படிக்கவேண்டிய, கவனிக்க வேண்டிய, தவறவிடக் கூடாத, பயனுள்ள, உருப்படியான, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, வெகுஜன ஊடகங்களுக்கு சரியான மாற்றாக, தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும், அதிகம் பேர் வருகை தரும், வாழ்க்கையைப் பதியும், மாற்று நீரோட்டங்களில் தெளியும், வித்தியாசமான கண்ணோட்டத்தில் இயங்கும், யதார்த்தமான, முகப்பூச்சுக்கள்ளற்ற வலைக்குறிப்புகள் எது?
மூச்சு வாங்குது…
ஒவ்வொரு அடைமொழிக்கும் ஒரு வலைப்பதிவு தேர்வு செய்யலாம். இருந்தாலும் பொத்தாம்பொதுவாக என்னுடைய எண்ணங்களை முன்வைக்கிறேன். மேலே அலசுவதற்கு முன்னால், டெக்னோரட்டி (படிக்க: Technorati Blog Finder: தமிழ்ப்பதிவுகள்) உதவியுடன் தலை தமிழ்ப்பதிவுகளின் பட்டியல்: (அடைப்புக்குறிக்குள் இருப்பது, அந்தந்த வலைப்பதிவுகளுக்கு சுட்டி தந்தவர்களின் எண்ணிக்கை)
- thamizmaNam : தமிழ்மணம் (381)
- பத்ரியின் வலைப்பதிவுகள் (72)
- Dubukku– The Think Tank (63)
- Idly Vadai (58)
- துளசிதளம் (44)
- Dondus dos and donts (38)
- Prakash‘s Chronicle (38)
- E – T a m i l : ஈ – தமிழ் (38)
- முத்து (தமிழினி) பக்கங்கள் (37)
- குழலி பக்கங்கள் (35)
- தேசிகன் பக்கம் (35)
- மதி கந்தசாமி தமிழ் வலைப்பதிவு (32)
- தனித்துவமானவன், உங்களைப் போலவே…! 🙂 (31)
- உருப்படாதது (29)
- முகமூடி (29)
- சசியின் டைரி (28)
- என் எண்ணக் கிறுக்கல்கள் – செல்வராஜ் (26)
- உலகின் புதிய கடவுள் (26)
- பொன்ஸ் பக்கங்கள் (25)
- மனம் ஒரு குரங்கு (20)
- வஜ்ரா… தமிழ் வலைப் பதிவு (20)
- பாலக்கரை பாலனின் பால்ய பார்வை (19)
- Rajni Ramki (17)
- ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்…! (17)
- மகரந்தம் (16)
- மாயவரத்தானின் வலைப்பூ….Third Vision (16)
- பிச்சைப்பாத்திரம் (15)
- விடுபட்டவை (15)
- எண்ணம் :: ஆசாத் (15)
- உள்ளும் புறமும் (13)
- தமிழகத் தேர்தல் 2006 (13)
- இணைய குசும்பன் (12)
- பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் (11)
குறிப்பு: விடுபட்டவர்களை வேண்டுமென்றே தவறவிடவில்லை. தங்களின் ‘??‘ blogs link here எண்ணை சொன்னால் மகிழ்வுடன் தெரிந்து கொள்வேன்.
ஆங்கில வலைப்பதிவுகளில் கிருபாவின் மண்டையை உருட்ட, தமிழில் அதே மாதிரி எண்ணிப் பார்க்கலாம் என்று ஆராய்ந்ததன் விளைவு.
தமிழ்மணம் வாசகர் பரிந்துரையை நம்ப இயலாது என்பது போலவே, இந்த டெக்னோரட்டி அளவிடுதலிலும் குறைகள் உண்டு. பிகே சிவகுமார் போன்ற முக்கியமான பதிவுகள் 11 பேரிடம் இருந்து சுட்டி வாங்கி பின் தங்கிய பட்டியலில் இடம் பிடிக்கும். வம்பு தும்புக்கு போகாமல் நாட்டு நடப்பை அலசும் பதிவுகள் முன்னேறிய நிலையில் இருக்கும்.
இருந்தாலும், ஓரளவு வாசகர்களின் மனநிலையை படம் பிடிப்பதாக அமைந்திருக்கிறது. சில காலமாய் எழுதினாலும், என்னுடைய மனங்கவர்ந்த எண்ணங்களை எழுதுகிறேன் போன்ற சுவாரசியமான பகிர்வுகள் இந்த மாதிரி தரப்பட்டியல்களில் மெதுவாகத்தான் முன்னேறுகின்றன. துளசியின் பதிவுகள் #5-இல் இருப்பது – காலப்போக்கில், மா சிவகுமாரும் பரவலான கவனிப்பை அடைவார் என்று எண்ண வைக்கிறது.
ஆனால், பல வருடமாய் எழுதும் நுனிப்புல் இன்னும் இடம்பெறாதது ஆச்சரியம். பலரின் பதிவுகளில் தொடர்ச்சியாக பின்னுட்டங்களும், அனைத்து இணைய தாளிகைகளிலும் தன் எழுத்தை இடம் பிடிக்க செய்தும், டெக்னொரட்டியின் கருணைப் பார்வை கிட்டவில்லை. இதற்கு ஒரே காரணம், தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்து, டெக்னோராட்டியின் நிரலித் துண்டை தன்னுடைய வார்ப்புருவில் இணைக்காமல் இருப்பதுதான் என்று சொல்ல நினைக்கிறேன்.
அல்லது, இந்த கவனமின்மை டெக்னோரட்டியின் நுட்பக் குறைபாடு.
கடந்த ஆறு மாதங்களில் என்னை அதிகம் ஈர்த்த, நான் தொடர்ச்சியாக படிக்க நினைக்கும் தமிழ்ப் பதிவுகள்:
- உதயகுமார்
- சிறில் அலெக்ஸ்
- கோவி.கண்ணன்
- விக்னேஷ்
- ஜி ராகவன்
- முத்து (தமிழினி)
- மா சிவகுமார்
- லாவோ -ட்ஸேயின் ‘வழி’ (Tao Da Sing – Lao Tse)
- செந்தழல் ரவி
- செல்வன்
- சேவியர் – கவிதைச் சாலை
தொடர்புள்ள சுட்டிகள், ஆங்கில வலைப்பதிவுகள் குறித்த அலசல், கொஞ்சம் சரித்திரப்பாடங்கள்:
- இது கால்கோள்:
- Dabbler: Kiruba is India’s top blogger – Urban Legend
அதற்கு பதிலாக ஜாலி மறுமொழி:
- Top Indian blog is Kiruba’s comments box by Kingsley 2.0
சொல்வதில் விஷயம் இருக்கிறது:
- The Witchy Angel: Top Bloggers? Get a life guys.
சாட்சாத் கிருபாவே பதிலளிக்கிறார்:
- Kiruba.com – Weblog of Kiruba Shankar :: Urban Legend’ Demythed’
இது நம்ம தமிழ் பதிவுகளின் கதை:
- Technorati Blog Finder: tamil
உங்க பதிவின் கணக்கு வழக்கு:
- BlogShares – Tamil Industry
ஆகஸ்ட் 31 வரை காத்திருக்கவும்:
- BlogDay 2006 » What is BlogDay
தலை பத்து பட்டியல் போட்ட சென்ற வருடத்து பதிவு:
- E – T a m i l : ஈ – தமிழ் :: அகப்பாடு பத்து












