Monthly Archives: பிப்ரவரி 2007

Provocative Proposals

மேற்கண்ட விளம்பரம் சென்னைவாசிகளை கோபத்தின் உச்சகட்டத்திற்கு அழைத்து செல்லலாம். க்ளைமாக்ஸ் என்றவுடன் மனதில் மெக் ரையான் நடித்த காட்சி மனதில் ஒடியது. (பார்க்க: YouTube – When Harry Met Sally)

தொடர்ந்து தினந்தோறும் இது போன்ற நிழற்படங்களைத் தாங்கியிருக்கும் நியு யார்க் நகர மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய இந்தப் பதிவு.

தொடர்பான பதிவுகள் & பட உதவி: டூ மச் மச்சீ… :: அலசல் | விடுபட்டவை: உச்சகட்டம்!

மேன்ஹட்டன் கடையின் நுழைவாயில்

  • Under the crotch

    கால்வின் க்ளெய்ன் அழைக்கிறது

  • Calvin Klein - kate on houston

    நாக்கு சுத்தமாக இருந்தால் சொல் பிழறாது

  • times square fav ad

    குழப்பம் அதிகரிப்பு: விக்டோரியாஸ் சீக்ரெட்டா (அல்லது) கால்வின் க்ளெய்னா?

  • Times Square

    கொட்டை வடிநீர்

  • Spoons

    ஆடை அங்காடியின் கோடை கால வரவேற்பு

  • Who Needs Porn?

    இளவட்டங்களின் கோட்டை – ஏபர்காம்பி ஃபிட்ச்

  • Advertisement as it is

    மது, மாது, சூது

  • Bacardi & Cola

அனைத்துப் படங்களையும் சுட்டினால், அசலாக எடுத்தவரின் ஜாகைக்கு இட்டு செல்லும்.

Ustad Bismillah Khan & Late Night Hindustani Music

பிச்சைப்பாத்திரம்: இசைக்க மறந்த கலைஞன்: “எப்போதும் டொய்ங்.. டொய்ங்.. என்ற சப்தத்தோடோ அல்லது யாரோ அழுகிறாற் போன்ற கர்நாடக சங்கீதமோ இரண்டாவது அலைவரிசையில் கேட்கக் கிடைக்கும்.”

என்னும் அவதானிப்பை உணர்ந்தவுடன் ‘அட… இது நான்தானே!’ என்று தோன்றியது. அப்படியே இசையில் திளைக்கும் சுகுமாரனின் நிலைக்கு செல்ல விழைந்தது. பகிர்ந்து கொள்கிறேன்.

கங்கையின் பெருமூச்சு – அஞ்சலி :: உஸ்தாத் பிஸ்மில்லா கான் : சுகுமாரன்

Ustad Bismillah Khanதிடீரென்று மேடைக்குள் சலசலப்பு. தபலாக்கள், கூடுதல் ஒலிபெருக்கிகள், பக்கவாத்தியக்காரர்கள் என்று மேடை உயிர்த்தது. சில நொடிகளுக்குப் பிறகு நிதானமான நடையுடன் ஒரு சின்ன உருவம் வந்து மையத்தில் அமர்ந்தது. விளக்குகள் ஒளிர்ந்தன. திரை மேலே சுருண்டது. பார்வையாளர் வரிசையிலிருந்து கரவொலி எழுந்தது. பிஸ்மில்லா கானின் முதுகு குனிந்து நிமிர்வது மட்டும் தெரிந்தது. பின்னர் நிசப்தம். சில நொடிகளில் ‘ங்ங்ஙே’ என்று ஒரு துளிப் பிரபஞ்ச விசும்பல் ஒலித்தது. அந்த விசும்பல் அதிர்ந்து பரவி ‘மியான் கிதோடி’யாகப் பெருக்கெடுத்தது. இரண்டு மணி நேரம் அந்த ஆனந்த விசும்பல் படிப்படியாகப் பெருகி அந்த அரங்கு முழுவதும் ததும்பிக் கொண்டிருந்தது.

சராசரி வானொலி நேயர்களைப் போல எனக்கும் ஒப்பாரி வாத்தியமாகத்தான் ஷெனாய் முதலில் அறிமுகமானது. தேசீயத் தலைவர்கள் மறைவின் போது துக்கம் கடைபிடிப்பதற்கான சங்கீதமாகத்தான் அந்த வாத்திய இசை அடையாளம் பெற்றிருந்தது. செவிப்புலன் பக்குவப்பட்டு இசையின் நுண்ணதிர்வுகளைப் பிரித்து அறியத் தெரிந்துகொண்ட அந்த அறியப்படாத நொடியில் பிஸ்மில்லா கான் என்னுடைய மானசீகக் கலைஞர்களில் ஒருவரானார். ஷெனாய் இசை எனக்குள்ளிருக்கும் இயற்கையின் சாரத்தை உணர்த்தும் சமிக்ஞையானது.

பொதுவாக இந்திய இசையின் இயல்பு இது என்பது என் தரப்பு. கர்னாடக இசையோ ஹிந்துஸ்தானி இசையோ சாதாரண ரசிகனிடம் உருவாக்குவது இந்த நெகிழ்வான நிலையைத்தான். துக்கமல்ல; மகிழ்ச்சியின் உச்சத்தில் மனித மனதுக்குள் நிகழும் இளக்கத்தைத்தான் இசை சாத்தியமாக்குகிறது என்பது என் நம்பிக்கை. இந்த நெகிழ்வைத்தான் பக்தியென்றோ ஆன்மீகமென்றோ வைதீக மனப்பாங்கு சொல்லுகிறது என்று தோன்றுகிறது. பக்தியோ ஆன்மீக வேட்கையோ கலவாத நாட்டார் இசையில் மனம் லயிக்க இந்த இளக்கம்தான் காரணம். சாகித்ய வடிவத்தை அதிகம் சாராத ஹிந்துஸ்தானி இசையில் நெகிழ்வுக்கான சாத்தியங்கள் அதிகம். அதில் உச்சபட்ச சாத்தியம் கொண்ட வாத்தியம் ஷெனாய் என்பதை நிரூபித்தவர் பிஸ்மில்லா கான். அவர் பிரபலப்படுத்தும் காலம் வரை ஷெனாய் ஒரு பக்கவாத்தியம் மட்டுமே. கோவில்களில் வாசிக்கப்படும் சடங்குக் கருவியாகவும் திருமணம் போன்ற விமரிசைகளுக்கான ஊதுகுழலாகவும் கருதப்பட்டு வந்தது.
.
.
.
காசி விசுவநாதர் ஆலயத்தின் கதவுகள் பிஸ்மில்லா கானின் வாத்திய இசையுடனேயே திறக்கும். சநாதமான வரலாறும் மூர்க்கமான மத அக்கறைகளும் பின்னணியாகவுள்ள நகரத்தில் இது ஆச்சரியம். ஆனால் இது தன்னுடைய பிரிய நகரத்தில் சிறப்பு என்று நேர்காணல்களில் பலமுறை பெருமிதமாகக் குறிப்பிட்டிருக்கிறார் பிஸ்மில்லா கான்.
.
.
பிஸ்மில்லா கானின் இசையில் ஒரு நீர்ச் சலசலப்பு தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதாகத் தோன்றும். கங்கையின் கரையிலிருந்து உருவான இசை என்பதனால் அந்தக் கசிவா? தெரியவில்லை. ஆனால் அவரது கச்சேரி பாணியை நீரோடு தொடர்புபடுத்திதான் இதுவரை ரசிக்க முடிந்திருக்கிறது. சீவாளியை ஊதிப் பரிசோதிக்கும்போது இசையின் துளிகள் கொட்டும். பின்னர் சற்று வலுத்து சாரலாகப் பரவும். இடையில் கேட்கும் தபலாவின் தும்தும். அதில் இலைகள் சிலிர்த்து அசையும். ஷெனாயிலிருந்து சின்னதும் பெரிதுமான மேகங்கள் உருவாகி தொடர்ந்து நகர்ந்தபடிப் பொழியும். விளம்பித் (ஆலாபனை) வாசிக்கும்போது சீராக மண்ணுக்கு இறங்கும். இலைகளும் கிளைகளுமாக நிற்கும் மரங்கள் இசையின் கனம் தாளாமல் நிதானமாக அசையும். த்ருத் (நிரவல்?) வாசிப்பின்போது எல்லா அசைவுகளும் வேகமாகும். இசையும் மழையும் மண்ணும் ஆகாயத்தின் குறுக்காகப் பாயும் நதியில் கரைந்தது போலாகும். முத்தாய்ப்பான கட்டத்தில் ஒரு சந்தோஷக் கேவலாக சங்கீதம் முதிரும். அப்போது பூமி தனக்குத் தானே செய்துகொள்ளும் பிரார்த்தனையாக மாறும். இந்தக் கசிவு வாத்தியத்தினுடையதா? வாசிப்பவனுடையதா? ரசிப்பவனுடையதா? என்று வியக்க வைப்பதுதான் பிஸ்மில்லா கானின் பாணி.

நன்றி: உயிர்மை; செப். 2006