1. ஐம்பது சவரனுக்கு நகை போட்டிருக்கிறார்கள். 23 வயது பெண்ணை சந்தோஷமாக இருப்பாள் என்னும் நம்பிக்கையில் அமெரிக்கா அனுப்பி இருக்கிறார்கள். அங்கு சென்றாலும் வரதட்சணை விடாது கேட்டு படுத்தும் கணவன் & குடும்பத்தார். காரில் ஏறும்போது தடுக்கி விழுந்து விபத்தாகி கோமாவுக்கு சென்றதாக கணினி வல்லுநர் கதை விடுகிறார். படித்தவனுக்கு புத்தி, சமூக அறிவு, சிந்தனை இருக்கும் என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய் 😦
அது நேற்றைய செய்தி. இன்று அசோக்குமார் & சுபரஞ்சனி.
திருமணத்திற்காகும் செலவில் 50:50 காணும் காலம் வர குறைந்தது ஐம்பதாண்டுகள் பிடிக்கும்.
2. தமிழகத்தில் ஏழைகளுக்கெல்லாம் தொலைக்காட்சி வழங்கி சிவந்த கரங்கள், இப்பொழுது அடுக்குமாடி வீடுகளுக்கும் வண்ணத்தொலைக்காட்சி பெட்டியை இலவசமாக வழங்கிவருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்போர் எல்லோருக்கும் ஒரு டிவி. இதற்காக ஆகும் செலவை தேங்கியிருக்கும் வழக்குகளை துரிதப்படுத்தவோ அல்லது கிராமப்புற கல்வி மேம்பாட்டுக்கோ அல்லது பிறிதொரு நம்பிக்கை தரும் விஷயத்திற்கோ பயன்படுத்தாமல் விழலுக்கிறைத்த வெந்நீர்.
சீர்வரிசைக்கு முக்காடு போட்டு கேட்கிறார்கள். ‘எனக்கு வந்துடுச்சு; நீங்களும் வாங்கிட்டீங்களா‘ என்று டிவிக்கு வரிசையில் வெளிப்படையாக விசாரிக்கிறார்கள்.











இன்னும் கொஞ்சம் விரிவாக
இது ஒன்றும் புதிய சம்பவம் இல்லை பாலாஜி. திருமணத்திற்கு முன் பெண் சேர்த்துவைத்த அத்தனை சொத்தையும் தன் பேருக்கு மாற்ற சொன்ன கணவன், பெற்றோருக்கு வாங்கித்தந்த வீட்டை கேட்டு பெற்று அவர்களை வாடகை வீட்டிற்கு துரத்திய கணவன் என்ற வகையில் நிறைய நிகழ்ச்சிகள் உண்டு. விவாகரத்து செய்துவிடுவேன் என்று பயமூறுத்தும் கணவன் ஒருபுறம், குழந்தையை வைத்துக்கொண்டு தவிக்கும் மனைவி ஒருபுறம், படித்த திமிர் என்பதால் இத்தனை வாயடித்தால் இது உனக்கு தேவை என்று தொல்லை தரும் மாமியார் ஒருபுறம் என்று நிறைய நிகழ்ச்சிகள் உண்டு. இதை எல்லாம் எழுதுவதற்கு பொறுமை வேண்டும். இப்போதெல்லாம் ஆண் அல்லது பெண் உரிமை இங்கே (வலை உலகில்) ஒரு விளையாட்டு பொருளாகி விட்டது.
இந்த வார times பார்த்தீர்களா? gender equalityயில் இந்திய 116 (சரியாக நினைவில்லை)ஆம் இடத்தை பெற்றிருக்கிறது. UAE 104 ஆம் இடத்தையும் அமெரிக்கா 22இல் இருந்து வழுவி 31ஆம் இடத்தையும் பெற்றுள்ளன. அவர்கள் கணக்கில் கொண்ட markeர் முக்கியமானவையே.
பிரகாஷ்
இதைவிட கொடுமையான ஒரு செய்தியை கண்டீர்களா? 9 மாத நிறைமாத கர்ப்பிணிப்பெண்னை தந்தையும் சகோதரனும் அடித்தே கொன்றிருக்கிறார்கள். காரணம் : சாதிமாறிய திருமணம். அதில் தந்தைக்கு பெருமையாய் குலப்பெருமை காக்க பெற்ற பெண்ணையே கொன்றவன் என்று வரலாறு பேசும் என்று.
பத்மா : பார்த்தேன்..கல்வியும் நாகரீகமும் மனிதர்களைப் பண்படுத்தும் என்ற நம்பிக்கையும் பொய்தான் என்று, சில காலமாக வரும் இவ்வகைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன..
—பயமூறுத்தும் கணவன் ஒருபுறம், குழந்தையை வைத்துக்கொண்டு தவிக்கும் மனைவி ஒருபுறம், —
100% உண்மை 😦 😦
தகவல்களுக்கு நன்றி பிரகாஷ்