Daily Archives: ஓகஸ்ட் 29, 2006

Tamil Cinema Dialogue Lollu

வெட்டிப்பயல் – லொல்லு படித்தவுடன் எனக்கும் கை பரபரக்க, சிலவற்றை என்னால் முடிந்த அளவு நக்கல் விட்டுள்ளேன். பொறுத்தருள்க…

உதவிய & தொடர்பான பதிவுகள்: டயலாக் டென் | அந்நியலோகம்: டாப் 10 பிரபல ஒற்றைவரி வசனங்கள் | ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்…: தத்துவம்

  1. முத்து

    ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது!

    தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி: அச்சச்சோ… ஹீரோவாச்சே! கால்ஷீட் கொடுத்திருக்கீங்க… அப்படி சொல்லாதீங்க.

    தமிழன்: உங்களுக்கு மட்டுமாவது தெரிஞ்சு வச்சிருக்கீங்களா சார்?

  2. பாபா

    ரஜினி: கதம்… கதம்… முடிஞ்சது முடிஞ்சு போச்சு

    இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா: ஆமா…

  3. பாரத விலாஸ்மகள் மதம் மாறி காதலிப்பதால் கோபப்படுகிறார் சிவாஜி.

    கே ஆர் விஜயா (திரைப்படத்தில் சொன்னது): ‘நீங்க எதற்கு எடுத்தாலும் அதிகமா உணர்ச்சிவசப்படறீங்க!’

    சிவாஜி கணேசன் (திரைப்படத்தில் சொல்லாமல் விட்டது): ‘பின்ன… சும்மாவா நடிகர் திலகம் என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள்?!’

  4. பராசக்தி

    சிவாஜி கணேசன்: ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்..

    வழக்கறிஞர்: ஓரம் மட்டும் ஓடினால், வாழ்க்கையில் தடுக்கித்தான் விழுவாள்.

  5. வீரபாண்டிய கட்டபொம்மன்

    சிவாஜி: .’என் குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா?’

    ஆஷ் துரை: ‘யூ மேன்… மெஷின் கொடுக்கறேன் சொன்னேன்… காசு கொடுத்தியா… அதில் மஞ்சள் என்ன… உன் மூளைக்கு மசாலா அரைக்கலாம் மான்’

  6. வள்ளி

    ரஜினி: நீ யாரை காதலிக்கறியோ, அவனைக் கட்டிக்கறதை விட, உன்னை யாரு காதலிக்கிறாங்களோ அவங்களைக் காதலி.

    ப்ரியா ராமன்: அதுக்காக உன்ன மாதிரி கோ ஆப்டெக்ஸ் போர்வை என்னை காதலிச்சா, அதையெல்லாம் கட்டிக்க முடியாது.

  7. மன்னன்

    ரஜினி: ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா? ஒரு சாக்லேட்டு வேணுமா? இரண்டு சாக்லேட்டு வேணுமா?

    மாமனார் விசு: நல்ல வேளை மாப்பிள்ளை. ஒரு கூட்டணிக்கு ஆதரவு வேணுமா? ரெண்டு கூட்டணிக்கு ஆதரவா பேசணுமா என்று கேட்காம இருக்கீங்களே.

  8. திருவிளையாடல்

    நக்கீரன்: குறையற்ற பாடலைக் கேட்டால் எம்மை விட மகிழ்ச்சி அடைபவர் எவரும் இங்கு இருக்க மாட்டார்கள். சங்கம் வளர்த்த அரசர், தரமற்ற பாடலுக்கு பரிசு கொடுக்கிறார் என்பதே என் கோபம்.

    இறையனார்: சங்ககாலத்திலேயே விமர்சகர்கள் லொள்ளு தாங்க முடியலியேடா சாமீ

  9. தம்பி

    பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்

    பொருத்தமான பதில்கள் வரவேற்கபடுகின்றன:

  10. வேட்டையாடு விளையாடு

    கமல்: யூனிஃபார்ம் போட்ட திமுருன்னு சொன்னியாமே? இப்போ நான் யூனிஃபார்ம்ல வரலை. ஆடகளோட வரலை. ஒரு டிசிபி-யா வரலை. தனி ஆளா ஆம்பளையா வந்திருக்கேன். நீ எப்படி? தம்பி கேட்ட சாத்துப்பா.

    வில்லன்: தம்பி… அப்படியே அந்த சாமானை எடுத்து வச்சுக்கப்பா


| |