இந்தியாவில் சிறந்த முதல்வர் ராஜசேகரரெட்டி: ஆய்வில் தகவல்
ஹைதராபாத், ஆக. 28: இந்தியாவில் சிறந்த முதல்வராக ராஜசேகர ரெட்டி அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இண்டியா டுடே இதழ் தேசிய அளவில் நடத்திய வாக்கெடுப்பில் ராஜசேகர ரெட்டி 79 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளுடன் நட்பு முறையில் திறம்பட ஆட்சி நடத்தி வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிப்படையான நிர்வாகம் நடத்தி வருவதாகவும் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து கூறிய ராஜசேகர ரெட்டி, ஆந்திர மாநிலத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவதே தனது குறிக்கோள் என்றார்.
இவரையடுத்து மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் 78 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளனர்.










