நன்றி: டிராபிள்
பள்ளிக்கும் பதிவர் களத்திற்கும் சில ஒற்றுமைகள்:
- பக்கத்து இருக்கைப் பையன் கிள்ளினால், திரும்ப கொடுக்க முயற்சிப்போம்.
- அப்படி பதிலடி தர முடியாவிட்டால், ‘டீச்சர்… கிள்றான்‘னு புகார் கொடுத்து, வகுப்பை விட்டு வெளியேற்ற பிரயத்தனப்படுவோம்.
- மிஸ்ஸுக்கு மிஸ்ஸைல் வந்தாலொழிய, கூடத்தை விட்டு வெளியேற்றப்பட மாட்டோம்.
- எடுத்துக் கொடுக்க, தோளில் கை போட, கிடைத்ததை பங்கிட நட்பு அமைப்போம்.
- ‘அந்தக் காலத்தில‘ என்று பெருசுகள் சொர்க்கபூமியாக பழம்பாட்டை ஆட்டோகிரஃப் பாடுவோம்.
- எல்லாரும் ஒரே வண்ணத்தில் பட்டை சீருடை இட்டிருப்போம்.
- நாற்பதுக்கு கீழ் எடுத்தால் தனி கவனிப்பு கிடைக்கும்.
- நூறு வாங்குபவர்களை பார்த்தால் பொறாமை பீறிடும்.
- பள்ளியில் சேர்வதற்கு சிபாரிசோ நுழைவுத்தேர்வோ சான்றிதழ்களோ நன்கொடையோ வேண்டும்.
- பல பள்ளிகள் இருந்தாலும், ஒன்றுக்கு மட்டும் அடிதடி நடக்கும்.
- கொசுறு: ‘வேதம் புதிது‘ வசனம் ஞாபகமிருக்கா… அது போல் ‘நான் வளர்ந்துட்டேன்; நீங்க வளரவேயில்லையே?’ என்று கேட்கவும் வைக்கவும்.











