சுத்தம் சோறு போடும்


பாழாகலாமா பொதுக் கட்டடங்கள் – யோ. கில்பட் அந்தோனி: “சுற்றுப்புறத்தூய்மை: கட்டடத்தின் பலமும் நலமும் அதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதைப் பொறுத்து அமையும். ஆனால் ஒரு பொதுக்கட்டடத்தைப் பார்க்கும்போது அதில் காணப்படும் குப்பைகள், ஒட்டடைகள், அழுக்கடைந்த சுவர்கள் மற்றும் தரைகள், நாற்றமெடுக்கும் கழிப்பறைகள், உடைந்த குழாய்கள், உடைந்த நாற்காலி – மேசைகள், கழிவு நீர் தங்குமிடங்கள் ஆகியவை நமது மனத்தைச் சம்மட்டி கொண்டு தாக்குவதுபோல் இருக்கின்றன. இதைச் சரிசெய்ய ஒரு வருடத்தில் மூன்று நாள்கள் தனித்தனியாக தூய்மைப் பணிக்கு ஒதுக்கலாம்.”

அழுக்கான கணினித் திரையை தினந்தோறும் பார்த்தால் கண் கெட்டுவிடும். வாங்கிய புதிதில் பளபளா. இப்போதோ கேபிள்காரரும் ஈ.பி.யும் தோண்டித் துருவிய சாலையாக வெடிப்புகள். மேல்துண்டை எப்போதுமே போட்டிருந்தாலாவது, தூசியில் இருந்து தடுத்திருக்கும்.

உங்களுடைய பத்து வருட பழைய திரையை புத்தம்புதியதாக ஆக்க வேண்டுமா?

உங்கள் வெண்திரையை பளிச்சிடுவதற்கு செல்லும் முன்…

இசை அமுது :: பாரதிதாசன்தூய்மை

தூய்மை சேரடா தம்பி — என்
சொல்லை நீபெரிதும் நம்பித்

தூய்மை சேரடா தம்பி!

வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும் மேலும்மேலும்

தூய்மை சேரடா தம்பி!

உடையினில் தூய்மை — உண்ணும்
உணவினில் தூய்மை — வாழ்வின்
நடையினில் தூய்மை — உன்றன்
நல்லுடற் றூய்மை — சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும்நாள் ஆகும் நீஎன்றும்

தூய்மை சேரடா தம்பி!

துகளிலா நெஞ்சில் — சாதி
துளிப்பதும் இல்லை — சமயப்
புகைச்சலும் இல்லை — மற்றும்
புன்செயல் இல்லை — தம்பி
அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
அச்சம் போகும்! நீ எந்நாளும்

தூய்மை சேரடா தம்பி!

இனி… நயா அணா செல்வில்லாத வழி:





| |

12 responses to “சுத்தம் சோறு போடும்

  1. Unknown's avatar கோவி.கண்ணன் [GK]

    //இனி… நயா அணா செல்வில்லாத வழி:
    //

    தலைவா ! உன் வழி தனி வழி !

    படங்கள் சூப்பர் !

    என்னோட கனனி திரை தூய்மை ஆகிடுச்சி !

    🙂

  2. பாலா!

    படங்கள் படு ஜோர்…

  3. Unknown's avatar நாமக்கல் சிபி

    ஆஹா! என்னோட ஸ்கிரீன் லெஃப்ட் சைடெல்லாம் சுத்தமாயிடுச்சே!

    சுத்தம் சோறு போடும் சரி! குழம்பு யாரு ஊத்துவா?

  4. @கோவி

    இலவசமாய் துடைச்சு விட்டதுக்கு, பார்த்துப் போட்டு ‘டிப்ஸ்’ கொடுங்க சாரே ; )

  5. @சிபி

    —குழம்பு யாரு ஊத்துவா?—

    அடுத்து பொரியல், மோர் மிளகா என்று ‘தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடிச்சுப் பார்க்கறீங்களே’ : P

  6. @மங்கை

    அவை யாவும் யாஹூ க்ரூப்ஸ் : Chumma என்னும் மின்னஞ்சல் குழுவில் வந்த படங்கள். நாளொன்றுக்கு 10/15 மடல் அனுப்புவார்கள்.

  7. ஐயோஓஓஓஓஓஒ……..என்னோட லேப்டாப் எல்லாம் டாக்ஸ் எச்சி பண்ணீருச்சி…… :-((((((((((((((((

    (சோறு கொழம்பெல்லாம் வேண்டாம். வெயிட் போடும். டிரை ரொட்டி சப்ஜி இருந்தா குடுங்க)

  8. யப்பா பாபா

    ஒரே நாய் வழிசல்
    முகம் கழுவிட்டு வந்தேன்

  9. Unknown's avatar பழூர் கார்த்தி

    கடி பதிவு – யு டூ பாபா ??

    <<>>

    என்னோட திரை டல்லாயிடுச்சே, வேற dogsஐ அனுப்ப முடியுமா ??

    <<>>

    நான் யாருன்னு கண்டுபிடிச்சாச்சா ???

  10. @ஜி.ரா.

    —வெயிட் போடும். டிரை ரொட்டி சப்ஜி இருந்தா குடுங்க—

    ஓ… இதுதான் உங்க இளம் தோற்றத்தின் ரகசியமா ; )

  11. @மதுமிதா,

    –முகம் கழுவிட்டு வந்தேன்—

    அட… நம்மவர்களே இலவசமாய் செய்து தந்திருக்கிறார்கள். திரும்பவும் இன்னொரு வாஷ் எதற்கு : )

  12. @பழூர்,
    —கடி பதிவு – யு டூ பாபா—

    நன் என்றுமே பாப்பா ; )

    —நான் யாருன்னு கண்டுபிடிச்சாச்சா—

    புது ஃபோட்டோ…
    புதுப் பேரு…
    புதுசு கண்ணா புதுசு

    நல்லா இருக்குங்க

பழூர் கார்த்தி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.