பழைய நெனப்புதான்… பேராண்டீ


உங்களுக்கு அடக்கம் தேவை… ஆணவம் கூடாது என்கிறாரே முதல்வர்?

குமுதத்தில் வந்த விஜயகாந்த் பேட்டியில்: அடடா… அடக்கத்தைப்பற்றி, அரசியல் நாகரிகம் பற்றி இவர் பேசலாமா? அந்தக் காலத்தில் இந்த ‘அடக்கமான தலைவர்’ எவ்வளவு பேசியிருக்கார் தெரியுமா? காமராஜரையும், ராஜாஜியையும் இவர் பேசாத பேச்சா? எல்லாமே பேப்பரில் இருக்கு. மதுரையில் இந்திராகாந்தியை கறுப்புக் கொடி காட்டி அடித்தவர்கள்தானே… இவர்கள்! நான் அந்த பயங்கரத்தை கண்ணால பார்த்து ஓடினவன். அப்போ எனக்குச் சின்ன வயசு.

சட்டசபையில் திராவிடநாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பினார் காங்கிரஸின் அனந்தநாயகி. இவர் உடனே எழுந்து, ‘நாடாவைக் கழற்றி பாவாடையை தூக்கிப் பார். அங்கே தெரியும்’ என்றார். சட்டசபை அல்லோலகல்லோலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான் அப்படி சொன்னதாக அப்புறம் வியாக்யானம் தந்தார். கச்சத்தீவுப் பற்றி எனக்குத் தெரியாது என்கிறாரே…. சட்டசபையில் அனந்தநாயகி கேள்விக்கு இவர் பதில் சொன்னதே ஞாபகம் இருக்கே?

காமராஜர்… காமராஜர் என்று இப்போது முழங்குகிறாரே… விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரை தோற்கடிக்கவேண்டும் என்று ஒரே மூச்சில் நின்றவர்தான் இவர். அண்ணா ‘வேண்டாம்’ என்றதையும் கேட்கவில்லை. இவர் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய்க் கொடுத்தார் — திருட்டுத்தனமாக! யாரிடமிருந்து அடக்கத்தை கற்றுக் கொள்வது? என்னை எறும்பு என்றார். ஆமை என்றார். இப்போது சந்துல சிந்து பாடறார் என்கிறார். ஆணவத்தில் பேசுவது யார்?

தொடர்புள்ள மன்னிப்பு: IdlyVadai – இட்லிவடை: தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.