ஏற்ற இறக்கங்களும், இழுபறிகளும் – சுந்தரேஷ் (தென்றல்)


அமெரிக்க அதிபர் தேர்தல் 2008 இருந்து…

பந்தயத்தில் கடைசி நிலையில் தொடங்கி, பிரசாரத்துக்குக் கூடப் போதுமான அளவு பணம் சேர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு, ரிபப்ளிகன் கட்சிக்காரர்கள் பலராலேயே ‘கன்சர்வேட்டிவ் மதிப்புகளைக் காக்க இவர் சரியான ஆள் அல்ல’ என்று விமர்சிக்கப் பட்ட நிலையில் இருந்தவர் ஜான் மெக்கெய்ன். ஆனால், படிப்படியாகக் கடுமையாகப் போராடி சில சாதுர்யமான அரசியல் தந்திர நடவடிக்கைகளால் முன்னணி நிலைக்கு வந்திருக்கும் ஜான் மெக்கெய்னின் வெற்றி அவரது அயராத தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த பலன். வியட்நாம் போரின்போது சிறையில் பல ஆண்டுகள் அடைபட்டு வதைபட்ட காலத்தில் கைகொடுத்த அதே குணக்கூறுகள் பல ஆண்டுகளுக்குப்பின் வேறு போராட்டத்தில் அவருக்குக் கை கொடுத்திருக்கின்றன. இவர் அதிபரானால் அமெரிக்க வரலாற்றில் மிக முதிய அதிபர் (71 வயது) என்ற தகுதியைப் பெறுவார்.

:::

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்- இன்றைய நிலையில் புதிய அதிபர் முன்னுள்ள சோதனைகள் மிகக்கடுமையானவை. அமெரிக்கப்பொருளாதாரம், அராபிய எண்ணெய்ச் சார்பு, ஈராக் படைக்குறைப்பு, இஸ்லாமிய பயங்கரவாதம், உலக நாடு களிடையே அமெரிக்காவின் நம்பகத்தன்மை என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பல சிக்கல்களை நூல் பிரித்து நுணுக்க மாகத் தீர்க்க, கூர்மையான அரசியல் வித்தகம், அனைத்து தரப்பையும் அரவ ணைத்துபோகும் பாங்கு, தேவையென்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தயங்காத உறுதி என்று பல குணாம்சங்கள் கூடிய ஒரு தெளிவான தலைமை அவசியம்.

முழுவதும் வாசிக்க: சுந்தரேஷ்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.