Sivappathikaram


  • நாயகியை அறிமுக இவ்வளவு விமரிசையாய், சமீபத்தில் பார்த்ததில்லை. சிம்ரன், இஷா கோபிகருக்கு அப்புறம் லட்சணம் + கவர்ச்சி; அஃப்கோர்ஸ் நடிப்பு.
  • வெளியே பனி கொட்டித் தள்ளிய மதியானம். இந்தியா உதை வாங்கி ‘அவுஸ்திரேலியா.. என் நாடு’ என்று ஜம்பம் சொல்ல முடியாத நேரம். இந்தப் படம்தான் மாட்டியது.
  • பழைய படம் பார்க்கும் வரிசையில் அடுத்து ‘வரலாறு‘ வந்திருக்கிறது.
  • அதுவும் மைக்ரேய்னோ ஒற்றைத் தலைவலியோ கொடுக்காமல் இருக்கணும்.
  • விஜய்காந்த் செய்ய வேண்டிய ரோலை, விஷாலுக்குக் கொடுத்துட்டாங்க.
  • பாட்டெல்லாம் அடிக்கடி வருது. நல்லாவும் இருந்தது; ம்யூசிக் இந்தியா ஆன்லைனில் கேட்கலாம். வீட்டில் பார்க்க உட்கார்ந்த மற்றவர்களை மாட்டினி ஷோவில் சோபாவில் மென்மையாய் தூங்க வைத்தது.
  • கிராமத்தில் நாயகி மட்டும் கப்ரி. மற்ற ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் தாவணி. தாவணி அழகு.
  • காலேஜுக்குள் போலீஸ் வந்தால் என்ன தப்பு? ஏன் ஓவராய் டென்சன் ஆனார்கள்?
  • லோக்கல் ரவுடி ரேஞ்சுக்கு சண்முகராஜன். அவருக்கும் பசுபதி மாதிரி ப்ரேக் கிடைக்கவேண்டும். அட்லீஸ்ட், டெலெகேட் செய்யுமாறு கதாபாத்திரம் அமைய வேண்டும்.

7 responses to “Sivappathikaram

  1. பஞ்ச் டயலாக்க்ல அருமையா விமர்சனம் எழுதியிருக்கிங்க பாபா.நீங்க சொன்னது முக்காலும் உண்மை.குறிப்பா /காலேஜுக்குள் போலீஸ் வந்தால் என்ன தப்பு? ஏன் ஓவராய் டென்சன் ஆனார்கள்?/..

    எத்தனை படத்தில் இதை இன்னும் வலியுறுத்துவார்கள்ன்னு தெரியலை:)

  2. நட்பைக் கூட கற்பைப் போல் எண்ணுகிறார்களோ 😉

  3. இறுதில வரும் வசனத்தை பத்தி ஒன்னும் சொல்லலயே, பாலா?

    அது மட்டும்தான் பிடித்திருந்தது. குறிப்பா அரசியல வர்ரவங்களுக்கு qualification தேவை-கிறதை சொல்லறது.

  4. நல்ல விமர்சனம். படம் பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டி விட்டீர்கள். ( விமர்சனத்தின் முதல் வரியை சொன்னேன். 🙂 )

  5. —அரசியல வர்ரவங்களுக்கு qualification தேவை-கிறதை—

    ஒரே disclaimer-filled டயலாகுங்க அது… குழப்பமா, பயந்து பயந்து சொல்றாரு

    படிப்பு, அனுபவம், வயது, எப்படி?

    உலகத்தில் ஜனநாயக நாடு எதிலும் பெரிய தகுதிப்பட்டியல் கிடையாதே…

  6. —ஆர்வத்தைத் தூண்டி விட்டீர்கள்.—

    சைட் எஃபக்ட் பற்றி முன்னாடியே சொல்லிட்டேன். ஒரு நிமிஷத்துக்காக, மூணு மணி நேர அவஸ்தை 😉

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.