Who is the #1 CM in India? – India Today Survey


Dinamani.com – Headlines Page

இந்தியாவில் சிறந்த முதல்வர் ராஜசேகரரெட்டி: ஆய்வில் தகவல்

ஹைதராபாத், ஆக. 28: இந்தியாவில் சிறந்த முதல்வராக ராஜசேகர ரெட்டி அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இண்டியா டுடே இதழ் தேசிய அளவில் நடத்திய வாக்கெடுப்பில் ராஜசேகர ரெட்டி 79 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளுடன் நட்பு முறையில் திறம்பட ஆட்சி நடத்தி வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிப்படையான நிர்வாகம் நடத்தி வருவதாகவும் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து கூறிய ராஜசேகர ரெட்டி, ஆந்திர மாநிலத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவதே தனது குறிக்கோள் என்றார்.

இவரையடுத்து மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் 78 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளனர்.

12 responses to “Who is the #1 CM in India? – India Today Survey

  1. Unknown's avatar வெட்டிப்பயல்

    நம்ம ஆளு எங்க???

  2. //குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் 78 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளனர்.
    //
    ?????
    என்ன கொடுமை சார் இது….

  3. இந்தியா டுடே இதழ் கிடைத்தவர்கள் பதிவு போட்டால் கலைஞர், அச்சுதானந்தன், ஷீலா தீக்சித், நிதீஷ் குமார், குலாம் நபி ஆசாத், வசுந்தரா ராஜே, என் டி திவாரி, முலாயம் சிங் எல்லோரின் மதிப்பீடுகளும் தெரியவரும்.

  4. 2003-இல்
    INDIA TODAY: ” COVER STORY: THE STATE OF THE STATES – Small Is Beautiful :: A heady mix of changing work culture, transformed lifestyles and altering pattern of industry has made the choice of locating one’s life wider than before. India Today presents India’s first ever ranking of the best and the worst states to live-and work-in. “

    1. Goa
    2. Delhi
    3. Punjab
    4. Kerala
    5. Himachal Pradesh
    6. Tamil Nadu
    7. Haryana
    8. Gujarat
    9. Maharashtra
    10. Karnataka
    11. Jammu & Kashmir
    12. Andhra Pradesh
    13. Rajasthan
    14. West Bengal
    15. Madhya Pradesh
    16. Assam
    17. Uttar Pradesh
    18. Orissa
    19. Bihar

  5. SEPTEMBER 04, 2006

    INDIA TODAY – Who is the Best Chief Minister?:

    India Today’s Mood of the Nation poll chose West Bengal’s Buddhadeb Bhattacharya over his closest rival Narendra Modi who had topped in the last three polls.

    Buddhadeb Bhattacharya 1 (4)

    Narendra Modi 2 (1)

    3 Y.S.R. Reddy (5)

    4 Vilasrao Deshmukh (3)

    5 Mulayam Singh Yadav (6)

    6 M. Karunanidhi *

    7 Nitish Kumar (3)

    8 Sheila Dikshit *

    9 H.D. Kumaraswamy *

    10 Vasundhara Raje (7)

    Brackets indicate Jan 2006 rankings. *New Entrants

  6. Chandrababu naidu continuosly got the number 1 post for many years in such surveys.In the end he was kicked out of office.Same thing happened to S.M krishna also.

  7. Unknown's avatar சிறில் அலெக்ஸ்

    நல்ல தகவல்..
    ———-
    //குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் 78 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளனர்.
    //
    ?????
    என்ன கொடுமை சார் இது….
    ————

    என்ன கொடுமைன்னு தெரியலையே…

    என்ன தகுதிகள் சாதனைகள் ஆராயப் பட்டன என்பதையும் படித்தால் புரியுமோ என்னவோ..

  8. Unknown's avatar லக்கிலுக்

    குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மதவெறியராக இருந்தாலும் சிறந்த நிர்வாகி என்பதை ஒத்துக்கொண்டே தீரவேண்டும்….

    மோடி வருவதற்கு முன்னால் குஜராத்தின் தொழில்வளர்ச்சி அந்த அளவுக்கு சிலாகிக்கக் கூடிய அளவுக்கு இல்லை…. மோடி தொழில் வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டினார்….

    மேலும் குஜராத் பூகம்பத்துக்குப் பிறகு கிடைத்த நிதிகளை வைத்து வெகுவேகமாக மாநிலத்தின் அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவேற்றினார்….

    அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை வேறு வழியில்லாமல் நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்…. :-))))

  9. ..
    என்ன கொடுமைன்னு தெரியலையே….
    ..

    இதை நான் நேரே மோடிக்கு மின்னஞ்சல் செய்தேன்…

    பாஸ்டன் பாலாஜி பதிவைப்பாருங்க தலை…உங்க தெறமையை சொன்னா பல பேருக்கு வவுறு எறியுதுன்னு…!

    போற்றுவார் போற்றட்டும் புழுது வாரி
    தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
    உற்றதொரு கருத்தை எனதுள்ளமெனில்
    எடுத்து சொல்வேன்
    எவர் வரினும் நில்லேன் அஞ்சேன் !!

    – நரேந்திர மோடியிடமிருந்து வந்த ரகசிய மின்னஞ்சலில் அவர் எழுதியிருந்தது!!

    😀

  10. Unknown's avatar செந்தழல் ரவி

    ///போற்றுவார் போற்றட்டும் புழுது வாரி
    தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
    உற்றதொரு கருத்தை எனதுள்ளமெனில்
    எடுத்து சொல்வேன்
    எவர் வரினும் நில்லேன் அஞ்சேன் !!//

    வஜ்ரா, மோடி எப்போ தமிழ் பழகினார் ?

  11. Unknown's avatar மாயவரத்தான்...

    என்ன கொடுமை? அன்புமணியை சிறந்த மத்திய அமைச்சர்னு சொன்ன மாதிரியான கொடுமை தான். வேறென்ன?!

  12. //
    வஜ்ரா, மோடி எப்போ தமிழ் பழகினார் ?
    //

    முட்டை எப்போது வெஜிடேரியன் என்று அறிவித்தார்களோ! அப்பவே அவர் தமிழ் பழகிக்க ஆரம்பித்து விட்டார்! 😀

செல்வன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.