Kirukkal.com – சுப்புடுவிற்கு சுப்புடுத்தனமான விமர்சனம்


அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – ஒரு பெரிய சிறுகதை

நன்றாக வந்திருக்கிறது. அட்வைஸ் பொழியும் கதை.

முதல் பாதியில் கிடைத்த துள்ளல்; முடிவில் போட்ட சென்டி எல்லாம் பார்த்தால் தமிழ் சினிமா திரைக்கதை மாதிரி இருந்துச்சு.
Host unlimited photos at slide.com for FREE!

ஆங்காங்கே ‘சிக்கி முக்கி நெருப்பே’ என்று ஆண்டிஸ் (ஆண்டஸ் மலையா ஆன்டீஸ் மலையா?) பாடல் ஒன்று போட்டால் முழுப்படமாக்கிடலாம் 🙂

நம்முடைய முந்தைய ஜெனரேஷன் இந்த ‘கடன் வாங்கக்கூடாது / சேமிச்சு வாழணும்; சிக்கனமா இருக்கணும் / வாழ்க்கையே வங்கி சேமிப்பு புத்தகத்தில் இருக்கிறது’ போன்ற கோட்பாடுகளை உடைத்தெறிந்து விட, புதிய ஜெனரேஷன் ‘ஸ்டாக் மார்க்கெட்; ஈ-பே; டீல்ஸ்4யூ.காம்’ என்று அவர்கள் மாதிரி ஆகிப் போனதை கல்க்கலா காமிச்சு இருக்கீங்க.

இணைய இதழ்களுக்காவது அனுப்பி வைக்கலாமே. ரொம்ப இயல்பா வந்திருக்கு.


ராட்டடூயி – சிறுகதை

முதல் கதையை விட இது இன்னும் கொஞ்சம் ரசிக்கவைக்கிறது.

வீட்டின் வரைபடம் எல்லாம் காமித்து மிரட்டுகிறார். நம்பகத்தன்மை அதிகம் உள்ள, டிராமாத்தனம் இல்லாத ஆக்கம்.
Host unlimited photos at slide.com for FREE!

லீனியராக சொல்லாமல், பழைய விஷயங்களை இடைச்செருகலாக சாமர்த்தியமாக நுழைப்பது, சமகால விவரணைகள், முடிவு எல்லாமே தூள்.

இப்படியே இரண்டு வாரம் ஓடிப் போக, இன்று தான் அது எலி என்று தெரிய வந்தது. தான் கையால் அந்த கருப்பு எலிப்புழுக்கையை உடைத்தது, முகர்ந்து பார்த்தெல்லாம் ஞாபகம் வர, குமட்டிக் கொண்டு வந்தது. ஏனோ திரும்பிக் போய் கையை அலம்பிக் கொண்டான்.

இதே ரேட்டில் கதை எழுதிக் கொண்டிருந்தால், அமெரிக்க பின்னணியில் ‘பிரிவோம்… சந்திப்போம்’ ஸ்டைலில், சுவாரசியமான தேஸி என்.ஆர்.ஐ.யின் வித்தியாசமான ‘மூன்று விரலை’ நாவலாக்கித் தரக்கூடிய நம்பிக்கையை வரவைக்கும் ஆக்கம்.

Host unlimited photos at slide.com for FREE!

2 responses to “Kirukkal.com – சுப்புடுவிற்கு சுப்புடுத்தனமான விமர்சனம்

  1. பாலாஜி, பொறுமையாய் படித்து, சுப்புடுத்தனமான ரிவ்யூ எழுதியதற்கு ரொம்பவும் நன்றி, நைனா.

  2. சுப்புடு அடுத்த ரிலீஸ் எப்போ?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.