Necessary Surgery? – Offbeat :
ஒன்றை வைத்துக் கொண்டே இந்திர லோக அரசன் முதல் கமல்ஹாசன் வரை கலக்கலாக பயன்படுத்தும் இந்தக் காலத்தில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவருக்கு இரண்டு வழங்கியிருக்கிறார் பிரம்மன். கடையில் கொசுறு கேட்பது போல் மகப்பேறு வரிசையில் நிற்கும்போது ‘கொஞ்சம் ஜாஸ்தி போட்டு விடுங்க’ என்று கேட்டிருப்பார். இப்போது மறந்து விட்டார்.
பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ வைப்பதற்கு ‘நான் ஒருவர்; எனக்கெதற்கு இரண்டு’ என்று தாராள மந்துடன் வந்திருக்கும் இன்னொன்றை அறுவை சிகிச்சை மூலம் அறுத்தெறிய ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஒன்றை நீக்கும்போது மற்றொன்றும் போச்சுடா நொள்ளைக்கண்ணா என்று இரண்டுமே மரத்துப்போகும் வாய்ப்பு இருப்பதால், மருத்துவர்கள் சர்வ ஜாக்கிறதையாக செய்ய வேண்டிய பணி.
Diphallus என்று விளிக்கப்படும் நிலையில் ஒருவருக்கு இரண்டு ஆணுறுப்புகள் இருக்கும். ஐந்தரை மில்லியனில் ஒருவருக்கு இந்த நிலை வரலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 1609 தொட்டு நூறு பேர் மட்டுமே அரிதான இந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இன்னும் கொஞ்ச நாளைக்கு ஜே லீனோ, டேவிட் லெட்டர்மேன், ஜான் ஸ்டூவர்ட் ஆகியோர்களுக்கு நகைச்சுவை வழங்க உதவுவார். என்னுடைய பங்குக்கு:
‘நந்தா படக் காட்சியமைப்பில் ‘ஒரு கல்லில் இரண்டு மாங்கா’ என்று வசனம் வைக்கலாம்.
பாடலில் வாலி ‘வில்ல’ அர்த்தமும், சுக்ரீவ இரட்டை அர்த்தமும் தொனிக்க எழுத வைப்போருக்கு ‘குஷி’ பிறக்கலாம்.
‘சண்டேன்னா ரெண்டு’ போன்ற விளம்பரங்களில் இவரை பயன்படுத்தாலாம்.
‘ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு உன் மேல் ஆசை உண்டு’, ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ போன்ற அனைத்தும் அர்த்தங்கள் மாறலாம்.

இன்னொருவர் வேதனை
இவ்ர்களுக்கு வேடிக்கை
இரக்கமற்ற மனிதருக்கு
இதுவெல்லாம் வாடிக்கை
சில சந்தேகங்களும் எழுகிறது:
சிறுநீர் கழிக்கும்போது எப்படி சமாளிக்கிறார்?
பத்து சிசி வெளிவரும் அந்த நேரம் இரண்டிலும் இருந்து ஐந்து ஐந்தாக வெளிப்படுமா?
ஒன்றை ஒன்று இடித்துக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று சண்டை இடுவது, அவரின் இந்த அறுவை சிகிச்சை எண்ணத்திற்கு அடிகோலாக இருந்திருக்குமோ?
காதும் காதும் வைத்த மாதிரி ஆபரேஷன் செய்ய சொன்னால், இப்படி பரவலாக செய்தி பரவுவது வருத்தத்தை வரவைக்குமா? அல்லது நேர்மறையாக ஜாலியாக எடுத்துக் கொண்டு விளம்பரப் பிரியர் ஆக்குமா?
ஆதாரம்: Man With Two Sex Organs & Sanjay never visited doc till 2 months ago
News | Diphallus | Cool