பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை


ஓல்ட் இஸ் கோல்ட்… புதிதாக சேர்க்கப்பட்ட குறிச்சொற்களுடன்

ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது.

எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து “ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு!” என்று கத்தியது.

கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார்.

இப்போ குருவி, “என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்” என்று கூவியது.

வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார்.

குருவி விடாமல், “என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்”, என்று தொடர்ந்தது.

5 responses to “பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை

  1. எனக்கு recursion மீது பயங்கர லவ்ஸ் (ஆமா அதுக்கு தமிழ்ல பெயர் என்ன). எனக்கு பிடித்த ரிகர்ஸிவ் வரிகள் – “தூங்கும் தூக்கம் கனவா”

  2. Recursive-க்கு எது தமிழ்ப்பதம் என்று தெரியவில்லை. சுழற்சி என்றால் பல அர்த்தங்கள் கொண்டிருக்கிறது. Rotation, recycling… தமிழ் உலகம்-யாஹு குழுமத்தில் விசாரித்து பார்க்கலாம்.

  3. Recursion : சுழல்
    Recursive : சுழல்நிலை
    Recursive Procedure : சுழல் செயல்முறை
    Recursive Subroutine : சுழல் துணைநிரல்கூறு
    சொல்வது நான் இல்லை… http://www.tcwords.com/

  4. கதை புரியுது,ஆனால் அதை இப்பொ எதுக்குப் போட்டிங்கங்கறதுதான புரியல்ல, தமிழச்சியக்காகிட்ட
    கேட்டா சொல்வாங்களா 🙂

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.