எப்பொழுது கருத்து சொல்லலாம்? பார்வை ஒன்றே போதுமே


அசல் & நன்றி: தினமணிக் கதிர்

ரயில் பெட்டியின் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தான் அந்த இளைஞன். ரயில் புறப்பட்டதும் “அப்பா அப்பா மரமெல்லாம் பின்னாடி போகுதுப்பா” என்று பரபரப்பாய் ஆச்சர்யப்பட்டான். அவனருகே அமர்ந்திருந்த அவனுடைய தந்தையும் அவனுடைய ஆச்சர்யத்தை தலையசைத்து ரசித்தார்.

அதே பெட்டியில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்களுக்கு இது எரிச்சலூட்டியது. இந்த வயதில் ஓர் இளைஞனுக்கு இதில் எல்லாம் ஆச்சர்யமா என்று இருந்தது. சிறிது நேரத்தில் மழை பெய்தது. “அப்பா… அப்பா மழை பெய்கிறது” என்றான் இளைஞன்.

கல்லூரி மாணவன் ஒருவன் பொறுமை இழந்துபோய், “இந்த வயதில் இப்படியெல்லாமா ஆச்சர்யப்படுவார்கள்” என்றான்.

அந்த இளைஞனின் தந்தை “மன்னிக்கவும். பிறந்ததிலிருந்து இவனுக்குக் கண்பார்வை இல்லாமல் இருந்தது. இன்றுதான் பார்வை கிடைத்து மருத்துவமனையில் இருந்து ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

நீதி: அவசரப்பட்டு அபிப்ராயங்கள் சொல்லக்கூடாது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.