Daily Archives: ஓகஸ்ட் 7, 2006

TK-TO Contest: #19 – #27 : Snap Reviews

  • 07/08/06 # 27 பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூள்! லக்கிலுக்

    (சொந்தக்கதை) மதிப்பெண் – 1 / 4

    எவ்வளவு தடவை ….. (கிட்டத்தட்ட 64) வருகிறதோ, அவ்வளவு ‘நாமே உணர்ந்து, தெரிந்து, புரிந்து, விரிந்து, பரந்து, சுரந்து, கறந்து கொள்ள’ வேண்டியவை.

  • 07/08/06 # 26 உறவில்லாத உறவுஜெஸிலா

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 1.5 / 4

    நீயே என்
    இன்பத்தின் ஆரம்பம்
    தவிப்பின் துணை
    தனிமையின் தீர்வு
    துன்பத்தின் தேடல்

    சண்டேன்னா ரெண்டு; கவிதைன்னா 1.5 🙂

  • 07/08/06 # 25 செம்புலப் பெயல் நீர்குமரன் எண்ணம்

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 1 / 4

    ஆரம்பத்தில் தாய் மேல் உள்ள Oedipus complex விவரணை. கொஞ்சம் பாண்டீன் ப்ரொ-வீ திருவிளையாடல். அப்புறம் கொஞ்சம் மழை நீர் வாசம் (Howstuffworks “What causes the smell after rain?”). ‘இருவர்’ படத்தில் சங்கப்பாடலை நவீன வெள்ளித்திரையாக்குவது போன்ற புனைவு. அறிவியலும் காதலும் பாசமும் இலக்கியமும் உளவியலும் பல்கிப் பெருகிப் பின்னிப் பிணையும் உறவு.

  • 07/08/06 # 24 சாயல்ஜெயந்தி சங்கர்

    (சிறுகதை) மதிப்பெண் – 3 / 4

    ஏன் உன்ன மாதிரி ஒம்பையன் இருக்கறதா யாராவது சொன்னா சந்தோஷப் படற, நீ அவங்கப்பா மாதிரி இருக்கறதா சொன்னா ஏன் வெறுக்கணும்.

    ஏதோ முதன்முதலாக பிரமுகர் ஒருவரைச் சந்திக்கப் போவதைப் போல ஒரு படபடப்பு.

    நீ ஆல்பர்ட்ட உன் மகன்ற உணர்வையும் தாண்டி ஒரு தனி மனிதனா, ஒரு சிநேகிதனாப் பாரு. அவன் மூணு நாலு வயசுலயே உன்னப் பிரிஞ்சு, எவ்வளவோ குழப்பங்கள அனுபவிக்க ஆரம்பிச்சவன். உன்னப் புரிஞ்சுக்க அவனுக்கு டைம் கொடு. அந்த டைம்ல நீ அவனையும் புரிஞ்சுக்கோ.

    இயல்பாக உள்ளிழுக்கிறது. சண்டை போட்ட குடும்பத்தில் இருந்து வீட்டோடு தங்க வரும் உறவு. முந்தைய மண உறவுகளை அணுகுதல். பழமைவாத கலகம் செய்யும் முதியோர் என்று சிதறலாக பல முகங்கள் அறிமுகம். நல்ல கதை.

  • 07/08/06 # 23 என்ன உறவில் நான்… – மதுமிதா

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 1.5 / 4

    கொஞ்சம் சுற்றிவளைத்த சுற்றங்கள் சிதறுவதை வழக்கமான கவிதையாக்குகிறார்.

  • 06/08/06 # 22 உறவுகள்vaik

    (சிறுகதை) மதிப்பெண் – 1 / 4

    மின் அரட்டையைக் களமாக வைத்து உருப்படியாக எந்தக் கதையும் வரவில்லை என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. தட்டை என்பார்களே… அதற்கு எ-டு.

  • 06/08/06 # 21 அஞ்சல் நெஞ்சுல (கானா)அபுல் கலாம் ஆசாத்

    (ஒலிக்கவிதை) மதிப்பெண் – 3 / 4

    உங்களுக்கு கானாக் கவிதை எழுதத் தெரியுங்களா (+1)? அதை மூச்சு முட்டாம பாடத் தெரியுங்களா? எல்லோர் முன்னாடியும் பாடுவீங்களா (+1)? பாட்டைக் கேட்டு குத்தாட்டம் போட முடியுங்களா (+1)? வலையொலி பரப்பத் தெரியுங்களா (+1)? அஜீத், மணிவண்ணன், மகேஸ்வரி ஆட வைத்து ஒளிப்பதிவாக்காததால் -1 😉

    எம்பி3 கானாவ கேட்டேன் அஞ்சல – ஆசாத்து
    எம்மாம் கலக்கலா பாடறாரு பதிவுல!

  • 06/08/06 # 20 உறவு..!இரா.ஜெகன் மோகன்

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 1.5 / 4

    கவிதை படிப்பதற்கு எளிது.

  • 06/08/06 # 19 பூனைக்குட்டிகள் – தேன்கூடு – உறவுகள்சிமுலேஷன்

    (சிறுகதை) மதிப்பெண் – 2.5 / 4

    வள்ர்ப்பு பிராணிகள் குறித்த இரண்டாவது கதை. விறுவிறுப்பாக நகர்கிறது, என்னுடைய வாக்கு உண்டு.

    நாய் படிக்கும்போதே தோன்றினாலும், பூனையிலாவது கேட்டு விட்டுகிறேன்:

    அ) இந்தியாவில் பூனை வளர்த்தால், வீட்டுக்குள்ளேயே ‘வெளிக்கு/ஒன்றுக்கு’ இருக்குமே. ஐந்து உறவுகளைக் கொண்டு இந்தப் பிரச்சினையை யாரும் தொடவே இல்லையே.

    ஆ) இராத்திரி எல்லாம் தூங்க விடாமல் கத்தி, சாப்பாட்டை தட்டி விட்டு, ஆசாரம் பார்க்கும் பாட்டியிடம் விழுப்பு ஏற்படுத்தி, தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து என்று கஷ்ட நஷ்டங்களையும் கவனிக்காமல் தவறவிட்டது ஏன்?

    போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


    | |

  • TK-TO Contest: #7 – #18 : Snap Reviews

  • 06/08/06 # 18 உயிர் (இயக்குனர் – சுவாமிநாதன்) ராசுக்குட்டி

    (திரைப்பட விமர்சனம்) மதிப்பெண் – 1.5 / 4

    ஸ்ரீகாந்த்தை சதாய்த்ததற்காக 0.5; சங்கீதா வெறும் கண்களாலும், எல்லை தாண்டாத கவர்ச்சியிலுமே கலக்கியதை கவனித்தத்ற்கு 0.5; காதலர் அறிமுக கற்பனை வறட்சி அவதானிப்புக்கு 0.5; மற்ற நச் விமர்சனங்களுக்கு +1; திரைப்பட விமர்சனம் எழுதுவது எளிது என்பதால் 1.

  • 06/08/06 # 17 உறவும் பிரிவும் ராசுக்குட்டி

    (சிறுகதை) மதிப்பெண் – 3 / 4

    அப்பாவின் TVS-50 சத்தத்தை எப்படித்தான் அம்மா கண்டுபிடிக்கிறார்களோ, அம்மா வாசலுக்கு ஓடுவதற்கும் அப்பா வருவதற்கும் சரியாக இருந்தது.

    கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் ஆலோசனை கூறினார். “இதுக்கு மட்டும் வந்துருங்கய்யா” என மனதில் நினைத்துக்கொண்டேன்.

    இனிமையான மெல்லிய விவரிப்புடன் ஒன்றவைக்கிறார். வலைப்பதிவிலே மட்டும் சாத்தியப்படக் கூடிய முடிவுரை கொடுப்பதின் மூலம் சிறுகதை பெருங்கதை ஆகிறது. எழுத்துப்பிழைகள் உண்டு (எல்லோரிடனும்).

  • 04/08/06 # 16 எழுத்தாளர்களோடு உறவு மலர என்.சுரேஷ், சென்னை

    (கட்டுரை) மதிப்பெண் – 0 / 4

    அவர்களும் மனிதர்கள் தானே, எல்லோரும் செய்யும் தவறுகளைத்தானே அவர்களும் செய்தார்கள், செய்கிறார்கள் என்றால், நாம் அதை ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில் எல்லோரையும் விட எழுத்தாளர்களிடம் அதிகமாய் நல்ல குண நலங்களை எதிர்பார்க்கிறது இந்த உலகம்!

    எழுத்துப்பிழைகள் உண்டு. படிக்கும் வேகத்தில் உறுத்திய ஒவ்வொன்றுக்கும் 0.5 கழிவு போட்டுக் கொண்டேன். (பரிமாரிக்கொள்வதோ, மோசமான், க்விஞர்கள், கூட்டம, குடடையிலிருந்து, த்ங்களின், திருந்துபவரகளாக, எழுதவாள், பகமையுமில்லை, பைய்யன்)

  • 04/08/06 # 15 ஒவ்வொரு மனிதனும் உறவும் என்.சுரேஷ், சென்னை
  • 04/08/06 # 14 நடிக்கும் உறவுகள் என்.சுரேஷ், சென்னை
  • 04/08/06 # 13 இறைவனோடு உறவு என்.சுரேஷ், சென்னை
  • 04/08/06 # 12 தேடும் உறவு என்.சுரேஷ், சென்னை
  • 04/08/06 # 11 உறவுகள் என்.சுரேஷ், சென்னை
  • 04/08/06 # 10 அவரகளும் நம் உறவினர்களே… என்.சுரேஷ், சென்னை
  • 04/08/06 # 7 உறவுகள் என்.சுரேஷ், சென்னை

    (புதுக்கவிதை) மதிப்பெண் – ? / 4

    16 + 6 ==> 22 பதிவுகள். கவிதையின் அழகு தலைப்பில். உறவு என்னும் வார்த்தை #13-இன் தலைப்பில் மட்டும் இல்லை என்று என்னால் விமர்சிக்க முடியுமளவு மழை பொழிந்திருக்கிறார்.

    லெபனானியர் பெருமளவில் இறந்திருக்கிறார்கள். ஹிஸ்பொல்லா பக்கம் நியாயம் இருக்க வேண்டும் என்று செய்தியை மட்டும் வைத்து கணிப்பிட முடியாது. அதே போல், சுரேஷ் நிறைய கவிதை எழுதியிருக்கிறார். சிறப்பாக அமைந்திருக்கிறது என்று உடனடியாக சொல்ல முடியாது. பொறுமையாகப் படித்துவிட்டு வருகிறேன்.

  • 04/08/06 # 9 உறவுகளும் ஒற்றுமைகளும் :: சிவமுருகன்

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 2 / 4

    வைரமுத்துவின் எளிமை வாசம் வீசுகிறது (ஆங்கிலப் பயன்பாட்டிலும்) கவர்ச்சியான கட்டமைப்புக்கு ஒரு மதிப்பெண். பதிவாளரின் தட்டச்சை முடக்கும் அளவு ஒற்றுமைகளை அள்ளி வீசாமல், முடுக்கும் அளவோடு நிறுத்திவிட்டதற்காக மற்றொன்று.

  • 04/08/06 # 8 நிலைத்து இருக்கும் உறவுகள் :: நாச்சியார் வள்ளி (yezhisai)

    (சொந்தக்கதை) மதிப்பெண் – 1.5 / 4

    அவசரமாக ஓடுகிறது. உறவுகள் என்னும் போட்டி எழுவாய்க்கு ஏற்ப நிறைய பெயர்களை அறிமுகம் வைக்கிறார். சிலரை மட்டும் வைத்து, முக்கிய மாந்தர்களின் குணாதிசயங்களை விவரித்திருந்தால், சுவாரசியமான உறவினர்களை அறிந்திருக்க முடியும். எழுத்துப்பிழைகள் உண்டு.

    போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


    | |