பதிப்பாளர் ஒருவர், அரங்குகள் நான்கா?
இந்த ஆண்டு ஒரு பதிப்பகத்தைச் சேர்ந்தவர்களே ஒன்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை எடுத்து தங்களுடைய புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இதனால் சிறுபதிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பதிப்பாளர் சங்கத் தலைமையிடம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு இவ்வாறு இடம் ஒதுக்கப்படுகிறதோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.
‘அடுத்த ஆண்டு சரி செய்யப்பட்டுவிடும்…’
ஒருவர் தனது பெயரில் ஒரு பதிப்பகமும், மனைவி பெயரில் இன்னொரு பதிப்பகமும், உறவினர் பெயரில் மற்றொரு பதிப்பகமும் வைத்திருந்தால் மூவரும் சங்கத்தில் உறுப்பினர் ஆக முடியும். இந்த மூவர் பெயரிலும் அரங்குகள் வேண்டும் என்று கேட்கிறபோது நாங்கள் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும் விதிகளுக்கும் உட்பட்டு அரங்குகள் ஒதுக்க வேண்டியதாக உள்ளது.
சில பதிப்பகங்கள் தங்களுடைய அரங்கில் மட்டும் தங்கள் பதிப்பகத்தின் புத்தகங்களை விற்காமல் பிற அரங்குகளிலும் விற்பனைக்கென கொடுத்து விடுகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் ஒரு சில பதிப்பகங்களின் புத்தகங்களே இருக்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது…சிறுபதிப்பாளர்களின் புத்தக விற்பனை குறையும் வாய்ப்பும் உள்ளது.
தினமணி: இந்த ஆண்டு மொத்தம் வந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 49 ஆயிரம்.
நடுவில் என்னுடைய மறுமொழி:
ஒருவரே பல பெயரில் பதிப்பகம் நடத்துவது ரொம்ப காலமாக நடந்து வருகிற விஷயம். கிழக்கு போன்றவர்கள் அதை வெளிப்படையாக செய்கிறார்கள். வானதி பதிப்பகத்தார் போன்ற பழம்பெரியவர்கள் இதையே கமுக்கமாக நீன்ட நெடுங்காலமாக நடத்துகிறார்கள். ‘நாலு ஸ்டால் போட்டு இருக்காங்களே’ என்பது வளர்ந்தவரைப் பார்த்து பொறாமை பாராட்டும் குணம்.
‘சிவாஜி’ படம் ஊரில் அகப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெளியாவது போல், குறிப்பிட்ட பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்து விற்பனை அரங்குகளிலும் கிடைக்க செய்வது வியாபார சூட்சுமம். ‘கமிஷன் தண்டம் அழ வேண்டுமே’ என்றால் விற்பனையாகும் அளவு குறைந்து போனாலும், நிகர லாபம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரிசமமாகும்.
உள்ளே இருப்பவர்களுக்குத்தான் இது உண்மையா என்று தெரியும்.
பாதி கடந்த நிலையில் பத்ரியின் எண்ணங்கள்:
சிறு பதிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் மான்யம்… அதாவது அவர்களுக்கு மட்டும் குறைந்த விலையில் ஸ்டால் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். அப்படியானால் யார் சிறு பதிப்பாளர்கள் என்ற வரைமுறையும் (ஆண்டுக்கு என்ன டர்ன் ஓவர் என்பதைக் கொண்டு இருக்கலாம்) அதற்கான ஆடிட் சான்றும் இருந்தால் இதனைச் செய்யலாம்.
புத்தகக் கண்காட்சி இல்லாதபோது விற்பனைக்குப் புத்தகக் கடைகளைச் சார்ந்து வாழ்கிற பதிப்பகங்கள், ஒன்று புத்தகக் கண்காட்சியிலும் புத்தக விற்பனை நிலையங்களுக்கு இப்போது போலவே Equal இடம் கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்குப் புத்தகக் கண்காட்சியில் இடமே இல்லை என்று சொல்ல வேண்டும். இடமே இல்லை என்று சொல்ல முடியாது. சொல்லிவிட்டால், வருடத்தில் பதினோரு மாதங்கள் இந்த விற்பனையாளர்களின் தயவு இல்லாமல் புத்தகங்கள் விற்காது.
ஆதலால், ஒரு புத்தகம் பல கடைகளில் கிடைப்பது ஜனநாயகம்.
இந்தக் கடையில் மட்டுமே இந்தப் புத்தகம் இருக்க வேண்டும் என்கிற குறுகியகால லாபங்களை மனதில் கொள்ளாது செயற்படுவதே நல்லது. பல கடைகளில் ஒரு புத்தகம் கிடைத்தாலும் பதிப்பாளருக்கு நஷ்டமில்லை. 30%-லிருந்து 40% கமிஷன் கொடுக்க வேண்டியிருந்தாலும் அது லாபமே. அந்த கமிஷன் லாபமும் தனக்கே வரவேண்டும் என்று நினைப்பது என்னைப் பொருத்தவரை நிச்சயம் சரியில்லை.











சென்னை புத்தகக் கண்காட்சி 2008 « சா�
//பல கடைகளில் ஒரு புத்தகம் கிடைத்தாலும் பதிப்பாளருக்கு நஷ்டமில்லை. 30%-லிருந்து 40% கமிஷன் கொடுக்க வேண்டியிருந்தாலும் அது லாபமே. அந்த கமிஷன் லாபமும் தனக்கே வரவேண்டும் என்று நினைப்பது என்னைப் பொருத்தவரை நிச்சயம் சரியில்லை.//
பதிப்பாளர் பார்வையில் அது லாபம் தான்..ஆனால் வழக்கமான புத்தகக் கடைகளில் வாங்குவது போல ஆகிவிடக்கூடாது. புத்தகக் கண்காட்சியின் தனித்தன்மையே தனித்தனி ஸ்டால்கள் என்பதில் தான் இருக்கிறது… அதை வழக்கமான புத்தகக் கடைபோல எல்லாப் புத்தகமும் இங்கே கிடைக்கும் என்று ஆக்கி விட்டால் கண்காட்சி என்பதே அர்த்தமில்லாமல் போய்விடும்.
chennai Puthaka Kankatchiyil, siru pathipalarkaluku manyam valanga pada vendum endra karauthu varaverka thakkathey.
tamil pathipaga ulagam motha virpanaiyalargalayum vayaparikalayum nambiya irrukirathu,sandhai paduthuthalai sariyaga tholai nookudun seyum kilaku pathipagam thavira.
pala Pathipalarkal thangal puthagathai makkalidam kondu serkum velaiyau sariyaga muyarchikkamal, puthaka kankatchiyal mattum vayapariyaga avatharam edupathu, valarchiku vazhi seyathu.
thangal puthgangalai santhai paduthum vazhiyai avargal nooka vittal,intha thurai avargalai thathu kulanthaiyaga nadathuvathu poyee,anathai agum nelai erpadum
ஒட்டு மொத்தமாகவே இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்று கேள்வி. !
nan ella varudamum poven but last two year poga mudiya villai because i am working in abroad, here i am searching tamil books but not get, (Bahrain)
Anbudan
Raams
சிந்தா,
—வழக்கமான புத்தகக் கடைகளில் வாங்குவது போல ஆகிவிடக்கூடாது. புத்தகக் கண்காட்சியின் தனித்தன்மையே தனித்தனி ஸ்டால்கள் என்பதில் தான் இருக்கிறது—
நன்றி!!
இங்கு கூட பார்டர்ஸ் மற்றும் பார்ன்ஸ் & நோபிள் போன்ற பெருவணிகர்களிடம் ஒரே மாதிரியான புத்தகங்களும், அதிகம் விற்பனையாகும் புத்தகங்களும் மட்டுமே காணக் கிடைக்கும்.
சொந்தமாக நீண்ட நெடுங்காலமாக நடத்தி வருபவர்களிடமும், பெத்த அங்காடிகளை விட்டு ஒதுக்குப்புறமாக அமைந்தவர்களிடத்தும் வித்தியாசமான விஷயங்கள் இருக்கும்.
விக்ரம்… நன்றி.
புத்தகங்களை சந்தைப்படுத்துவது… மில்லியன் டாலர் டாபிக்!
சேவியர்… நன்றி
—புத்தகக் கண்காட்சியில் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை —
சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு எப்படி என்ற புள்ளிவிவரம் தெரிந்தால் வசதி.
மொத்த விற்பனை, வருகையாளர் எண்ணிக்கை, விற்ற புத்தகங்களின் கணக்கு, கண்காட்சியில் எத்தனை ஸ்டால் போன்றவற்றை ஒப்பிட்டு பார்க்கலாம்?
ராம்ஸ்,
உங்களுக்காக சில தளங்கள்:
tamilbookmarket.com
AnyIndian – An Internet Book Shop for Indian Books
Kamadenu.com
ஒரு வசதிக்காக: எண்ணங்கள்: சென்னை புத்தகக் கண்க
பிங்குபாக்: 2008 - Tamil Books « Snap Judgment