பேஸ்டோர் என்பவர்: A pastor is an official position within a Protestant congregation, and related to the positions of priest or bishop within the Anglican, Roman Catholic and Orthodox Churches.. என்கிறது (உ)விக்கிபீடியா. இப்படியாக பேஸ்டோர் என்பவரை ஒரு மதகுரு, குறிப்பிட்டவொரு கிருத்துவ ஆலயத்தில் பொறுப்புள்ள பதவி வகிப்பவர் என பொருள் கொள்ளலாம். கிருத்துவ குடும்பங்களில் நல்ல நிகழ்வுகளோ, குழப்பங்களோ அல்லது துயரங்களோ ஏற்படும் போது தகுந்த அறிவுரைகள், ஆலோசனைகள் மற்றும் ஆறுதல்களை கொடுத்து அரவணைப்பவர் பேஸ்டோர் என்றும் செவி வழியால் கேட்டதுண்டு; கண்ணுற்று பார்த்ததுமுண்டு நன்றி: எல்லோருக்கும் பிடிக்கும் ரேமண்ட்(டு)! – Marie’s Moments – 1st clip.
பராக் ஹூ. ஒபாமாவும் அவருடைய மனைவி மிஷேலும் 20 வருடங்களாக ஷிகாகோ நகரின் ‘Trinity United Church of Christ’ – ல் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல 20 வருடங்கள். இங்கு 40 வருடங்களாக பேஸ்டோராக இருந்து வருபவர் ஜெரமையா (உ)ரைட். பெயரில் மட்டும்தான் பாதி ரைட், பேசுவதெல்லாம் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுகிற ரகம்தான். சொல்லப்படும் போதனை மொழியில் ஓரிரு கூரிய உண்மைகள் இருந்தும், ஜெரமையாவின் தயக்கமில்லாத குறுகிய இனவாதத்தால், வெறுப்புகளால் அவை அடிப்பட்டு போகின்றன.
ஜெரமையா #1
ஜெரமையா # 2
கடந்த சில நாட்களில் திறனலை(??) (am radio: AM works by varying the strength of the transmitted signal in relation to the information being sent) வலதுசாரி வானொலிகளில் ஜெரமையா பற்றியும், இத்தனை வருடங்களாக அவருடைய ஆலய குழுவிலிருக்கும் ஒபாமா பற்றியும் ஓயாமல் லட்சார்ச்சனைகள், 2ம் ஜாம பூஜை இன்னபிற என விடாமல் நடந்து கொண்டுள்ளன. உள்ளூர் வானொலியிலிருந்து, பெரியண்ணன் மகா ரஷ் வரை எல்லோருக்கும் வெறும் வாய்க்கு கிடைத்த பிரிட்டானியா பிசுகோத்து போட்ட மிக்சர் மாதிரி ஆகிவிட்டது திறனலை வானொலி. main stream media என்றழைக்கப்படும் இடதுசாரி நாலாம் எஸ்டேட்டிலோ இது குறித்து பேச்சே இல்லை- drive by media எனும் இடதுகோடி இடதுசாரிகளிடமும் இது குறித்து ஏதும் எதிர்பார்க்ககூட கூடாது.
ஆரம்பத்திலிருந்தே ஓபாமாவின் பேச்சுத்திறமையை தவிர்த்து, ஒரு வாக்காளன் என்ற முறையில் இதுவரை ஆழமாக அவரிடம் எதையும் என்னால் பார்க்க முடிந்ததில்லை. மஹூமூட் அகமடிநிஜாடுடனும், கிம்-ஜோங்-யில் லுடனும் நேரடி பேச்சுகளில் ஈடுபடுவேன் என அவர் உரைத்தது, பெரும் களேபரத்தை என்ன்னிடம் உண்டு பண்ணியிருந்தது. கேனடாவுடன் நேஃப்டா குறித்து அடித்த பல்டி வேறு அவநம்பிக்கையை அதிகரித்திருந்தது. இன்றைக்கு ஹஃப்ஃபிங்க்டன் போஸ்ட்டில் அவருடைய நேர்காணலை எடுத்து போட்டிருக்கிறார்கள். இனிமேல்தான் படித்து பார்க்க வேண்டும். ஜெரமையாவுக்கும் அவருக்கும் ஒரு தெளிவான வேறுபாடை ஓபாமாவால் காண்பிக்க முடியாமல் போனால், இனிமேல் அவருக்கு கீழிறங்கும் நிலைதான் எனத் தோன்றுகிறது.
2000 ல் டூப்யா க்கு வாக்களித்துவிட்டு ஏமாந்து போனதும், விருப்பமில்லாமல் 2004 ல் கெர்ரிக்கு வாக்களித்துவிட்டு மூளையில் மலச்சிக்கல் இருந்தது போல் உணர்ந்ததும் மறந்து போகவில்லை. என்னுடைய வாக்கு, வருங்காலத்தில் என் மகனின் எதிர்காலத்தையும் அவருடைய குழந்தைகள் என வரக்கூடிய சந்ததிகளை பாதிக்கும் நிகழ்வுக்கு கூட அடிகோலாகலாம் என என்னும் போது மனது அரண்டு போகிறது. இன்றைய தேதிக்கு அதிபராக கூடிய மூவரில், ஜான் மெக்கெய்ன் அவருடைய ஈராக் போர் குறித்த முடிவை மாற்றிக் கொண்டால், ஒரு வேளை நான் அவருக்கு வாக்களித்து அருள் பாலிக்கலாம்.. யார் கண்டார்.
என்னை பெரும் குழப்பத்தில் விட்டதற்கு நெப்ரேஸ்கா மாநில செனடர் Chuck Hagel – ஐ தான் குறைகூற வேண்டும். அவர் தேர்தலுக்கு நின்றிருந்து குடியரசு கட்சியின் வேட்பாளராக வர முடிந்திருந்தால் முடிவு செய்வது இலகுவாயிருக்கும்.











சக் ஹேஜல்… அதிகம் பின்னணி அறிந்ததில்லை. இன்னும் கொஞ்சம் விரிவாக அவரைக் குறித்து நேரம் கிடைக்கும் போது அறிமுகம் செய்து வையுங்களேன். (உப ஜனாதிபதிக்கு நிற்க வாய்ப்புண்டா?)
போஸ்டன் பாலாஜி:
என்னுடைய தனிப்பட்ட கொள்கைகளுக்கு சக் ஹேகில்
மிகவும் ஒத்து வருகிறார்.
இதனால் இவர் உசத்தி என்று அர்த்தமில்லை என்றாலும், நான் தொ.கா வில் பார்த்தவரையில், ஓரளவு படித்தவரை இவர் சொல்கின்ற கருத்துகளில் ஒரு தெளிவு, நம்பிக்கை பிறக்கிறது.
இவருடைய pro life கொள்கை கிட்டதட்ட (@!!!&^$) எனக்கு ஒத்து போகிறது.!?
தனிமனித சுதந்திரம் இவர் ஆட்சியின் கீழ் திரும்பவும் இருந்த நிலைக்கு திரும்பலாம் .
ஹேகிலின் fiscal conservative/social moderate கொள்கை என்னுடைய அவர் மீதான நம்பிக்கைக்கு ஆதாரமானது.
முன்னாள் ராணுவத்தினர் என்பதை வைத்து பீற்றிக் கொள்ளும் ரகமோ அல்லது அனுதாபங்களை தேடும் வகையினர் அல்ல இவர்.
**
சக் ஹேகில் பற்றி அறிந்து கொள்ள சில சுட்டிகள்:
திருவாளர்.ஹேகில்
டூப்யா
கூகிலில் மேலும் கிடைக்கும்.
பிங்குபாக்: ஒபாமாவின் ‘இனப்பிரச்சனை’ பேருரை « US President 08
பிங்குபாக்: ஒபாமாவின் ‘இனப்பிரச்சனை’ பேருரை « US President 08
Photograph of Bill Clinton and Rev. Wright Surfaces – The Caucus – Politics – New York Times Blog
The Campaign Spot on National Review Online: “Hillary’s Earlier Meeting With Jeremiah Wright”
YouTube – Fox News Special Report: Jeremiah Wright on Bill Clinton
Did Hillary sit next to Rev. Wright at prayer breakfast?
பிங்குபாக்: ‘வெள்ளை’ மனதும் வெள்ளை மனதும். « US President 08