக கட்சியினர் பிரச்சாரம் செய்ய முடியும். ஆனால் முதலில் ஜனநாயகக் கட்சியினர் தங்கள் வேட்பாளரை முடிவு செய்தாக வேண்டும். ஒபாமா-ஹில்லரி இடையேயான போட்டி தொடர்ந்து நீடித்தால் மெக்கெயினுக்கு சாதகமாக மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது

ஓஹையொ நிலவரம்: ஹில்லரி கிளிண்டன் வெற்றி

Clinton Wins Democratic Primary in Ohio, networks say.

ஹில்லரி Vs ஒபாமா : யார் சிறந்தவர் ?

அமெரிக்க முன்னோட்ட தேர்தல் (Primary) கிட்டதட்ட இறுதி நிலைக்கு வந்துள்ளது. நாளை 4 முக்கிய மாநிலங்களில் நடக்கும் தேர்தல் குடியரசுக் கட்சியில் மெக்கெயினை குடியரசுக் கட்சியின் வேட்பாளாராக தேர்வு செய்யும். ஹக்கபீ தொடர்ந்து போட்டியில் இருந்தாலும், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. எனவே நாளை மெக்கெயின் 1,191 என்ற இலக்கினை பெறக்கூடும் என்றே தெரிகிறது.

நாளை அனைவரின் கவனமும் ஜனநாயக் கட்சியின் மீது தான் இருக்கும். ஒபாமாவா ? ஹில்லரியா என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. ஒபாமா டெக்சாஸ், ஒகாயோ ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றால், ஹில்லரி போட்டியில் இருந்த விலகக் கூடும். ஹில்லரி வெற்றி பெற்றாலோ, அல்லது இருவரும் சரிசமமான வெற்றியை பெற்றாலோ, இந்த போட்டி ஆகஸ்ட் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஜனநாயக கட்சியில் யார் வெற்றி பெற்றால் நல்லது என்ற கேள்விக்கு மிகச் சூடான விவாதம் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு ஊடகங்களில் நடந்து வருகிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களான ஹில்லரி, ஒபாமா ஆகிய இருவருமே மிகச் சிறந்த வேட்பாளர்கள். இந்த இருவரில் யார் சிறந்தவர் என்பதை தேர்ந்தெடுப்பது சற்று கடினமாகவே உள்ளது. இந்த இருவரில் சிறந்தவர் யார் என்ற கேள்வி, எனக்கும் உண்டு. நான் அமெரிக்காவில் வாக்களிக்கும் உரிமை உள்ளவன் அல்ல. என்றாலும் உலகின் மிக முக்கியமான ஒரு நாட்டின் தேர்தல், பல நாடுகளின் மீது கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற ஒரு நாட்டின் தலைமை எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதிலே எனக்கு ஆர்வம் உண்டு. ஒரு பார்வையாளனாக நான் கவனித்தவற்றை பதிவு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

மேலும் வாசிக்க  – http://blog.tamilsasi.com/2008/03/us-elections-hillary-obama.html

குடியரசு கட்சி அதிகாரப்பூர்வமான வேட்பாளர் ஜான் மெக்கைன்

ஜனநாயக கட்சி: 

 

ரோட் ஐலாண்ட் (Rhode Island):
  ஹில்லரி கிளிண்டன் வெற்றி


டெக்ஸாஸ் ப்ரைமரி
/ ஓஹையொ நிலவரம்: ஓபாமா கிளிண்டன்  இழு பறி

ஓஹையொ நிலவரம் ஜான் மெக்கைன் வெற்றி/ஓபாமா – கிளிண்டன் இழு பறி

ஓஹையொ நிலவரம் ஜான் மெக்கைன் வெற்றி (CNN’s Projection)

குடியரசு கட்சி அதிகாரப்பூர்வமான வேட்பாளர்  ஜான் மெக்கைன்??

 

ஓஹையொ நிலவரம்:  ஜான் மெக்கைன் வெற்றி (CNN’s Projection)

ஜனநாயக கட்சி:  ஓபாமா கிளிண்டன்  இழு பறி

டெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு வேளை ஹில்லரி கிளிண்டன் குடியரசு கட்சியினரால் வெற்றி பெறக்கூடும்?

டெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு வேளை ஹில்லரி கிளிண்டன் குடியரசு கட்சியினரால் வெற்றி பெறக்கூடும்?

ரஷ் லிம்பாக்:( தீவிர வலது சாரிConservative Radio Host): உங்கள் வாக்கு கிளிண்டன்டனுக்கே! என்ன காரணம்? கிளிக்குங்கள்

 

http://www.middletownjournal.com/hp/content/oh/story/news/local/2008/03/04/mj030408switchweb.html

 

வெர்மான்ட் (Vermont) ஓபாமா தொடர் வெற்றி (CNN’s Projection)

வெர்மான்ட் (Vermont) ஜான் மெக்கைன் வெற்றி (CNN’s Projection)

வெர்மான்ட் (Vermont) ஜான் மெக்கைன் வெற்றி (CNN’s Projection)

நீயும் நானுமா? – விடாக்கண்டர் ஹில்லரியும் கொடாக்கண்டர் ஒபாமாவும்

Obama Clinton Metro News Paper Comprison Numbers

நன்றி: Read metro: – Analysis: Decisive Moment for Democrats?


தொடர்புள்ள பத்திகள், பதிவுகள்:1. The people don’t want this primary to end, and that’s a rejection of Obama… | Buckeye State Blog – ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரை இன்றோடு அறியமுடியாது என்கிறார். ஒஹாயோவின் சிறப்பு வலைப்பதிவில் சுவாரசியமான மறுமொழிகளும் படிக்க வேண்டிய பதிவாக்குகின்றது.

2. For Democrats, a Pivotal Night, but in Which Direction? – New York Times: தற்போதைய நிலையில் ஏப்ரல் 22 வரை ஹில்லரி க்ளின்டன் தாக்குப்பிடிப்பார் என்றே எண்ணுகிறேன். ஓரளவிற்கு இது ஜனநாயகக் கட்சிக்கு நல்ல விஷயம். சென்ற தேர்தலில் வெகு சீக்கிரமே ஜான் கெர்ரி முடிவானது, அவருக்கு சாதகமான ஒன்றாக அமையவில்லை. இன்றைய தேதியில் ‘வெர்மான்ட்’ மாகாணம் தவிர வேறு எதுவுமே ஒபாமாவுக்கு கிடைக்காது போல் படுகிறது.

3. Surveying Ohio’s Democratic landscape – Los Angeles Times: “Geography, a popular governor and big-city mayors hold the keys to winning the primary.” – உள்கட்சி அரசியலைப் பார்த்தால் தமிழகக் கூட்டணியே எவ்வளவோ தேவலாம் போல் தோன்றுகிறது.

4. Drift away from Clinton frustrates many women – Los Angeles Times: “As they see her chances slipping, some feel old wounds: An older, more experienced woman is pushed aside to make way for a younger male colleague.” – தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘கைக்கெட்டியது… வாய்க்கு எட்டவில்லை’; தொடர்பான தமிழ் சசியின் இடுகை: சசியின் டைரி: ஹில்லரி Vs ஒபாமா

5. In ’08 Politics, Rhode Island Defies Its Size – New York Times: கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது ஸைசு சின்னதாக இருந்தாலும் மகாத்மியம் பெரிதாக வாங்கிக் கொள்ளும் மாகாணம்.