என்னை புதிய ப்ளாகருக்கு மாற உதவியவர்கள்
பாலபாடம் (அ) அரிச்சுவடி:
- Blogger Help : Page Elements Tags for Layouts | Blogger Help : Layouts Data Tags
படித்ததும் ஒன்றும் புரியாது. எனவே…
- தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்: ப்ளாக்கர் பீட்டாவுக்கு டாட்டா
இது படித்தவுடன், எல்லாமே தெரிந்த விஷயமாக இருக்கிறதே… முஸ்தீபு போதும்; கோதாவில் நேரடியாக குதிக்க:
- பொன்ஸ் பக்கங்கள்: புது ப்ளாக்கருக்கு மாறலாம் வாங்க..
செஞ்சாச்சா? வார்ப்புரு மாற்றலாம் வாங்க:
- வைகை: How to convert new blogger
பின்னூட்டங்களில் புரியாத மொழி மிரட்சியைப் போக்கிடுங்க:
- கைமண் அளவு: புது ப்ளாகரில் பழைய பின்னூட்டங்கள் – தீர்வு
இது வரைக்கும்தான் ‘செய்தே‘ தீரவேண்டியவை. இனி வருபவை, ‘இன்டீரியர் டெகரேசன்’ வகை…
பதிவில் புன்னகைப் பூக்க வழி 1:
- The Last Word (Beta): Blogger Smilies! • Aditya Mukherjee
பதிவில் புன்னகைப் பூக்க வழி 2:
- நான் கவனித்தவை.. சில கருத்துக்கள்: Yahoo Smileys ஐ பிளாகர் பதிவுல சேற்க்க முடியும். :)>-
சமீபத்திய பின்னூட்டங்களை முகப்பில் காட்ட:
- Hoctro’s Place: How to show 25 of your Recent Comments or Posts in your Blog
தங்கள் வலைப்பதிவுக்குள் கூகிள் தேடலை சொருக:
- lj_nifty: Google blog search searches and excerpts from LiveJournal
மறுமொழிக்கு பதில் போட்டதை அறிவிக்க & வந்த பதில்களை வண்ணமயமாய் வகுத்துக் காட்ட:
- Hackosphere: Author comment highlighting and notification
- கூடவே இவற்றையும் மறக்காமல் இணைத்து விடவும்!
- Labels – ஒவ்வொரு பதிவையும் எழுதி முடித்தவுடன், குறிச்சொற்களால் எளிதில் வகைப்படுத்த முடியும்.
- Feed – தேன்கூடு செய்தியோடை, தமிழ்ப்ளாக்ஸ், கில்லி போன்ற பிற பதிவுகளின் தலை ஐந்து தலைப்புகளை உங்கள் வார்ப்புருவில் கோர்க்கலாம்.
- HTML/JavaScript – புள்ளிவிவரங்களைக் கொடுக்கும் statistics நிரலித் துண்டை இணைத்து விடவும்.
இதெல்லாம் போதாது… நான் நினைப்பது இதுக்கும் மேல என்றால்…
- Category:New Blogger – Bloggerhacks
உணர்வு (அதாவது இன்ஸ்பிரேசன்): விடுபட்டவை: NEW BLOGGER புதிய ஓர் அனுபவம்
ஆக்கம் (அதாவது பிட் ஒட்டுவது): அடியேன்
அனைவருக்கும் நன்றி 🙂











நன்றி! நன்றி!
முழுவதும் நான் மாற்றவில்லை. விரைவில் செய்துவிடுவேன்.
🙂
எல்லா வசதியும் கிடைக்கிறதுதான். ஆனால் எல்லாவற்றையும் இணைத்துவிட்டால் வேகம்? எப்படி இருக்கும் என்று யோசனையாக இருக்கிறதே?
நல்ல பயனுள்ள தொகுப்பு பாலா. உதவியாக இருக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
அருமையான கலெக்ஷன்….
பாபா…
your old blog is better than this..pls arrange the items properly baba..i am not able find where the post starts and ends…its my suggestion only
பாபா,
நல்லாருக்கு.. உதவிப் பக்கத்தில் மீள் பதிஞ்சிக்கலாமா?
//எல்லாவற்றையும் இணைத்துவிட்டால் வேகம்? எப்படி இருக்கும் //
சிந்தாநதி, உங்க blogspiritஐ விட வேகமாத் தான் இருக்கு :))))
என்னுடையதும் முழுதும் மாறவில்லை. சீக்கிரம் மாறிவிடுவேன். தகவலுக்கு நன்றி
சென்ஷி
@சிறில்
—முழுவதும் நான் மாற்றவில்லை. விரைவில் செய்துவிடுவேன்.—
200-வது பதிவுக்குள் மாறிடுங்க 🙂
பல பயன்கள்!
@ஜி
நீங்க எல்லாம் ரொம்ப காலம் முன்னாடியே மாறின ஆளு… நன்றிங்க 🙂
@சிவா
—உதவியாக இருக்கும்.—
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும். அப்பொழுது, சுருக்கமாகத் தேவைப்படுபவர்கள் இந்தப் பதிவையும், விரிவு கோருபவர்கள், விலாவாரியானதையும் படிக்க சொல்லலாம்!
@சிந்தாநதி
—எல்லாவற்றையும் இணைத்துவிட்டால் வேகம்—
நீங்களே பாருங்களேன்: Website Speed Test
# Domain name Size Load time (secs) Average Speed per KB
01 etamil.blogspot.com 170.72 KB 1.35 seconds 0.01 seconds
02 valai.blogspirit.com/index.html 67.8 KB 1.37 seconds 0.02 seconds
03 snapjudge.blogspot.com 143.7 KB 35.28 seconds 0.25 seconds
04 bsubra.wordpress.com 248.68 KB 1.9 seconds 0.01 seconds
05 http://www.google.com 3.76 KB 0.36 seconds 0.1 seconds
இன்னொன்றில்: Website Goodies – Website Speed Test
URL: http://valai.blogspirit.com/index.html
Load Time: 13.077 seconds
Page Size: 67.8 kb
URL: http://etamil.blogspot.com
Load Time: 7.1319 seconds
Page Size: 161.53 kb
* ‘அஜாக்ஸ்’ தொழில் நுட்பத்தினால், தேவையானவற்றை, எப்பொழுது வேண்டுமோ, அப்பொழுது வாங்கிக் கொள்கிறது.
* புகைப்படங்களின் அளவு சிறியதாக இருந்தால், எந்தப் பக்கமும் வேகமாக வந்துவிடும்.
* மீயுரை (html & Javascript) துண்டுகளைக் குறைவாக வைத்திருந்தால், வலையகம் வேகம் பிடிக்கும்.
புதிய ப்ளாகரிலும் அன்னநடை நடக்க வைப்பது சாத்தியமே. எல்லாம் வார்ப்புருவின் கையில் இருக்கு?!
@சென்ஷி
தைரியமாக மாறுங்க. கிட்டத்தட்ட அதே இடைமுகத்துடன், துரிதமாக இயங்குகிறது.
@பொன்ஸ்
—உதவிப் பக்கத்தில் மீள் பதிஞ்சிக்கலாமா?—
அவசியம் இணைக்கவும். நன்றி.
@கார்த்திக்
—your old blog is better than this..—
எனக்கும் அந்த மாதிரி தோன்றியதுதான். ரொம்ப நாளாக பழைய வேட்டி சட்டை. இப்பொழுது அரைக்கால் சட்டை 😉
—not able find where the post starts and ends—
எப்படி சரி செய்யவேண்டும் என்று கற்றுக் கொண்டவுடன், உடன் சரி செய்கிறேன். இப்பொழுது அனைத்துப் பதிவுகளும் கலந்துகட்டி கூட்டாஞ்சோறாக, ஜோதியில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறது!
பாபா,
XML கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டா இந்த புது பிலாக்கரிலே ரவுண்ட் கட்டி அடிக்கலாம் 🙂
ஒரு பயனுள்ள சுட்டி
அவசியமான ஒரு பக்கம். தொகுத்தளித்தமைக்கு நன்றிகள்.
@ராம்
மிகவும் உபயோகமான டுடோரியல். பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் : )
@செயபால்
__/\__