பத்து பொருட்களை எடுத்துக் கொள்வது. ஒவ்வொன்றிலும் பத்து பத்தாக சேர்ப்பது என்று முடிவானது. சாப்பாடு அயிட்டங்கள் முன்னிலை வகித்து, சாக்லேட், cereal என்று தொடங்கியது. திடீரென்று பாதை மாறி விளையாட்டு காய்களைக் கோர்க்கலாம் என்று முடிவானது.
முதலில் செட் சேர்க்கும் சீட்டாட்டம்
இன்னொரு வகை சீட்டுக்கட்டு – ஃபிஷ் என்னும் கண்டுபிடிப்பு விளையாட்டு
சிறிய பொம்மை பலூன்கள்
குட்டி அடுக்குமாடி கட்டிட செங்கல்
அலைபாயுதே படப்பாடல் ஞாபகத்துக்கு வரலாம்
ஜெம் என்பதற்கு அகரமுதலியைப் புரட்டி அர்த்தம் பார்க்க வைத்தாள்
வண்ண வண்னக் கோலங்கள்
செக்கர்ஸ் காய்கள்
சதுரங்கம் இல்லை… அது மாதிரி இன்னொரு ஆட்டம்
எல்லாவற்றையும் ஒட்டும் படலம்
வெற்றிகரமான நூறாவது நாள்
முந்தைய பதிவு: E – T a m i l : ஈ – தமிழ்: Help – 100 days of Kindergarten : Ideas Required
எண்ண மழையாகக் குவித்து எங்களுக்கு உதவிய இலவசக்கொத்தனாருக்கும், ஆதிரை, சிந்தாநதி, பொன்ஸ், செந்தழல் ரவி, பாலராஜன்கீதா, சர்வேசன், ஜி, பத்மா அர்விந்த், சேதுக்கரசி & மற்றவர்களுக்கும் வணக்கங்கள்.











அப்போ கொத்தனார் ஐடியா ஒர்க் அவுட் ஆகி இம்ளிமெண்ட் செய்யப்பட்டதா ?
சூப்பர்…:)))))
வெற்றிகரமா 100 நாள் புராஜக்ட் நிறைவுபெற்றது… sanjitha – பேரு நல்லா இருக்குங்கோ..
நானெல்லாம் கல்லூரில தான் (அதுவும் முதுகலையில் தான்!) புராஜெக்ட் எல்லாம் பண்ணியிருக்கேன்.. இதெல்லாம் பார்த்தா பொறாமையே வந்துடும்னு நினைக்கிறேன் 🙂 ரொம்ப வண்ணமயமா இருக்கு. இந்த ஊருல பள்ளிக்கூடத்துல கிரியேட்டிவிட்டிக்கு தான் என்ன ஒரு முக்கியத்துவம் தராங்க!
சஞ்சிதாவின் ப்ராஜெக்ட் நல்ல வரவேற்பைப் பெற என் வாழ்த்துக்கள்.
அப்புறம் சேது, ரொம்ப கவலைப்படாதீங்க.இந்த ஊரில் மூச்சு விடுவதையே ப்ராஜெக்ட்ன்னு சொல்லிடுவாங்க. பள்ளிக்கூடத்தில் படிப்பு இருக்கோ இல்லையோ ப்ராஜெக்ட் கட்டாயம் இருக்கும்.
அப்படித்தான் ஒரு முறை கணினி நண்பர் ஒருவருடன் பேசும் பொழுது ப்ராஜெக்ட் எப்படி இருக்கு எனக் கேட்கப் போக, பக்கத்தில் இருந்த என் மகன் உடனே, “நீங்களும் ப்ராஜெக்ட் பண்ணறீங்களா? எந்த ஸ்கூல்? எந்த க்ரேட்?” எனக் கேட்க, ஒரே களேபரம்தான் போங்கள்!!
(நான் எழுதியதிலேயே பெரிய வாக்கியம் இதுதான் என நினைக்கிறேன்!)
வாழ்த்துக்கள் சஞ்சிதாவுக்கு. நல்ல திட்டம்
//பள்ளிக்கூடத்தில் படிப்பு இருக்கோ இல்லையோ ப்ராஜெக்ட் கட்டாயம் இருக்கும்//
🙂 நான் சின்ன வயசுல ஏதும் புராஜெக்ட் பண்ணியிருக்கேனான்னு ஞாபகப்படுத்திப் பார்த்தேன். 2வது அல்லது 3வது வகுப்பில் படிக்கும்போது அட்டைகளை வச்சு மாடல் செய்யற வேலை கொடுத்திருந்தாங்க. படங்களை அட்டையிலிருந்து வெட்டி, மடக்கவேண்டிய இடங்களில் மடக்கி 3D மிருகங்கள் மாதிரி மாடல்கள் செய்யறது. ரொம்ம்ம்ம்ப சுவாரசியமா இருந்தது. அப்பாவைத் தவிர எல்லாரும் சேர்ந்து பண்ணினோம்னு நினைக்கிறேன் 🙂 இதே மாதிரி அட்டை மாடல் புராஜெக்ட் மறுபடியும் அடுத்த வருசமும் கொடுப்பாங்கன்னு நினைச்சு ஏமாந்து போனது தான் மிச்சம். இதெல்லாம் ஒரு பள்ளிக்கூட activity-னு தான் நினைச்சேனே தவிர இதுக்குப் பேர் புராஜெக்டுன்னு அமெரிக்கா வந்தப்புறம் தான் தெரிஞ்சுது 🙂
நம்மூர்ல முதுகலைப் படிப்புக்கே பிராஐக்ட் எல்லாம் சமீபத்தில் தான் வந்தது.
முன்னால பள்ளிக்கூடத்தில் botany க்கு herbarium தயாரிக்கிற வேலை இருந்தது. இப்போ social science க்கு கூட album project இருக்கு