வயதானால் கடவுள் நம்பிக்கை வரும் என்று வாத்தியார் சொல்லியிருந்தார். எனக்கு குருப்பெயர்ச்சியில் நம்பிக்கை வந்திருக்கிறது.
பதினைந்து வாரமாக விடுமுறையில் இருந்த மேலாளர் திரும்ப வந்திருக்கிறார். குழந்தை பிறந்த குசலம் விசாரித்து முடித்து, சுபயோக நேரத்தில் வலைமேய்வதை நிறுத்தி விட்டு, அரட்டைப் பெட்டிகளை மூடிவிட்டு, மீண்டும் வேலை பக்கம் திரும்பினேன்.
பேறு காலம் முடிந்து எனக்கு கஷ்டகாலம் என்று அலுத்துக் கொண்ட மேனேஜருக்கு குரு சரியில்லை போல…












குரு பார்த்தால் கோடி நன்மை இல்லையோ?
Very nice
குரு கேடியைப் பார்த்தாலும் கோடி நன்மையா 😉