பெயர்ச்சொல் மொழிபெயர்ப்பு: அமெரிக்காவும் தமிழாக்கங்களும்: தினமலர்


தினமலர் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து நண்பர்களுடன் நடந்த விவாதம்:

நண்பர் #1:
அமெரிக்க தேர்தலில் ரோட் ஐலண்ட் மாகாணத்தில் ஹிலரி வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தியை தினமலர் தமிழ்ச் சுத்திகரிப்புச் செய்து ரோட் ஐலண்ட் என்ற மாநிலத்தின் பெயரை மீண்டும் மீண்டும் ரோட் தீவு, ரோட் தீவு என்று எழுதுகிறது.

நம் தமிழ் பத்திரிகைகளின் பொது அறிவு என்னை அவ்வப் பொழுது புல்லரிக்க வைத்து விடுகிறது. அதென்ன ரோட் தீவு? சாலைத் தீவு என்று முழுக்க மாற்றி விட வேண்டியதுதானே? படிக்கிறவன் என்ன நினைப்பான், அமெரிக்காவின் வட கிழக்கு மூலைக்குக் கீழே இருக்கும் கோஸ்டல் நிலப் பிரதேசத்தை, ஒரு தீவு என்று நினைத்துக் கொள்ள மாட்டானா?

தினமலர் கனடாவில் உள்ள விர்ஜின் ஐலண்ட் பிரதேசத்தை எப்படி எழுதும்? கன்னித் தீவு என்றா?

இதே பாணியில் போனால் தினமலர்

  • மேரிலாண்ட்டை மேரி நிலம் என்றும்,
  • விர்ஜினியாவை கன்னியா என்றும்
  • கனெக்டிக்கட்டை சேர்த்து வெட்டு என்றும்
  • மிசிசிப்பியை செல்வி சிப்பி என்றும்,
  • பாஸ்டனை தலைவர் பேட்டை என்றும் ,
  • டெக்சாஸை டெக்கின் பிருஷ்டம் என்றும்,
  • நியுயார்க்கை புதிய வளைவு

என்றும் எழுதத் தொடங்குமோ என்று ஒரே அச்சமாக இருக்கிறது.


நண்பர் #2:
Luckily, Dinamalar doesn’t cover anything that goes on in the town “Dickinson, North Dakota”


நண்பர் #1:

தினமலருக்கு நாளைப் பின்னே உபயோகப் படுமே என்று ஏதோ என்னாலான உதவி

“ஆண்குறி உள்ளே மகன், வடக்கு வாத்துக் கோட்டை”

நல்ல வேளையாக அமெரிக்க துணை ஜனாதிபதியின் பெயரின் முதல் பாகத்தைத் தமிழுக்கும்
ரெண்டாவது பாகத்தை அப்படியேயும் எழுதாமல் இருந்தார்கள், இரட்டைக்
கிளவியாகியிருக்கும்.


நண்பர் #3:

ஆல்பனி ‘எல்லாமே பனி’ ஆகி விடுமோ ?

16 responses to “பெயர்ச்சொல் மொழிபெயர்ப்பு: அமெரிக்காவும் தமிழாக்கங்களும்: தினமலர்

  1. பாலா, சரியான ஒரு செயலை தவறாக முடியக்கூடிய தமிழாக்கங்களுடன் ஒப்பிட்டு மிகைப்படுத்தி தவறு போல் தோன்றச் செய்து இருக்கிறீர்கள்.

    http://en.wikipedia.org/wiki/Rhode_island கட்டுரையில் இடப்பக்கம் உள்ள வேற்று மொழி விக்கிப்பீடியாக்களுக்கான தொடுப்புகளைப் பாருங்கள். மலாய் உள்ளிட்ட பல மொழிகளில் ஐலண்ட் என்று எழுதுவதற்குப் பதில் உள்ளூர் மொழிச் சொல்லையே ஆண்டிருக்கிறார்கள். தமிழிலும் றோட் தீவு என்றே எழுதி இருக்கிறோம். றோட் என்பது ஈழ வழக்கு, ரோட் என்று எழுதி இருந்தால் தமிழக வழக்காகி இருக்கும். rhode என்ற இடுகுறிப்பெயர்ச்சொலைப் புரிந்து கொண்டு அதை roadஆகக் கருதி மொழிபெயர்க்காமல் விட்டிருப்பது சரி.

    virgin islands பற்றிய கேள்விக்கு, http://en.wikipedia.org/wiki/British_Virgin_Islands கட்டுரையில் இடப்பக்கம் உள்ள வேற்று மொழி விக்கிப்பீடியாக்களுக்கான தொடுப்புகளைப் பாருங்கள். பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில் virgin, island இரண்டையுமே மொழிபெயர்த்த்திருக்கிறார்கள். தமிழிலும் பிரித்தானியக் கன்னித் தீவுகள் என்றே எழுதி இருக்கிறோம்.

    தகுந்த இடங்களில் காரணப் பெயர்ச்சொற்களை மொழிபெயர்ப்பது சரியே.

    dickinson, dakota எடுத்துக்காட்டுக்கள் எல்லாம் கிண்டலுக்காக நீங்கள் தந்திருக்கிறீர்களே அன்றி யாரும் அப்படிச் செய்யப் போவதில்லை.

  2. நீங்கள் சொன்ன மற்ற காட்டுகள் என்னவோ ஒத்துக்கொள்ள முடியாதவைதாம்; இவற்றை எல்லாம் பார்க்கும்போது, ரோட் தீவு பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.
    தென்னாப்பிரிக்கா , வட கொரியா என்பன பலவும், க்ரீஸ் என்பதை கிரேக்கம் என்றும், ரஷ்யா என்பதை உருசியா என்றும் தமிழாக்கம் செய்ததை யாரும் கண்டித்ததாகத் தெரியவில்லையே! இது இப்படி இருக்க ரோட் தீவில் ஏனிந்தக்கோபம் உங்களுக்கு?

    இரான் என்பதை (I ran) நான் ஓடினேன் என்றால் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமுடியாதுதான்.

  3. சௌந்தர்ராஜன், தென்னாப்பிரிக்கா, வட கொரியா என்று சொல்வது தவறா?? south africa, north korea என்று சொல்வது தான் சரியா? எங்கு போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை 😦 இதற்கு பாலா சொன்ன எடுத்துக்காட்டுக்களே பரவாயில்லை.

    கிரீஸ், ரஷ்யா என்பனவெல்லாம் அந்த நாடுகளின் அனைத்துலக அல்லது ஆங்கிலப் பெயர்களே தவிர, உள்ளூர் பெயர்கள் அல்ல. அந்தந்த நாடுகளின் உள்ளூர்ப் பெயர்கள் இடுகுறிப் பெயர்களாக இருக்கும் பட்சத்தில் அப்பெயர்களின் ஒலிப்புக்கு நெருங்க நாமும் அழைப்பது தான் நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை. வேற்று நாட்டவர் தமிழ் என்று சரியாக உச்சரித்தால் மகிழ்வீர்களா, ஆங்கில ஒலிப்புக்கு ஏற்ப டேமில் என்று ஒலித்தால் மகிழ்வீர்களா?

    கிரேக்கம், ருசியா, எகிப்து, லத்தீனம், சீனா, மலேயா, இத்தாலி, எசுபானியா என்று சொல்வது எல்லாம் உள்ளூர் ஒலிப்புகளுக்கு நெருங்கி வர வேண்டும் என்பதால் தான். தவிர, தமிழருக்கு ஆங்கிலம் அறிமுகமாகும் முன்னே இந்நாடுகளுடன் வரலாற்றுத் தொடர்புகளும் இருந்திருக்கின்றன.

    ஜெர்மனியின் உள்ளூர்ப் பெயர் டாய்ட்ச்லாந்து. ஆனால், அதையே ஒவ்வொரு ஐரோப்பிய மொழியும் ஒவ்வொரு மாதிரி ஒலிக்கும். ஜெர்மனி என்று அழைப்பதில்லை. நாட்டுப் பெயர் போக, மொழிகளின் பெயர்கள், நகரங்களின் பெயர்கள் எல்லாமே இப்படி உள்ளூர் ஒலிப்புக்கு ஏற்புவும் பேசும் மொழிக்கு ஏற்பவும் திரிந்தோ ஒத்தோ ஒலிப்பது இயல்பே. இதில் நகைக்கவோ கண்டிக்கவோ ஒன்றும் இல்லை.

    உலகமே ஆங்கிலத்தால் இயங்குவதாக நினைத்துக் கொண்டால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

  4. //படிக்கிறவன் என்ன நினைப்பான், அமெரிக்காவின் வட கிழக்கு மூலைக்குக் கீழே இருக்கும் கோஸ்டல் நிலப் பிரதேசத்தை, ஒரு தீவு என்று நினைத்துக் கொள்ள மாட்டானா?//

    தினமலர் தமிழில் தீவு என்று எழுதியது தானா இப்போ பிரச்சினை? இது தீவு அல்ல என்று நீங்கள் சொல்லி இருக்காவிட்டால், வரைபடத்தைப் பார்த்து நான் புரிந்து கொண்டிருக்காவிட்டால் island என்ற பெயரைப் பார்த்து நான் அதைத் தீவு என்று தான் புரிந்து கொண்டிருப்பேன். உலகெங்கும் உள்ள ஆங்கில ஊடகங்களில் island என்று எழுதும்போதும் இப்படித் தானே புரிந்து கொள்வார்கள்? சில பெயர்கள் தற்காலப் பொருத்தம் இல்லாவிட்டாலும் வரலாற்றுக் காரணங்களுக்காக நிலைப்பதுண்டு. தவறான புரிதலைத் தவிர்க்க வேண்டுமென்றால் மூலப் பெயரைத் தான் மாற்ற வேண்டும். மொழி பெயர்க்க்கூடாது என்று சொல்லக்கூடாது.

    தினமலர் செய்யும் தமிழ்க்கொலைகள் தனிக்கதை. ஆனால், ஒன்றிரண்டு இடங்களில் உருப்படியாகத் தமிழில் எழுதுவதைக் கூட ஏன் விமர்சிக்கிறீர்கள்?

  5. சிறு திருத்தம் – கிரேக்கம் என்ற பெயர் கிரேக்க மொழி பேசும் நாடு என்பதில் இருந்து வந்தது. நெதர்லாந்து மொழியில் griekenland என்கிறார்கள். இந்தோனேசியா மொழியில் யுனானி என்கிறார்கள் !!!

  6. பிங்குபாக்: பெயர்ச்சொல் தமிழாக்கம்

  7. ரவி… நன்றி.

    Maryland- யும், நியு யார்க்கையும் மாற்றலாம் அல்லவா? முறையே மேரி இடம்/புது யார்க் என்று ‘அமெரிக்கா செல்வோம் வாருங்கள்’ என்ற புத்தகத்தில் (டம்மீஸ்) மாதிரி பயன்படுத்தலாம். இந்த மாதிரி மாற்றி படித்த ஒருவர், அமெரிக்கா வந்திறங்கினால் குழப்பமே மிஞ்சும் அல்லவா!?

  8. பாலாஜி – சரியான தமிழாக்கமோ தவறான தமிழாக்கமோ, ஒரு முறையாவது உள்ளூர்ப் பெயரை உள்ளூர் மொழி எழுத்துக்களிலேயே எழுதிக் காட்டுவது பரிந்துரைக்கத்தக்கது. விக்கிப்பீடியா கட்டுரைகளில் இந்த நடை பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

  9. இதைப் படித்தபோது ஒரு translation ஞாபகம் வந்தது..

    “the Governement had a role to play” என்பதை,
    ” அரசு விளையாடுவதர்க்கு ஒரு உருளையை தயாரித்து இருக்கிறது” translate என்று மொழி பெயர்த்து இருந்தார்கள்.!!

  10. இடங்களின் பெயர்களை மொழிபெயர்க்க முனைவது நபர்களின் பெயர்களை மொழிபெயர்க்க முயல்வதற்கு ஒப்பானதுதான். Bush-ஐயும், Rice-ஐயும் மொழி பெயர்த்து செய்தி எழுதினால் எப்படி இருக்கும் ?

  11. சத்யராஜ்குமார் – நயி தில்லி ஆங்கிலேயர் ஊரா? அது ஏன் New Delhi ஆனது? நம் மொழியில் இருந்து ஆங்கிலம் பேசுவோர் வசதிக்காக ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்படும் உறைப்பதில்லை. அதையே நம் வசதிக்காகச் செய்தால் குய்யோ முய்யோ என்கிறோம்..ஹ்ம்ம்..

  12. இந்த இடுகை, மறுமொழிகள் முழுக்க சில சமயம் தவறாய் முடிந்த தமிழாக்கங்கள், நடக்கவே வாய்ப்பில்லாத தமிழாக்கங்களைக் கொடுத்து சரியான தமிழாக்கங்களை நையாண்டி செய்யும் போக்கே இருக்கிறது. வேறென்ன சொல்ல?

  13. ரவிசங்கர், Bombay-யும், Madras-உம் திருத்தம் பெறுவதை கவனியுங்கள். மேற்கத்தியர் பெயர் மாற்றியதை நம் மக்கள் ஒப்புக் கொண்டு விட்டதால் அது சரி என ஆகி விடாது.

  14. இந்த இடுகை, மறுமொழிகள் முழுக்க சில சமயம் தவறாய் முடிந்த தமிழாக்கங்கள், நடக்கவே வாய்ப்பில்லாத தமிழாக்கங்களைக் கொடுத்து சரியான தமிழாக்கங்களை நையாண்டி செய்யும் போக்கே இருக்கிறது. வேறென்ன சொல்ல?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.