சீனா-வா?
சைனா-வா?
சைனீஸ் சாப்பிடுவோம். ஆனால், சீன ஜனாதிபதி வந்தார் என்று தமிழ்த்தாள் வாசிப்போம்.
பக்கத்து சீட்டுகாரியிடம் நாளைக்கு விசாரிக்கணும்.
இதே மாதிரி
- துருக்கி, டர்க்கி;
- ஆஸ்திரேலியா, அவுஸ்திரேலியா
- ருசியா,ரஷியா
- செருமேனி,ஜெர்மனி
- எகிப்து, ஈஜிப்ட்
- பாலஸ்தீனம்,பாலெஸ்டைன்
உள்ளூர்காரங்க பாஷையா? நாவுக்கேற்ற மொழியா?











ருஷ்யாவில் ருஷ்யாவை ருஷ்யா என்றே அழைப்பதால் ருஷ்யா என்பதே சரியான ஸ்பெல்லிங், உச்சரிப்பு. ரொஸ்ஸியா என்றுகூட அவர்கள் சொல்லலாம். ஆனால் கண்டிப்பாக ரஷ்யா கிடையாது. அது ரொம்ப anglicised உச்சரிப்பு.
ருஷ்யாவில் சீனாவை எப்படி அழைக்கிறார்கள்?
ஃபார்ஃபார் (farfar – фарфор) என்று நினைக்கிறேன். ஏனென்று தெரியவில்லை! உதவி: பாபல்ஃபிஷ்.
பொதுவாக உள்ளூரில் எப்படி அழைக்கிறார்களோ அப்படி அழைப்பது தான் சரி. பொதுவாக, பல நேரங்களில் இது தமிழ் உச்சரிப்புக்கு ஒத்தும் இருக்கலாம். சீனாவில் சீன் என்று அழைப்பதாக நண்பன் சொன்னான். எனவே நம்ம சீனம் என்ற சொல் நெருங்கி வரும். chinese food தான் சாப்பிட முடியும். chineseஐ சாப்பிட முடியாது 🙂 எனவே, சீன உணவு, சீன அதிபர் என்றே சொல்லலாம்.
டர்க்கியைக் காட்டிலும் துருக்கி தான் உள்ளூர்ப் பெயருக்கு நெருங்கி வருவது.
செருமனி, ஜெர்மனி – இரண்டையும் விட்டு டாயிட்ச்லாந்து என்றே சொல்வது என் விருப்பம். அது தான் உள்ளூர்ப் பெயர்.