Daily Archives: ஏப்ரல் 24, 2006

Rediff Buyer Experience

ஐய்யோ இப்படி 70$ போச்சேன்னு உக்காரமா நானா வால் மார்ட்டான்னு பாக்கலாமுன்னு கிளம்பினேன். அப்போ, நம்ம ஊருல இதே மாதிரி நடந்திருந்தா என்ன ஆகியிருக்குமுன்னு ஒரு விதமான நினைவலைகள் என்னோட மனசுல அப்படியே வந்து போச்சு. சார், நீங்க வாங்கிறப்போவே இத பாத்து வாங்கி இருக்கனும் சார். நீங்க வாங்கிறப்போ அது இல்லாம இருந்ததுங்கிறத நீங்க சொல்றத நாங்க எப்படி சார் நம்புறதுன்னு கேட்ருப்பாங்க.

நன்றி: கார்த்திக் குமார் / தூறல்

இந்தியாவின் வாடிக்கையாளர் சேவையை மட்டம் தட்டுபவர்கள் மீது எரிச்சல் வரும். ஆனால், இன்றைய இணையச் சூழ்நிலையிலும், இணையத்திலேயே குப்பை கொட்டும் தா(த்)தாவான ரீடிஃப்.காம் ஏமாற்றுகிறார்கள் என்னும்போது கோபமும் எரிச்சலும் கையாலாகாத்தனமும் வெறுப்பும் பயமும் விஞ்சி நிற்கிறது.

நெருங்கிய நண்பருக்காக நானும் நாலு தடவை கஸ்டமர் சர்வீஸ் தொலைபேசி, மின்னஞ்சல் எல்லாம் முயற்சித்தாகி விட்டது.
சுத்தமாக பயன் லேது.

தயவுசெய்து Rediff.com ஷாப்பிங் செய்யவேண்டாம்!
அவதிக்குள்ளாக வேண்டாம்!!!

Order Number: ***மறைக்கப்பட்டுள்ளது***
Date: 19-feb-2006

Details: Ojjas Childrens Educational Laptop 1
Price : INR 399.00 (Plus, INR 50.00 For Shipping and Handling)

Despatched: 22-FEB-2006
Courier Number: ***மறைக்கப்பட்டுள்ளது***

Receieved in good condition – But the product didn’t work.

Tried to Call Ojjas Enterprise phone number given – nobody picked; Tried: All times of the day in three days continuously.

Tried to log a complaint with Rediff dot com, Got a complaint ID : Rediff#004-560-393 (Date : March 3)
Absolutely No Response after that.

Use Rediff for Zero ROI & Non-existent Service!


| |

Abnormal Assets, Pudukottai, Vijayaganth & Karthik

1. வில்லங்கத்தில் சிக்காத விஜயகாந்த் அறிவிப்புகள் : Dinamani – Assembly Polls 2006கே.எம். சந்திரசேகரன்

திமுகவும், அதிமுகவும் தேர்தல் அறிவிப்புகள் தொடர்பாக பரஸ்பரம் மோதிக் கொண்டிருக்கின்றன. இந்த இரு கட்சிகளையும்விட அதிகமான மானியச் சுமையை ஏற்படுத்தும் அறிவிப்புகளைக் கொண்டிருக்கிறது நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழக தேர்தல் அறிக்கை. இருந்தாலும் அது பெரிய விவாதப் பொருளாகவில்லை.

ஏழைகளின் வீடுகளுக்கு சீமைப் பசு தருவதாகச் சொல்லி இருக்கிறார் விஜயகாந்த். சீமைப் பசு கிடைத்துவிட்டால், எந்தக் குடும்பமும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்காது என்பது நிச்சயம். இருந்தாலும், இது உண்மையிலேயே சாத்தியமா என்று பொருளாதார நிபுணர்கள் கேட்கின்றனர். தினமும் 10 முதல் 15 லிட்டர் வரை பால் கறக்கும் சீமைப் பசு வாங்க வேண்டுமானால், குறைந்தது ரூ.12,000 செலவாகும். இதை குறைந்த விலையில் மொத்தமாக வாங்கவோ, இறக்குமதி செய்யவோ முடியாது.
அதேபோல ஏழைக் குடும்பங்களின் குடும்பத் தலைவியின் பெயரில் தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் மாதந்தோறும் ரூ.500 போடப்படும் என்கிறார். இது ஆண்டுக்கு ரூ.6,000 ஆகும்.

தமிழகத்தில் மொத்தம் 1.90 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். கிராமங்களில் மட்டும் 1.25 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. இவர்கள் எல்லோருக்கும் சீமைப் பசு, மாத உதவித் தொகை கிடைக்குமா? என்பது பொருளாதார நிபுணர்கள் எழுப்பும் சந்தேகம்.

மேலும், குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு மாதம் ரூ.500 வீதம் 3 ஆண்டுகளுக்குத் தரப்படும் என்றும் ஓர் அறிவிப்பு உள்ளது. இப்போது ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக அரசே ஊட்டச்சத்து மையங்கள் நடத்தி வருகிறது. குழந்தைகளுக்கு 5 வயதாகும் வரையில் அங்கு ஊட்டச்சத்து மாவு மற்றும் உணவு வகைகள் கிடைக்கிறது. ஒரு பெண் கருவுற்ற மூன்றாவது மாதத்தில் இருந்தே, குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக, பெண்ணுக்கும் ஊட்டச்சத்து மாவு உள்ளிட்டவை தரப்படுகின்றன.

ஆட்சி அமைக்கப் போவது யார் என்கிற போட்டியில் விஜயகாந்த் இல்லை என்று கருதி இரு முன்னணிக் கூட்டணிகளும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லையா என்று தெரியவில்லை.


2. தென் மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்துமா பார்வர்டு பிளாக்? : Dinamani – Assembly Polls 2006ப. இசக்கி

தென் மாவட்டங்களான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் இக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இக் கட்சி போட்டியிடும் 75 தொகுதிகளில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் உள்பட 12 தொகுதிகள் தனித் தொகுதிகளே.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் கடையநல்லூர், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் முக்குலத்தோர் வாக்குகள்தான் பெரும்பான்மையானவை. எஞ்சிய 9 தொகுதிகளில் 2-வது இடம் முதல் 4-வது இடம் வரை அச்சமுதாய வாக்குகள்தான் பெரும்பான்மையாக உள்ளன. எனவே, இந்த தொகுதிகளில் எல்லாம், பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர்கள் பெறும் வாக்குகளில் 75 சதவீதம் அதிமுக வாக்குகள்தான். அந்த இழப்பை அதிமுகவினர் எப்படி ஈடுகட்ட போகிறார்கள் என்பதுதான் இப்போதைய கேள்வி.


3. புதுக்கோட்டை: 54 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் சார்பில் ஒரே பெண் வேட்பாளர் : Dinamani – Assembly Polls 2006பி. செந்தில்வேலன்

புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் தற்போது அமைந்துள்ள பேரவைத் தொகுதிகளில் கடந்த 54 ஆண்டுகளில் போட்டியிட்ட ஒரே பெண் வேட்பாளர் அதிமுகவின் குளத்தூர் (தனி) தொகுதி எம்எல்ஏ கருப்பாயி (என்ற) ரோஹினி மட்டுமே.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் மற்றும் குளத்தூர்(தனி) ஆகிய 5 பேரவைத் தொகுதிகள் உள்ளன.


4. ஜன்னல்: எம்ஜிஆர் – சிவாஜி யுகம் : Dinamani.com – Editorial Pageபா.ஜெகதீசன்


5. பணம் சேர்க்கவா அரசியல்? : Dinamani.com – Editorial Pageஎஸ். ராமசாமி

இலவச பரபரப்புக்கு இடையே மற்றொரு முக்கியமான விஷயம் அதிகம் பேசப்படாமல் அமுங்கிப் போய்விட்டது. அதுதான் வேட்பாளர்கள் வெளியிட்ட சொத்து மதிப்பு. கோடிகள் ஏதோ தெருக்கோடிகளில் கிடைப்பது போல சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிக்குக் கூட கோடிக்கணக்கில் சொத்து. இதெல்லாம் அவர்கள் பெயரில் உள்ள சொத்துகள் மட்டும். இது தவிர உறவினர்கள், சொந்தங்கள், பினாமிகள் பெயரில் சேர்க்கப்பட்ட சொத்துகள் தனி.

அரசியலில் நுழையும்போது ஒருவரின் சொத்து மதிப்பு என்ன? தற்போது அவரது சொத்து என்ன என்பதை கணக்குப் பார்த்து, இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்பதை விசாரிக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் கொள்கை அளவில் தடுமாறி இருக்கலாம். அவர்களது இலக்கில், அவர்கள் பயணிக்கும் பாதையில் தெளிவில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் அரசியலை பணம் ஈட்டும் தொழிலாக நினைக்கவில்லை.

எந்த சொத்து வாங்கினாலும் கட்சிக்குக் கணக்குக் காட்ட வேண்டும். பதில் சொல்லவேண்டும்.


Anrum Inrum – Chennai Central

A view of the Central Railway Station as it looked in the 1920s. - 01-01-1920 (c) The Hindu

நன்றி: தி ஹிந்து ப்படக்கோப்புகள்

Madras Central

நன்றி: தினமலர்


| |