கனவு காணுங்கள் – ஒபாமா


என்ன அப்துல் கலாம் மாதிரி ஒபாமா இறங்கிவிட்டார் என்று நினைக்வேண்டாம். அவர் சொன்னது ஹில்லாரியை நம்மை அல்ல. இவர்களின் சண்டை குழையடியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்தால் அடுத்த கட்ட சண்டைக்கு தயாராகலாம். அடுத்த கட்டத்தில் மெக்கெயினை சந்திக்க வேண்டும் அதில் கட்டாயம் தாவு தீருவது நிச்சயம். அனுபவமிக்க மெக்கெயினை கொஞ்சமாவது ஹில்லாரி சமாளிப்பார்.ஒபாமா தேறமாட்டார். அனுபவமில்லை அனுபவமில்லைன்னே ஒரங்கட்டிவிடுவார் மெக்கெயின். ஹில்லாரி முன்னுக்கு பின் முரணாக பேசிவருகிறார் அவரும் தனியாக நின்றால் உதை வாங்குவது நிச்சயம். இவர்கள் இருவரும் கடைசியில் ஒன்றாக ஜனாதிபதி உப- ஜனாதிபதி என்று (dream ticket) போட்டி போடலாம் என்றும் பேசி வருகிறார்கள். இதற்கு போனவாரம் ஹில்லாரி கொஞ்சம் நூல் விட்டு பார்த்தார். அதாவது ஹில்லாரி தலையாம் ஒபாமா வாலாம் நல்லாயிருக்கும் அப்படின்னு.’நீ கொஞ்சம் அவல் எடுத்துட்டு வா நான் கொஞ்சம் உமி எடுத்துட்டு வரேன் ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்’ அப்படிங்கற மாதிரி இல்லை. உதை வாங்குவது இந்தம்மா ஒபாமா வாலா இருக்கணுமாம். அதுக்கு தான் ஒபாமா இப்படி சொல்லி இருக்கார். யாரு பாத்து என்ன கேள்வி கேட்டே அப்படின்னு வாங்கு வாங்குன்னு வாங்கி இருக்கார். இங்கன போய் படிங்க.

One response to “கனவு காணுங்கள் – ஒபாமா

  1. —’நீ கொஞ்சம் அவல் எடுத்துட்டு வா நான் கொஞ்சம் உமி எடுத்துட்டு வரேன் ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்’ —

    அதானே 😀

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.