
இன்றைய தினம் அமெரிக்கவாசிகளுக்கு மிக முக்கியமான தினம்.
டிசம்பர் 6-ஐ சொல்லவில்லை. டிசம்பர் ஐந்து.
1933-ஆம் ஆண்டு. எஃப்.டி.ஆர் என்று செல்லமாக அழைத்து, பெரிய நினைவுச்சின்னத்தையும் இரண்டாம் உலகப் போருக்காகவுமே அறியப்பட்ட ஃப்ரான்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்டின் முனைப்பினால் இன்றுதான் மதுவிலக்கு நீங்கி, ஆல் காப்போன் மட்டுமே காய்ச்சிய சாராயம் அதிகாரபூர்வமாகப் பெருக்கெடுத்தோடியது.
அன்று முதல் பரவலான சில அறிகுறிகளும் அதற்கான தீர்வுகளும்:
1. உபாதை: குளிர்பாதங்கள்
காரணம்: பாட்டிலை சரியாகப் பிடிக்கவில்லை (காலில் பியர் கொட்டுகிறது).
நிவர்த்தி: கையில் இருக்கும் கிளாஸை நேர் செய்யவும். புட்டியின் திறந்த பாகம் மேலே பார்த்தபடியும், மூடிய பாகம், தரையை நோக்கியும் அமைந்திருத்தல் அவசியம்.
2. உபாதை: உங்கள் முகத்துக்கு நேராக ஒளிவெள்ளம் பாய்கிறது.
காரணம்: கீழே விழுந்துவிட்டீர்கள்.
நிவர்த்தி: தரைக்கும் உங்களுக்கும் உள்ள கோணம் 90 டிகிரியாக இருத்தல் அவசியம்.
3. உபாதை: தரை மசமசவென்று இருக்கிறது.
காரணம்: காலியான கிளாஸ் வழியாக பார்க்கிறீர்கள்.
நிவர்த்தி: சரக்கை கடகடவென்று நிரப்பவும்.
4. உபாதை: தரை நடந்து, உங்களைக் கடந்து செல்கிறது.
காரணம்: நீங்கள் தரதரவென்று இழுத்து செல்லப்படுகிறீர்கள்.
நிவர்த்தி: எங்கே அழைத்துப் போகிறார்கள் என்று கேட்டு வைத்துக் கொள்ளவும்.
5. உபாதை: அருகாமையில் அமர்ந்திருப்பவர் அளவளாவினாலும், எதிரொலியாக ஒசைக் கேட்கிறது.
காரணம்: காதில் கோப்பையை வைத்திருக்கிறீர்கள்.
நிவர்த்தி: பைத்தியக்காரி போல் நடந்துகொள்வதை நிறுத்துங்கள்.
6. உபாதை: அறை எக்குத்தப்பாக ஆடுகிறது. அனைவரும் வெள்ளுடை தரித்திருக்கிறார்கள். பழுதுபட்ட எம்பி3-ஆக இசை மீண்டும் மீண்டும் ரிபீட் ஆகிறது.
காரணம்: நீங்கள் ஆம்புலன்ஸில் இருக்கிறீர்கள்.
நிவர்த்தி: அசைய வேண்டாம். படாத இடத்தில் பட்டுவிடப் போகிறது.
7. உபாதை: உங்கள் குடும்பத்தினர் அனைவரும் அன்னியர் போல் புதிதாக தோன்றுகிறார்கள்.
காரணம்: வீடு மாறி வந்துவிட்டீர்கள்.
நிவர்த்தி: தங்கள் உறைவிடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டுகோள் வைக்கவும்.











\”4. உபாதை: தரை நடந்து, உங்களைக் கடந்து செல்கிறது.
காரணம்: நீங்கள் தரதரவென்று இழுத்து செல்லப்படுகிறீர்கள்.\”
ரசிக்கும்படியான நகைச்சுவை.
\”காரணம்: காதில் கோப்பையை வைத்திருக்கிறீர்கள்.
நிவர்த்தி: பைத்தியக்காரி போல் நடந்துகொள்வதை நிறுத்துங்கள்.\”
‘பைத்தியக்காரி போல்’ என்பதற்கு பதிலாக, ‘பைத்தியம் போல்’ என்று பொதுவாக எழுதியிருக்கலாமே?
பைத்தியக்காரன் போல் என்று தோன்றியதை அடித்து (ஒரு சில்லறைக்காகத்தான்) திருத்தினேன். கோமாளி, பைத்தியம், அசடு என்று எல்லாம் பொருத்தமே.
நன்றி திவ்யா.
Humor week from Baba. Seems to be going very well. 🙂
This one tops it all.
சிறில்,
இளைய தளபதிக்கு தெலுங்கு ரீமேக் இஷ்டம் என்பது போல், இந்த சரக்கு… ஹாலிவுட் ரீமேக் : )
எல்லாப் புகழும் அசல் ஆங்கில வசனங்களுக்கே ; )
பாலா அவர்களே
நமக்கு ரீசெண்டா வந்த மெயில வெச்சு இதே மேட்டர ட்ரான்ஸலேட் பண்ணி நம்ப சைட்ல போட்டுகீறோம்.
http://araiblade.blogspot.com/2006/12/blog-post_12.html
அப்பாலதான் இதே மேட்டர நீங்க ஏற்கனவே போட்டு கீறீங்கோன்னு தெரிஞ்சுது..
நீங்கோ ஒரிஜினலா ராவா கொடுத்துக்கிறீங்கோ..
நான் ஏழுல ஒண்ண உட்டுட்டு நாலு புச்சா இன்குளூட் பண்ணி ஒரு மிக்ஸா இந்த சரக்க குட்துகீறேன்..
நீங்கோ சொன்னா மாதிரி எல்லா புகயும் ஒரிஜினல் இங்லீஷ் சரக்குக்குதான்..
சரக்கு ரைட்ஸ் கேக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.
தாங்ஸ்…. :))))
அன்போட
அரைபிளேடு
பிளேடு __/\__