2006-இன் நாயகர் யார்?
டைம் போன்ற வெகுஜன ஊடகங்கள் ‘நீங்கதான்‘ (படிக்க: பொன்ஸ் பக்கங்கள்: டைம் இந்த வருட மனிதர் 2006) என்று வலைப்பதிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. மற்றொரு பக்கத்தில் கட்டுப்பெட்டியான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ‘அவங்க தண்டம்‘ (படிக்க: OpinionJournal – Extra: “Written by fools to be read by imbeciles”) என்று நற்சான்றிதழ் வழங்குகிறது.
காலை எழுந்தவுடன் கண்ணை மூடிக் கொண்டே உள்ளங்கை மஹாலஷ்மி தரிசிப்பது போல், கண்மூடித்தனமாக வலைப்பதிவு படிப்பதால், என்னுடைய நாயகர் பட்டியலில் blogகளுக்கு இடம் கிடையாது.
தண்டோரா – இது கண்டதை சொல்லும் – » Bye Bye 2006: TamilNadu Top Keywords முல்லைப்பெரியாறு, கேப்டன், சிக்குன்குனியா, நுழைவுத்தேர்வு, சிலைகள், தேர்தல் என்று முக்கியமானவற்றை தொட்டு செல்கிறது. நான் மார்ச் (படிக்க: March: patterns, trends and news) மாதத்திற்கு மட்டும் இட்டிருக்கிறேன்.
விஜய்காந்த்தாலோ சிலைகளாலோ சாதாரண பொதுஜனத்திற்கு எவ்வித உபகாரமோ உபத்திரவமோ இல்லை.
அடுத்த கோடையில் இன்னொரு இடைத்தேர்தல் போல், மற்றொரு டெங்கு வந்தால் விபரீதத்தை உணரலாம்.
தேர்தல் முடிந்தவுடன் ஸ்டாலின் முதலமைச்சராகவோ, கூட்டணி ஆட்சியோ வந்திருந்தால் ஆச்சரிய அல்லது முதல் நிகழ்வாக வித்தியாசமாகி இருக்கும். மற்றொரு அமைச்சரவை. இன்னும் நிறைய carrotகள். உள்ளாட்சித் தேர்தலில் stickகள்.
வலைப்பதிவுகளுக்கு எதிர்மறை செய்திதான் தீனி. தப்பு செய்தது, கால் சறுக்கியது, விமர்சனத்தில் விளாசுவது கைவந்த கலை. அதற்கு ஏற்ப திறம் சிறிதுமின்றி கையாலாகத்தனம் மிளிர்ந்த தருணங்கள் என்று பார்த்தால் பூச்சிகளும் பயங்கரவாதமும் விசுவரூப தரிசனம் தருகிறது.
2. Reactions to Varanasi Blasts
3. Pakistan ‘role in Mumbai attacks’
5. Attacks continue in India: இந்தியாவில் தீவிரவாதம் & மும்பை குண்டுவெடிப்புகள் (கால அட்டவணை)
தீவிரவாதத்தை ஒன்றும் செய்ய முடியாது.
குழப்பத்தை காசு செலவில்லாமல் உருவாக்கலாம். தடுப்பது மிகவும் கஷ்டம். எங்கோ ஒரு பாலத்தை வெடி வைத்து தகர்த்தால் போதும். அனைத்து பாலங்களுக்கும் காவலாளிகளின் தேவை தோன்றும். ஒரு தியேட்டருக்குள் குண்டு வீசினால் போதும். எல்லா பொது இடத்திலும் நுழைவதற்கு முன் சோதனை போடும் அவசியம் உருவாகும்.
– Counterinsurgency Warfare: Theory & Practice by David Galula, 1964
(படிக்க: Problems in Iraq / பிரச்சினை 2005 – ஈராக்)
ஆனால், கடலில் விழும் மழைத்துளியெல்லாம் உப்புநீராவது போல் கடித்த இடமெல்லாம் நோய் பரப்பும் கொசு?
என் குடும்பத்திலேயே நான்கு பேருக்கு சிக்குன்குனியா வந்ததாலும், நண்பர்கள் இருவரின் குடும்பத்தில் சிக்குன்குனியாவினால் இறப்புகள் நேர்ந்ததாலும் அதற்கு முக்கியமான இடம் உண்டு. மத்திய சுகாதார மந்திரியாக தமிழர் அன்புமணி ராமதாஸ் இருந்தாலும், தமிழ்நாட்டு கொசுக்களை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது மேலும் துயரம்.
இந்த மாதிரி தொற்று நோய் பரவல் சூரத்தில் ப்ளேக் வந்த மாதிரி, ஆங்காங்கே நுழைந்த சார்ஸ், மீண்டும் எட்டிப் பார்த்த கோழிக் காய்ச்சல் என்று வந்த பின் காப்போன் strategy கூட எதுவும் இல்லாத இந்தியாவின் ஜனத்தொகையை கணிசமாகக் குறைக்கிறது.
அமெரிக்காவில் கத்ரீனா சூறாவளியாய் தாக்கியது. செய்வதறியாது ஸ்தம்பித்தார்கள். அதற்குப் பிறகாவது ஊடக கவனிப்போ, அரசியல் நிர்ப்பந்தமோ? ஏனோதானோவென்று செயல்திட்டங்களும் வியூகங்களும் வகுத்து dry-run ஆக நடக்கப்போகும் ourbreakகளுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முறைப்படுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே இருந்த் ஓட்டைகளை சரிபார்த்து செப்பனிடுகிறார்கள்.
இந்த வருடத்து நாயகன்: கொசு.
News | Mosquito | Healthcare










