Sun TV – சிதறல்கள்


சன் டிவியில் பல மாற்றங்கள்.

  • சனி, ஞாயிறுகளில் இரவு செய்திகள் சீக்கிரமே வந்து விடுகிறது. அன்று மட்டும் அரை மணி நேரம் முன்பே வரும் மாயம் என்ன?
  • மதிய செய்திகள் ஐந்து நிமிடங்களாக சுருங்கி விட்டது. இந்த மாதிரி தலைப்புச் செய்திகளை மட்டும் தருவது நல்ல ஃபார்மாட். முக்கியமான விஷயங்களை மொத்தமாக விளம்பரம் இன்று அறிய முடிகிறது.
  • ‘வணிக செய்திகள்’ என்று இரவு போடுகிறார்கள். பல தகவல்கள் தெரியவருகிறது. ஆனால், எழுதி ஸ்லைடு போட்டுக் காட்டுகிறார்கள். ஏன் படிக்க மாட்டேன் என்கிறார்கள்? எழுதிப் போடுவதிலும் எக்கச்சக்க எழுத்துப் பிழைகள். (மொத்தம் நான்கு வார்த்தை உள்ள செய்தியில் இரண்டு பிழை வரும் சித்திரவதை).
  • செய்திகளில் முக்கிய தலைவர்கள் அல்லது சம்பவத்தை நேரடியாக பார்த்தவர்களின் ரிப்போர்ட் இடம்பெறுகிறது. திடீரென்று ஒரு வார்த்தை சைலன்ஸ் செய்யப்படுகிறது. இந்த மாதிரி கழுத்தைத் திருகி கருத்தை அமுக்குவதிற்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியுமா?
  • செய்திகள் என்றில்லை. பேட்டி, நேரடி ஒளிபரப்பு போன்றவற்றிலும் இந்த திடீர் மயான அமைதி தென்படுகிறது. சென்சார் செய்யப்பட்ட பத்திரிகையில் f**k, s#@t என்றெல்லாம் குறிப்பால் உணர்த்துவார்கள். அந்த மாதிரி இந்த taboo பெயர்ச்சொல்களை சொன்னால் கிசுகிசு படித்த ஸ்னானப்ராபிதியாவது கிடைக்கும்.
  • முன்னாள் பெப்சி, இன்னாள் ஆச்சி மசாலா ‘உங்கள் சாய்ஸ்’ உமா ஜாகை மாறிப் போன பிறகு அந்த ஸ்லாட் வெறிச்சோடி இருக்கிறது. போன வாரம் பிரகாஷ்ராஜ் வழிந்தார். அதற்கு முந்தின வாரம் அனைத்து தீபாவளித் திரைப்படங்களின் முக்கிய பிட்டுகளையும் போட்டுக் காட்டிவிட்டு சத்யராஜ் போன்ற நக்கலுடன் சுரேஷ்குமார் ‘இந்தப் படத்தையும் திரையரங்கில் சென்று பார்க்கவும்’ என்று பகிடித்திருந்தார்.
  • தொலைபேசியில் மக்களை சமாளிக்க தற்போதைய சன் டிவி தொகுப்பாளர்களில் யார் சிறந்தவர்?
    • சூப்பர் டூப்பரில் வரும் ஹேமா சின்ஹா – ‘கண்ணாமூச்சி ஏனடா’ நிகழ்ச்சியில் ராதிகா, ப்ரியா, சத்யராஜை வைத்துக் கொண்டு தொலைபேசியையும் சமாளித்தார்.
    • வணக்கம் தமிழகத்தில் வருபவர் – நிறைய பேட்டி கண்ட அனுபவம் கைவசம் இருப்பது ப்ளஸ்.
    • நினைவுகள் அம்மு – உமா மாதிரியே வாத்சல்யமான உரையாடல். புடைவையில் லட்சணம். அம்மு நம்ம சாய்ஸ்.
  • மஸ்தானா மஸ்தானா‘வில் ஆட முடியாமல் மாய்மாலம் செய்த கமலேஷ் அமெரிக்கா வந்து ஆடிவிட்டுப் போகிறார்.
  • ‘அசத்தப் போவது யாரில்’ பாடல்களை உல்டா செய்யும் பகுதி நன்றாக இருக்கிறது.

4 responses to “Sun TV – சிதறல்கள்

  1. சன் டிவி மொத்தத்தில் தனது நிகழ்ச்சிகளை விஜய் டிவியிலிருந்து காப்பி அடிப்பதிலேயே மும்முரமாக உள்ளது.

  2. சன்டிவி தடுமாறுவது நீங்கள் சொல்வது போல் நன்றாகத் தெரிகிறது.காத்திருந்து பார்க்கலாம்.

  3. —விஜய் டிவியிலிருந்து காப்பி அடிப்பதிலேயே மும்முரமாக உள்ளது.—

    விஜய் அப்படியே ஸ்டார், ஃபாக்ஸ் போன்றவற்றில் இருந்து கையாள்வதை கருத்தாக செய்கிறது 😉

  4. நன்றி கல்யாண் கமலா. பார்வையாளர்களுக்கு குஷியான நேரம்!?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.