Tamilveli.com – Some UI Thoughts


தமிழ்வெளி – இன் user interface குறித்து பயனராகத் தோன்றியவை:

1. உரல் (http://www.tamilveli.com/) ரொம்ப எளிதில் தட்டி்சி செல்லும்விதமாக இருக்கிறது. +1

2. எழுத்துக்களுக்கிடையே போதிய இடைவெளி இல்லை. வார்த்தை, வரி, பத்தி என்று எல்லாவற்றுக்கும் இடையே வெள்ளை நிறம் நிறைய வேண்டும். தற்போதைக்கு பார்த்தவுடன் மயக்கமா… கலக்கமா… குழப்பமா! -1

3. ‘அச்சு மாதிரி‘ அமர்க்களம். வேண்டிய பதிவுகளை தேர்ந்தெடுத்து, ஹாயாக பக்கங்களைப் புரட்டலாம். +1

4. சுட்டி செல்லாமல், அங்கேயே காட்டும் தேடல் அருமை +1ஆனால், ‘முன்னோட்டம் மட்டும்‘ அல்லது ‘முழுமையான இடுகை‘ என்று இரண்டு தேர்வுகளை வாசகர்களிடமே விடலாம். மொத்தமாக் காட்டுவதால், தேடல் முடிவுகள் வருவதற்கு தாமதமாகிறது. -1

பழையதிலிருந்து புதிதுக்கு‘ & ‘புதியதிலிருந்து பழையதற்கு‘ மக்கர் செய்வதால் -1.

5. திடீரென்று மாமல்லபுர ஓவியம் எட்டிப் பார்க்கிறது. பல பக்கங்களில் வேறு இலச்சினைகள் வருகிறது. இடைமுகத்தை நிலையாக நிறுத்தலாம். (0)

6. உரல்களை சுட்டினால், தேன்கூடு, தமிழ்மணம் போல் இங்கும் புத்தம்புதிய சாளரங்களை (அல்லது tabs) திறந்து, இடுகையைக் காண்பிக்கிறார்கள். அதே சாளரத்தில் வலைப்பதிவை படிக்கும் வசதி வேண்டும். பயனரே விருப்பப்பட்டால், தனியாக திறந்து கொள்வார் என்று அவரின் இச்சைக்கே விட்டுவிடும் இடைமுகம் வேண்டும். (0)

7. பக்கத்தின் முடிவுக்கு சென்றவுடன் ‘முந்தைய இடுகைகள்‘ என்றோ, ‘பழைய பதிவுகள்‘ என்றோ, ப்ளாக்ஸ்பாட் (அல்லது) வோர்ட்பிரெஸ்.காம் தளத்தில் ‘Older Posts‘ என்று தூண்டில் இழுப்பது போல் போட்டு வைக்கலாம். மீண்டும் மவுசைத் தூக்கிக் கொண்டு, ஹோம் செல்ல நேரிடுவதால் -1

8. ‘இதர வகை பதிவுகள்‘ என்று சோத்தாங்கைப் பக்கம் வருவது எந்த வகை? எப்படி அங்கு இடுகைகள் இடம்பிடிக்கின்றன? (0)

9. ‘பின்னூட்டங்கள்‘ என்னும் பகுதியில் பழைய மறுமொழிகளின் நிலவரங்களை எவ்வாறு பார்ப்பது? பின்னூட்ட எண்ணிக்கைக்கு பக்கத்தில் – 0, 1, 2 என்று எண்கள் வருகிறதே… அது எதைக் குறிக்கிறது?

(எத்தனை பேர் அழுத்தி உள்ளே சென்றார்கள் என்னும் எண்ணிக்கை என்றால், பின்னூட்டங்களில் இந்த எண்ணைத் தவிர்த்து விடலாம். இடுகைகளிலும் இந்த எண் காணப்படுவது, பரபரப்பான பதிவுக்கு செல்ல வழிகாட்டுவது வசதிதான் என்றாலும், மறுமொழிப் பட்டியலில் குழப்பம் கொடுக்கலாம்.)

10. #8, #9 போல் எழும் வழமையாக கேட்கும் கேள்விகளுக்கு FAQ போட்டு, உதவிப் பக்கங்களைப் பார்க்க சொல்லலாம்.

  • தேன்கூடு என்றால் ‘பல மரம் கண்ட தச்சன்‘ போல் அகரமுதலி, சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ற personalization + customization;
  • தமிழ்மணம் என்றால் ‘சூடான இடுகைகள்’, பூங்கா தேர்ந்தெடுப்புகள்;
  • என்பது போல் தற்போதைக்கு தமிழ்வெளிக்கு அடையாளங்கள், USP இல்லாதது மீண்டும் மீண்டும் வரத் தூண்டாமல், எப்பொழுதோ மட்டுமே வரவைக்கிறது.

ஏற்கனவே இருப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்ளாமல் தமிழ்ப்ளாக்ஸ்.காம் போல் புதியவை வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. மாற்று முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் தமிழ்வெளிக்கு பாராட்டு கலந்த வாழ்த்துக்கள்.

4 responses to “Tamilveli.com – Some UI Thoughts

  1. நல்ல review. வழிமொழிகிறேன். இவற்றில் சிலவற்றை நானும் தமிழ்வெளி நிர்வாகத்துக்கு சுட்டி எழுதி இருக்கிறேன்.

    tamilveliக்கு முன்னமே tamilblogs இருந்ததே? tamilblogs புதுசுங்கிற மாதிரி சொல்லி இருக்கீங்களே?

  2. —முன்னமே tamilblogs இருந்ததே? —

    சொல்ல வந்தது அதுதான்… சரியா வெளிப்படலை. 🙂

  3. I want to use tamil for email. Please let me know how to start.

cbraju -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.