அமெரிக்காவில் வசந்த காலம் வந்து கொண்டிருக்கிறது…
எங்கும், {குறைந்த பட்சம் தெற்க்கே] பழுப்பு நிற புல்லும், இலைகளும் பச்சையாக மாறி விட்டது. முல்லையின் புது மொக்குகள் வந்து விட்டது… எங்கும் வசந்த கால தோற்ற்ங்கள்…
ஹில்லரியின் முகாமிலும் எங்கும் மகிழ்ச்சி. ஆம், டெக்ஸாஸின் வெற்றியும், ஓகையோவின் அபாரமான வெற்றியும், ஹில்லரிக்கு புது வாழ்வையும் வசந்ததையும் தந்து இருக்கிறது.. இந்த பெண்மணியை பார்க்கும் பொது மன உறுதி படைத்த மார்கரெட் தாட்செர் ஞாபகம் வருகிறார். ஸ்ப்ரிங்‘ல் “spring” போல எழும்பி வந்து விட்டார்!
பல மாதங்கள் முன்பு ஜனநாயக கட்சிக்கு யார் வேட்பாளர் என்று கேட்டால் பச்சை குழந்தையும் கிளிண்டன் என்று சொல்லும். குடியரசு கட்சி வேட்பாளர் யார் என்று தெரியாத நிலமை. பின்னர் ஓபாமா தொடர் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருக்க ஹில்லரி அணியில் சுனக்கம். ஓபாமா காற்றில் ஹில்லரி இருந்த இடம் தெரியவில்லை. குடியரசு கட்சியில் “மூட்டை” கட்டுவதர்க்கு தயாராக இருந்த மெக்கைன் இப்பொது அதிகார பூர்வமான வேட்பாளர். கிட்டத்தட்ட டெமாக்ரட் அணி ஓபாமாதான் தேர்வு என்று நம்ப அரம்பித்து இருந்தனர். உண்மையில் இந்த சமயத்தில் ஹில்லரி ப்ரைமரி தேர்தலில் இருந்து விலகிக் கொள்வது ஜனநாயக கட்சிக்கு நல்லது என்ற எண்ணம் பெரும்பாலான மக்களுக்கு உருவாகி இருந்திருந்தது. பெரும்பாலோர் ஒரு வேளை டெக்ஸாஸ், ஓகையோ தேர்தல்களுக்குப் பின் ஜனாதிபதி தேர்தலுக்கு ஹில்லரி முழுக்கு போடுவார் என்று இருக்க, நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் எதும் இல்லை அல்லவா? நிலமை தலை கீழாய் திடீரென மாறி விட்டது. இந்த பெண்மணியை பார்க்கோம்பொது மன உறுதி படைத்த மார்கரெட் தாட்செர் ஞாபகம் வருகிறார். ஸ்ப்ரிங்‘ல் “spiring” போல எழும்பி வந்து விட்டார்!
இதைத் தொடர்ந்து பென்சில்வேனியாவிலும் வெற்றி பெறக்கூடும். இதன் மூலம் அனைத்து பெரிய (ஓபாமாவின் சொந்த மாநிலமான இல்லினாய் தவிர) மாநிலஙகளிலும் பெரிய ஆதரவு பெற்றிருக்கிறார். ஓபாமா வென்ற மாநிலங்களில் பெரும்பாலும் குடியரசு கட்சியினரே வெற்றி பெருகின்றனர். “Battle Ground States” என்று கருதப்படும் Florida, Ohio, New Mexico, Arkansas எல்லாவற்றிலும் கூட ஹில்லரி வெற்றி. இப்பொது இவரது மதிப்பு கருத்து கணிப்பிலும் உயர்ந்து இருக்கிறது. இது தவிர ஓபாமா எப்படி தன் மீதான தாக்குதல்களை சமாளிப்பார் என்பது குறித்து ஜனநாயாக கட்சியிலும் கொஞசம் குழப்பம் அதிகமாகி இருக்கிறது.
இவர் பினிக்ஸ் பறவையாக வந்ததர்க்கு பல காரணங்களை அலசுகிறார்கள்
முதலில் SATURDAY Night Live’ ல் ஜனநாயக கட்சி வாக்கு வாதங்களை கிண்டல் செய்ததை சாமர்த்திய்மாக தன் பக்க ஆதரவாக திருப்பி விட்டார்.
[இந்த link’ Youtube‘ இருந்து நீக்கி விட்டார்கள். ஆனல் தன்னை போலவே வேடம் இடும் பெண் ஒருவரோடு SNL இருப்பதை பார்க்கலாம்
They did a re-enactment of the CNN debate and mocked the media for their ridiculous bias in favor of Obama. One of the questions to “Obama” was “Can we get you anything?” And another: “Are you mad at me? At one point “Hillary” tried to interrupt and they scolded her and told her she owed everyone an “Obamapology”. The funniest moment for me though was when the woman playing Campbell Brown had just finished listening to one of Obama’s answers and she looked to be having a very intimate uhhh reaction like a tingle in her leg, some might say]….
ஊடகங்கள் பெரும்பாலும் ஓபாமாவை கனிவாய் கவனித்தும் தன்னையே “முதலில் குறி” வைப்பது குறித்தும், அழுத்தம் திருத்தமாக வாக்களர்கள் மனத்தில் நிறுத்தினார்…..
http://www.bulletpointjournal.com/2008/03/video-of-hillary-clinton-on-saturday.html
Hillary Clinton recalls SNL parody: Does Obama want pillow?
ஓபாமாவைக் கிண்டல் செய்து பல பேச்சுக்கள்…… (ஏதோ கனவு உலகத்தில் இருக்கிறார்!)
http://www.youtube.com/watch?v=a1ckrEeHDRY
NAFTA பற்றிய கேள்விகளுக்கு ஓபாமா சரியான விடை தெரியாமலும், குழப்பியதும் பெரிய சறுககல்களே. கனடா அரசாங்கத்தில் தந்த மறைமுக உறுதியையும் மறைக்க முயன்றார்.
CTV on Obama, Clinton and NAFTA
http://www.youtube.com/watch?v=jAJYMgX4JuU
இது தவிர தேசிய பாதுகாப்பு குறித்த அச்சங்ளையும் வெளியிட்டார்.
இந்த ஹில்லரியின் வெற்றி டெமொக்ரட் கட்சியில் புது சிக்கல்களை ஆரம்பித்து இருக்கிறது……… அப்புறம் அது குறித்து அலசுவோம்!










