நன்றி: கர்ட்டிஸ்
Disclaimer: The title does not refer to this blogger or any other Tamil, English, Hindi, Esperanto, blogger.
இது கொலு சீஸன். நாலு வீட்டுக்கு கார் மிதித்தால், சுண்டலும், (கர்னாடக சங்கீத) தாட்டை வரிசையும், ரெட் சாக்ஸ், பாட்ரியாட்ஸ் புராணமும், பெற்றோர் வந்திருக்கும் ஆச்சாரமான ஆத்தில் கன்னித்தன்மை இழக்காத மேரி மாதாவும், சன் டிவி போடாத வீட்டில் Glenlivet-ம் கிடைக்கும்.
ராண்டி மாஸ் எப்படி பந்தை லபக்குகிறான் என்னும் கதாகாலட்சேபத்திற்கு நடுவில் அவரின் மகன் மூன்றாவது கிரேடில் வீட்டுப்பாடம் செய்வதில் கவனம் சிதறியது.
‘Wizard of Oz’ புத்தகத்தைப் படிக்கிறான். மூன்று கேள்விகள் இருந்தன.
முதல் கேள்வி சுலபம்: புத்தகத்தில் படித்த கதையை உன் நடையில் எழுது.
இரண்டாவது கேள்வி ‘சொல்லலாம்’ என்னும் ரகம்: கதையில் எந்தப் பகுதியையாவது மாற்ற முடியும் என்றால், எதை/எப்படி கொண்டு செல்வாய்?
மூன்றாவது கேள்வி திடீரென்று பரவசப்படுத்தும் epiphany தருணம்: உன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை இந்த நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி, பொருத்தத்தையும் அனுபவத்தையும் விவரி!











Season-ku Etha mAdhiri, arumaiyA stage-a set paNNitEnga. third grade-ku idhu konjam over-nAlum, idhu maadhiri-yana open-ended questions creativity-a vaLarkum. So, I think it is a good thing.
idhuve namma ooru quarterly exam-la eppdi kEpanga?
* Dorothy sUnyakari-idam patta avadhigaLai virivAga ezhudhu? (sorry, romba mega-serial pAkareno?)
தேர்வுகளில் கதைகளின் வந்த நாயக/நாயகிகளின் பெயர்கள் கேட்பார்கள். Open-ended வினாக்கள் பெரும்பாலும் குறைவுதான்.
இப்பொழுது தமிழ்நாட்டிலும் மாறியிருக்கும் என்று தோன்றுகிறது. முதல் வகுப்பு புத்தகம் புரட்டிக் கொன்டிருந்தேன். மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இந்த ஊர் சிலபஸ் மாதிரி இருக்கு!