தேன்கூடு-தமிழோவியம் நடத்தும் ‘உறவுகள்‘ போட்டியில் பங்குபெற எண்ணம். என்னுடைய இடுகையை போதிய அளவு படிக்கவைக்க வேண்டும். மற்ற பங்காளிகளை விமர்சிப்பதன் மூலம் ‘நீ என்ன கிழிச்சுட்டே’ என்று படிக்க வைக்கலாம். எதிரிகள் குறைவதாகவும் வருத்தம். அதற்காக சிறு விமர்சனங்களும், மதிப்பெண்களும்
*நவீன விக்ரமாதித்தனும் வைரஸ் வேதாளமும்! (அல்லது) மானங்கெட்ட உறவுகள்!!!! – luckylook
(சிறுகதை) மதிப்பெண் – 1 / 4
சுவாரசியமான ஆரம்பம். குறிப்பால் எவரையாவது சொல்கிறாரா என்று யோசனை வருகிறது. நேற்று சொன்ன ‘அழகாய் இ.ப.இ.’ திரைப்படம் போல் இரண்டாவது பாதி படு சோகை. புத்திசாலித்தனமான முடிவு இருக்கும் என்று எதிர்பார்ப்பில் dejavu.
*பொன்னியின் செல்லம்மா …! – கோவி.கண்ணன்
(சிறுகதை) மதிப்பெண் – 2.5 / 4
என்னுடைய வாக்கு நிச்சயம் உண்டு. சீரான, பாதை விலகாத நடை. ஒன்றக்கூடிய சம்பவங்கள். மிதமான உரையாடல். முடிவில் பளிச். அதீத உணர்ச்சி சித்தரிப்புகளைத் தவிர்த்தல். நன்றாக வந்திருக்கிறது.
*உறவுகள் – நிர்மல்
(சிறுகதை) மதிப்பெண் – 0.5 / 4
பள்ளியில் முயற்சி செய்திருப்பதற்காக grace mark போடுவார்கள். மோசமான தமிழ்ப்படம் பார்த்த நிறைவு.
*சுகம் – nirmal
(புதுக்கவிதை) மதிப்பெண் – 1.5 / 4
கவிதை படிக்க எளிது. சிறுகதையைப் போல் விபரீத உறவை சுட்டுகிறதா என்பது வாசகரின் எட்டுதலுக்கு உட்பட்டது.
*உறவுகள் – SK
(வசன கவிதை) மதிப்பெண் – 1 / 4
பொங்கல் வாழ்த்துப்பா மாதிரி வந்திருக்கிறது. சொற்பொழிவுத் தாக்கம். சூடான தேநீர் இல்லாவிட்டால், வார்த்தை சிலம்பத்தை பாதியிலேயே கடந்து செல்லும் அபாயம் உண்டு. எழுத்துப்பிழைகள் உண்டு. (நேரேயே?)
வன்மம் வைத்து எனக்கு கத்தியை தீட்டுங்கள் தோழர்களே :-D)
மறுப்புக்கூறு: போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து இடுகைகளையும் விமர்சிக்க இயலாமல் போகலாம். காரணம் #1: நேரமின்மை; #2: அயர்ச்சி; #3: எதிர் விமர்சனங்களை சந்திக்க திராணியின்மை; #4: சமர்த்துப் போதாமை












