Daily Archives: ஓகஸ்ட் 31, 2006

Something like Sadness

பதிவெழுத உட்காரும்போது போலித்தனம் ஒட்டிக்கொள்வதாக ‘உருப்படாதது‘ நாராயண் (படிக்க: உருப்படாதது: பைனாகுலர் – ஏப்ரல் 2வது வாரம்) எழுதியிருந்தார். அந்தரங்கத்தில் என்ன நினைக்கிறேன் என்று வெளியில் தெரிவதில்லை. பிறருக்கு தெரியாது என்றால் என்ன சொல்வேன் என்று மறைப்பதில் சுவாரசியம் காணுகிறேன்.

கழிவறையில் அந்தரங்கமாக பேசும் சமயத்தில் மைக்கை அணைத்து வைக்க மறந்தார் கைரா ஃபிலிப்ஸ். (படிக்க: Most men are assholes – Oops! CNN Airs Anchor’s Girl Talk Over Bush Speech | NewsBusters.org; பார்க்க: Hot Air » Blog Archive » Potty break mic snafu: CNN’s Phillips chats in the loo during Bush speech)

நேருக்கு நேராக சொல்ல முடியாவிட்டால் இப்படி வலைப்பதிவுகளில் எழுதி பட்டி தொட்டியெங்கும் அறிவிக்க முடிகிறது. பெயர் குறிப்பிடாமல் பொத்தாம்பொதுவாக எழுத முடிகிறது. பதிவெழுதுவது சுத்திகரிப்பு என்பதை விட காழ்ப்பின் வெளிப்பாடுகளாகவே அமைத்து வைத்திருக்கிறேன். நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும் (படித்து மகிழ: திரை இசைத்தமிழ்: 78. இது என்ன கடவுளே! புரியாது கடவுளே!) என்பதை இரட்டுற மொழிதலாக பதிவருக்கு வைத்துப் பார்த்தாலும் பொருந்துகிறது. இங்கு ‘சில‘, ‘நான் யாரை சொல்கிறேன் என்று தெரியுமல்லவா?‘ போன்ற அடைமொழிகள் கொடுப்பதன் மூலம் இந்தப் பதிவும் இதே வகையில் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.

சே! ஒரு நிமிஷத்துக்கும் அடுத்த நிமிஷத்துக்கும் எத்தனை பெரிய நிம்மதி வித்தியாசம்!‘ (முழுவதும் படிக்க: தூணிலும் இருப்பான்) என்பார் பா. ராகவன். உல்லாசபுரியில் மகிழுந்துப் பயணம். சிவப்பு விளக்கு முடிந்து பச்சை எரிய ஆரம்பிக்கிறது. திரும்ப எத்தனிக்கிறேன். கார் மக்கர். அங்கேயே நின்று விட, ‘எனக்கு மட்டும் ஏன் ஆண்டவா’ என்று சின்ன விஷயத்துக்கும் இயலாமை கலந்த கோபம் எட்டிப் பார்த்து சினமுற வைக்கிறது.

‘பட்ட காலே படும்’, என்பதாக மதுமிதா உங்க கணினி மட்டும் வைரஸ், லொட்டு லொசுக்கு தாக்காம எப்பவுமே சரியாக இருக்குமா என்று எழுதி முடித்த தட்டச்சுப் பலகை கூட காய்வதற்கு முன் ஐந்தாண்டுகளாக உறவாடிய மடிக்கணினி மரித்தது. என்றோ நடந்தே தீறும் என்று அறிந்திருந்தாலும், தேவையான கோப்புகளை பிறிதொரு இடத்தில் பாதுகாப்பாக சேமித்து வைத்திருந்தாலும், பிரிவுகள் துக்ககரமானவை. மனிதனைப் போல் மடிக்கணி் துர்நாற்றமெடுத்து, நிழல்கள்: சொக்கலிங்கத்தின் மரணம் போல் கதைக்களனாக அமைவதில்லை.

இன்னும் சிதறலாய் சில சம்பவங்கள். எப்படி இயல்பாய் கோர்த்து விடுவது என்று தெரியாமல் தொடரப் போகிறேன். மலேசியாவை களமாகக் கொண்டு ரெ கார்த்திகேசு (மரத்தடி.காம்(maraththadi.com) – Articles by this Author) நிறைய எழுதுவார். புதிதாக பிறக்கும் குழந்தைக்கு கருப்பசாமி என்று பெயர் வைக்க முடியாது என்பதை இடைச்செருகலாகக் கொண்ட நிகழ்வு மலேசியாவை பின்புலமாகக் கொண்ட கதையில் வருமா என்று பார்க்கலாம். (படிக்க: Lost in Media: Malaysia outlaws unsuitable names)

அமெரிக்காவில் திங்கள் அன்று உழைப்பாளர் தினம். உழைப்பவர்கள் எல்லாம் பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள்தானே? பின் எதற்கு அமெரிக்கர்களுக்கு விடுமுறை என்று நக்கல் செய்யலாம். அதன் பிறகு எவர் வலைப்பதிவில் காலந்தள்ளுவார்கள் (படிக்க: WSJ.com – No Day at the Beach :: Bloggers Struggle With What to Do About Vacation) என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சேரியமாய கேள்வி எழுப்புகிறது.

இந்தப் பதிவில் உருப்படியான விஷயமே இல்லையா என்று மனம் வருந்த வேண்டாம். தலைப்பில் (Stestí – Something Like Happiness (2005)) சோகம் இருந்தாலும் சந்தோசமாக முடித்துக் கொள்ள விழைகிறேன்.

கோக், பெப்ஸியை கண்மூடித்தனமாக தடை செய்வது, மீண்டும் அனுமதிப்பது என்று அவசர சட்டம் போட்டாலும், பள்ளிக்கூடங்களை லீனக்சுக்கு (படிக்க: Indian state targets Windows – Business – International Herald Tribune) மாற்றும் முயற்சியில் கேரளா இறங்கியிருக்கிறது.

12,500 கல்விச்சாலைகள். 30,000 கணினிகள். 32 மில்லியன் மக்கள் தொகை. 90 விழுக்காடு படிப்பறிவு கொண்ட மாநிலம். சிறிய வயதில் புழங்கியதையே தொடர்ந்து பின்பற்றும் எனக்கு பள்ளியில் PCக்கு பதில் Vi சொல்லிக் கொடுத்திருந்தால் நானும் சின்னவனாக (படிக்க: வான்கோழி கற்ற கவி: வேட்டை(விளை)யாடு :: அருண் வேலை செய்வது சியாட்டலில் , கமல் உபயோகிக்கும் லாப்டாப், Mac , அப்ப கெளதம் Anti-Microsoft?) பில் கேட்ஸின் முதல் எதிரியாகி இருப்பேன்.

என்ன வளம் இல்லை இந்தப் பதிவில் என்று குழம்புவதற்கு முன் பிடித்த பத்தி:

உலகில் யாரும் யாருக்கும் பெரிதாக நன்மைகள் அதிகம் செய்துவிட முடியாது. இவன் ஒரு தடவை இல்லை என்று சொல்லிவிட்டதால் இவன் நண்பன் இல்லை என்று முடிவு கட்டிவிடாதீர்கள். இல்லை என்று சொல்லுமுன்பே நான் உங்களுக்கு நண்பன் இல்லைதான்.

நான் அவ்வளவு மோசம் இல்லை. நான் அது வரை போவதில்லை. என் எல்லை எனக்குத் தெரியும். பேலன்ஸ் தவறி உத்தமன் ஆகிவிடும் ரகம் இல்லை நான்.

தேவை உங்களுக்குத்தானே தவிர எனக்கல்ல என்பதையும் உங்கள் பிரச்னைகள் என்னைத் துளி கூட பாதிப்பதில்லை என்பதையும் தயவுசெய்து மறக்காதீர்கள். இல்லை என்ற வார்த்தை ஆமாம் என்பதை விடத் தெளிவானது. ஆமாம் என்பதற்கு சமயத்தில் இல்லை என்றும் அர்த்தமாகும்.

அவர்களிடம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு பதிலாக ஒரு அரூப ஓவியத்தை வரைந்து காட்டலாம். அதற்கு ‘சுயத்தின் எச்சங்கள்’ என்பது போன்றொரு தலைப்பு வைக்கலாம்.
மைய நீரோட்டம்


| |

How to be an ‘ordinary, decent’ Muslim

இன்றைய கார்டியனில் மேற்கத்திய நாடுகளில் முஸ்லீமாக வாழ்வதற்கு பத்து கட்டளைகள் கொடுக்கிறார்கள்.

  1. குளிரின் ஜன்னி கண்டாலும், பெரிய மேலங்கிகளை அணியாதே.
  2. பெற்றோர் பாகிஸ்தானில் மண்டையைப் போட்டாலும், சொந்த ஊர் பக்கம் எட்டிப் பார்க்காதே.
  3. பஞ்சதந்திரம் படம் பார்த்தோ, பாஸ்கெட்பால் பந்து போடுபவனை பின்பற்றியோ, தாடி வளர்க்காதே.
  4. மின்னஞ்சல் குழுவோ, கோவில் நிர்வாக அமைப்போ, குமுகாயம், கழகம் பக்கம் தலை நீட்டாதே.
  5. பத்தாயிரம் கொடுத்த சல்வார் கமீஸோ, வேலைப்பாடுடன் கூடிய சூரிதாரோ அணியாதே. பர்தா போடாதே.
  6. வாடைகை கம்மியாக இருக்கிறது; தோழன் கூப்பிடு தூரத்தில் இருக்கிறான் என்பதற்காக High Wycombe/ Luton/Beeston/Walthamstow பகுதிகளில் வசிக்காதே.
  7. சக இனத்தவனுக்கு இரக்கப்படாதே.
  8. மக்களுக்கு வழிகாட்டியாக, பிரச்சினைகளை வெளிச்சம் போட்டு குரல் கொடுப்பவனாக, தலைவராக தேர்ந்தெடுக்கப்படாதே.
  9. விளையாட்டில் வெற்றி பெற்று விடாதே.
  10. மற்றவர் கேலி செய்து கார்ட்டூன் வரைந்தாலும், நீ கேலிச் சித்திரம் வரையாதே.

நன்றி: Guardian Unlimited | Special reports | How to be an ‘ordinary, decent’ muslim:


| |

Kallipaalayam Aadi Dravida Status Update – MK Stalin

Dinamani.com – Chennai Page

குண்டடம் அருகே தலித் மக்கள் கிராமத்தை காலி செய்தது ஏன்?: ஸ்டாலின் விளக்கம்

சென்னை, ஆக. 31: தாராபுரம் தொகுதி குண்டடம் ஊராட்சி ஒன்றியம் கள்ளிப்பாளையத்தில் ஆதிதிராவிடர் காலனியில் மக்கள் வெளியேறியதற்கு, அடிப்படை வசதிகள் இல்லாதது காரணமல்ல என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து உறுப்பினர்கள் டி. யசோதா, விடியல் சேகர் ஆகியோர் சட்டப் பேரவையில் புதன்கிழமை கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

ஆதிதிராவிடர் காலனியில் இருந்த குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைக்காக திருப்பூர் சென்றுவிட்ட நிலையில், மற்றவர்கள் வேறு ஊர்களில் உறவினர் வீடுகளுக்குச் சென்று தங்கியிருப்பதாக அமைச்சர் பதில் அளித்தார்.

அந்தக் காலனியில் குடிநீர் வசதி, சாலை வசதி ஆகியவை போதிய அளவுக்குச் செய்திருப்பதாக அவர் விளக்கினார்.

முந்தைய பதிவு: தமிழகத் தேர்தல் 2006: Frustrated Kallipaalayam Dalits Vacate their Native Village