Daily Archives: ஏப்ரல் 18, 2006

Raman, Ramachandran & Razz – Dinamani

எம்ஜிஆரை நீக்க கருணாநிதிக்கு விருப்பமில்லை

எம்ஜிஆர் மீது நடிவடிக்கை எடுக்க கருணாநிதிக்கு துளியும் விருப்பம் இல்லை.

ஆனால் நெடுஞ்செழியன், மதுரை மேயர் முத்து போன்றவர்களே தீவிரமாகச் செயல்பட்டு எம்ஜிஆரை திமுகவிலிருந்து நீக்கினார்கள்

– இந்த தகவலைச் சொன்னவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் க. ராஜாராம், வி.வே. சுவாமிநாதன், கா. ராஜாமுகமது.


மகாபாரதம், ராமாயணம் போன்ற காவியங்களை திராவிடக் கட்சிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தங்களது வாதத்துக்கு வலுச் சேர்க்க அக் காவியங்களில் வரும் சம்பவங்களை துணை அழைக்க தவறுவதில்லை.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: “ராமனை ஏற்றுக்கொள்கிறாரா கருணாநிதி?


தேர்தல் டிஷ்யூம்…டிஷ்யூம்: ஒரே நாளில் படப்பிடிப்பு!

இயக்குநர் – நரேஷ் குப்தா

தயாரிப்பு – தேர்தல் ஆணையம்.காம்

முக்கிய கதாபாத்திரங்கள் – கருணாநிதி, ஜெயலலிதா

புதுமுகம் – நடிகர் விஜயகாந்த்

துணை நடிகர்கள் – நெப்போலியன், சரத்குமார், எஸ்.வி. சேகர், பாக்யராஜ், முரளி…

துணை நடிகைகள் : சிம்ரன், விந்தியா, கோவை சரளா…

கதை, வசனம் – வைகோ, தயாநிதி மாறன்.

இசை – திருமாவளவன், ராமதாஸ், ப. சிதம்பரம் குழுவினர்.

ஒரே நாள் படப்பிடிப்பு – மே 8 (வாக்குப் பதிவு தினம்).

பட ரிலீஸ் தேதி – மே 11 (வாக்கு எண்ணிக்கை தினம்)

திரையரங்குகள் – ஜெயா டி.வி., சன் டி.வி. (காலைக் காட்சி மட்டும்)

படம் ரிலீஸ் ஆன பிறகு… – மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அல்லது மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்: ஜெயலலிதா.

புதிய விடியலுக்கு தமிழகம் தயாராகிவிட்டது அல்லது திமுக வாக்கு வங்கி குறையவே இல்லை; 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது: கருணாநிதி.

விருது வழங்கும் நாள் : மே 12 அல்லது மே 13 – சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அல்லது வள்ளுவர் கோட்டம்.

TN Media Watch – Dinakaran & Dinamalar

தினகரனும் தினமலரும் முதல் பக்கத்தில் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இரண்டிலுமே வலப்பக்கத்தில் தினசரியின் கடைசிப்பகுதியில் சம அளவில் வெளிவந்துள்ளது. தினகரனில் இந்த விளம்பரத்தைப் பெரிதுசெய்து பார்க்க இயலாது. தினமலரில் மட்டுமே முடியும்.

தினமலரில் இந்த பக்கத்தைப் பெரிதாக்க, பயனர் பெயரை பதிவு செய்தல் அவசியம். தினமணி தங்களின் நாளிதழ் விளம்பரங்களை இணையத்தில் வெளியிடுவதில்லை. தினத்தந்தியும் வெளியிடப் பெறவில்லை. இதில் ஏன் இத்தனை வேறுபாடுகள் என்பது ஆய்வுக்குரியது.

எனினும், தமிழ் செய்தித்தாள்களில் வெளியான அட்சய திரிதியை குறித்த விளம்பரத்தில் குறித்த தகவலில் எது சரியானது என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தால், பாம்பு பஞ்சாங்கத்தில் இது குறித்து என்ன தகவல் இடம் பெற்றிருக்கிறது என்று தேடினோம்.

ஆனால், ஆற்காடு பஞ்சாங்கத்தில் காலை 6:03 மணிக்கு ஆரம்பிக்கிறது என்றும் பாம்பு பஞ்சாங்கத்தில் இரவு 10:58க்கு திருதியை முடிந்து விடுகிறது என்பதையும் எங்கள் ஆய்வின் முடிவில் கண்டறிந்தோம்.

இரு தினசரிகளிலும் ஸ்னேஹாவே மாடல் புரிந்திருந்தார். தலையில் மல்லிகையும் இடுப்பில் ஒட்டியாணமும் நெற்றிச்சுட்டியும் வளையல்களும் சங்கிலிகளும் காணப்பட்டது.

ஒரு தரப்பு விளம்பரத்தை பெரிதாக்குவது, அல்லது சில போஸ்டர்கள் மட்டும் சுட்டி 70 எம்எம் ஆக்க வாய்ப்பளித்து நடு நிலை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என்று தமிழ் நாளிதழ்களே விளம்பரத்தை எப்படி கொடுப்பது என்று தடுமாற்றத்தில் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

தினமலர் இவ்விஷயத்தில் முன்னணி வகிக்கிறது. தினமலரின் பல வழிமுறைகளைப் பின் பற்றத் தொடங்கியிருக்கும் தினகரன், இவ்விஷயத்திலும் தினமலரின் வழிமுறையைப் பின் பற்றத் தொடங்கலாம்.

ஊடகக் கண்காணிப்புக் குழுவின் சார்பில்
பாஸ்டன் பாலாஜி
நோ அஃபென்ஸ் டு http://tnmediawatch.blogspot.com/ 🙂


தினகரனில் வெளியான மினி சரவணா:

தினமலரின் மெகா சரவணா


| |

Top 10 MPs – Tamil Nadu

செய்திகளில் அடிபட்டோ, அல்லது இமேஜை பரிபாலித்தோ, மந்திரியாக செயல்பட்டோ. கருத்து உருவாக்கியோ, என்னைக் கவர்ந்த தலை பத்து எம்பிக்கள்:

  1. என் எஸ் வி சித்தன் – 7000த்துக்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பும் அளவு அசராமல் மக்கள் பிரதிநிதியாக செயல்படுபவர்
  2. ப சிதம்பரம் – ஹார்வர்ட், வர்த்தகம், நிதித்துறை மந்திரி, தமிழ் மாநில காங்கிரஸ், சிந்தனைகளை தமிழில் வடிக்கத் தெரிந்தவர்.
  3. ஏ கே மூர்த்தி – இருவுள் வாயில் அமைச்சராக பரவலாக அறிந்த முகம். தமிழ், சித்த வைத்தியம், விமானப் போக்குவரத்து என்று பன்முகப் பார்வையில் செயல்படுபவர்.
  4. ஏ வி பெல்லார்மின் – முதல் முறை லோக் சபா உறுப்பினராக இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்களுக்கே உரிய அர்ப்பணிப்புடன் நாகர்கோவில்/கன்னியாகுமரியோடு நிற்காமல் சவூதி அரேபியாவில் தமிழர்களின் நிலை குறித்தும் மீனவர்களுக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்புபவர்.
  5. மோகன் பொன்னுசாமி – ஒடுக்கப்பட்டோருக்காக தொடர்ந்து கவனஈர்ப்புகள் கொண்டு வருபவர்.
  6. டாக்டர் சி கிருஷ்ணன் – பொள்ளாச்சி (தனி) தொகுதிப் பிரச்சினைகள், முல்லைப் பெரியாறு
  7. ஈ வி கே எஸ் இளங்கோவன் – ஈவேரா, சம்பத் என்று குடும்பப் பாரம்பரியத்தில் காணாமல் போகாமல் தனித்துவமான வெளிப்பாடுகள் மூலம் தமிழக காங்கிரஸுக்குக் கூட எழுச்சி ஊட்டுபவர்.
  8. டி ஆர் பாலு – மிசா கைது, சூழலியல், போக்குவரத்து துறை அமைச்சர்
  9. மணி ஷங்கர் அய்யர் – லாஹூரில் பிறந்து, ஐ.எஃப்.எஸ். சேவை முடித்து, ராஜீவுடன் ஒட்டி உறவாடி, மந்திரியாகவும் மிளிர்பவர்.
  10. தயாநிதி மாறன் – லேட்டாக வந்தாலும்…


| |

Nakkeeran Vambu

நக்கீரன் ::

மே 1-6 வரை விஜயகாந்த் தனது விருத்தாசலம் தொகுதியில் டேரா போட்டு வாக்கு கேட்க இருக்கிறார். அது தெரிந்ததும் டாக்டர் ராமதாஸ் அதே நாட்களில் விருத்தாசலத்தில் தனது பிரச்சாரம் ஆருக்கும்படி தனது டூரை மாற்றிக் கொண்டார்.

அதே போல் விஜயகாந்த்துக்கு எதிராக பிரச்சாரம் பண்ண கவிஞர் அறிவுமதி, சீமான் தலைமையிலான திரைப்படக் குழுவும் அதே நாட்களில் களமிறங்க உள்ளது. விஜயகாந்த்துக்கு எதிராக தெரு நாடகங்களையும் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது இந்த டீம்.


திருவள்ளூர் அ.தி.மு.க. மா.செ.வான அர்.ஊஸ்.மணி சமீபத்திய வரவுகளான சிம்ரன், விந்தியாவிடம் எங்க மாவட்டத் தொகுதிகளுக்கு ஒருநாள் ஒதுக்கி பிரச்சாரம் பண்ண வாங்க என அழைப்பு விடுத்தார்.

நடிகைகள் தரப்போ கோவை சரளா உட்பட மூன்று பேர் பிரச்சாரம் பண்ண ஒருமணி நேரத்துக்கு ஒரு லட்ச ரூபாய் அகும். நீங்க ஒருநாள் முழுக்க பண்ணணும்னு அசைப்படறதால 10 லட்சம் கொடுத்தாப் போதும். எங்களுக்கு ஏ.சி. கார்களையும் ரெடி பண்ணணும் என்றது.

இது கேட்டு கிறு கிறுத்துப் போன மா.செ.மணி அம்மணிகளா நீங்க எங்க தொகுதிகளுக்கே வரவேணாம். நாங்க இத்தினி வருஷம் ஒட்டு கேட்டுகின மாதிரி கேட்டுக்குறோம். ஆளை உட்ருங்க என்றபடி எழுந்து விட்டாராம்.

NRI Perspectives – India Visit

சில என்.ஆர்.ஐத்தனமான படங்கள் எடுக்காமல் இந்தியா பயணம் நிறைவுறாது.

1.

கலைப்பொருள்களால் வீட்டை அலங்கரிக்க நினைத்தாலும், இந்தியாவில் பெரும்பணம் செல்வழிக்க வேண்டாம். எம்.எஃப். ஹூஸேன்தான் வேண்டும் என்று அடம்பிடிக்காவிட்டால் புத்தர், விநாயகர், இராஜஸ்தான் காட்சிகள் எல்லாமே சல்லிசு.

2.

வெண்டிங் மெஷின்களில் உணவு வரும்; பபுள் கம் கிடைக்கும். இந்தியாவில் புதுமையாக யோசிப்பவர்கள் நிறைய பேர் என்பதற்கு எடுத்துக்காட்டாக தி வீக்மற்றும் இந்தியா டுடேகுழுமப் பத்திரிகைகள் கிடைக்கிறது. டெல்லி விமான நிலையத்தில் பைசாவை திணித்தால், படிக்க புத்தகம் ரெடி.

(‘தி வீக்’கில் இந்த வார தலைப்புக் கட்டுரை : Left turns right – A new Left is emerging. One that loves American capital and believes in beating the imperialists at their own game)

3.

டெல்லியில் இருந்து பிலானிக்கு செல்லும் காத்திருப்புகளில், இருவுள் வாயில் (ட்ரெயின்) நிலையங்களில் படுத்தே பழக்கப்பட்டவன். என்றாலும், விமான நிலையங்களில் கட்டையை சாய்த்து சயனிப்பது ‘டூ மச்’. ட்ரைடெண்ட் பக்கத்தில்தானே இருக்கிறது… ஒரு எட்டு போய் ரூம் போட்டு தூங்கலாமே!

4.

வளர்ந்த நாடுகளில் பள்ளிக்கு அழைத்து செல்லும் வண்டிகளுக்கு பயபக்தியோடு வழிவிட்டு பாதுகாப்பாக செல்லும் வரை ஒதுங்கி நிற்பார்கள். வளர்ந்த நகரங்களில் ஆட்டோ ரிக்சா போன்ற ஊர்திகள் பயன்படும். வாரநாசியில் ஏழைப்பள்ளிக்கூடத்திற்கு அழைத்துப் போகும் மிதிவண்டி.

5.

“பகைவர்களும் வெறுப்பு உமிழ்பவர்களும், தங்கள் எதிரிகளுக்கு எத்தகைய கொடுமை நிகழ்த்தினாலும், தீவழியில் செல்லும் புத்தி தனக்குத் தானே நிகழ்த்தி கொள்ளும் கொடுமை, அதனினும் சாலப் பெரியது.” – இலங்கை புத்தராலயத்திற்கு வெளியே கிடைக்கும் புத்திமொழி.

6.

பாசி பிடித்த தீர்த்தம்; பிச்சைக்காரன்; லாங் ஷாட்; இந்தியா ஒளிர்கிறதா என்று எதிர்க்கட்சி அரசியலும் India Charming என்று அயல்நாட்டுக்கார ஒளியோவியன் கண்காட்சி நிகழ்த்தவும் வாய்ப்பளிக்கும் காட்சி.

7.

‘கல்யாண மாலை’ போன்ற நிகழ்ச்சிக்கு விளம்பரம் போல் பட்டாலும் நிலைமாறும் உலகில் நிலைக்கும் செல்பேசிக்கான ‘Lifetime Prepaid‘ அழைப்பு.

8.

  • காங்கிரஸ் ஆதரவு முலாயம் ஆட்சியில் மிருகவதையை எதிர்த்து மனேகா காந்தி உண்ணாவிரதப் போராட்டம் (அல்லது)
  • குண்டு சட்டியில் குதிரை (அல்லது)
  • மதுரை குதிரை வண்டியும் காசி குதிரைக் கொடுமையும்
    (பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுங்க)


    | |

  • சிறு நரிகள் சிம்மாசனக் கனவு – கவிதை

    சிறு நரிகள் சிம்மாசனக் கனவு – கலைஞர் கருணாநிதியின் கவிதை:
    நன்றி – தினகரன்

    Vijayganth Asset Specifics – Dinamalar

    Dinamalar

    நன்றி; தினமலர்

    DMK : M Karunanidhi & MK Stalin Assets – Dinamani

    கருணாநிதியின் சொத்து ரூ.26 கோடி

    வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் உள்ள வைப்புத் தொகைகள் ரூ.5 கோடியே 13 லட்சத்து 54303.

    தயாளு அம்மாள் பெயரில் ரூ.12 கோடியே 89 லட்சத்து 64,000.

    ராஜாத்தி அம்மாள் பெயரில் ரூ.5 கோடியே 9 லட்சத்து 20,645.

    வாகனங்கள்- தயாளு அம்மாள் பெயரில் ஹோண்டா அகார்டு கார். ராஜாத்தி அம்மாள் பெயரில் டாடா இண்டிகா கார்.

    நகைகள்- தயாளு அம்மாள்- பழைய நகைகள் 716.34 கிராம் (மதிப்பு ரூ.5 லட்சம்). விலை மதிப்புள்ள கற்கள் ரூ.87 ஆயிரம். ராஜாத்தி அம்மாள்- பழைய நகைகள்- 800 கிராம் (ரூ.5.58 லட்சம்).

    சென்னை கோபாலபுரத்தில் 6,162 சதுர அடி மனை மற்றும் அதிலுள்ள கட்டடம்.

    தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் 14.30 ஏக்கர் நிலம்.

    மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமத்தில் தயாளு குடும்ப நல அறக்கட்டளையின் அறங்காவலர் தயாளு அம்மாள் பெயரில் 21 சென்ட் நிலம் உள்ளது.

    அஞ்சுகம் குடும்ப கட்டளையின் அறங்காவலர் தயாளு அம்மாள். இது பழைய திரைப்படங்களின் விநியோகஸ்தராக செயல்படுகிறது.

    ராஜாத்தி அம்மாள் உரிமையாளராக உள்ள தமிழ்க்கனி பதிப்பகம் சொத்துகளின் நிகர மதிப்பு ரூ.20.76 லட்சம். ஆழ்வார்பேட்டை ராயல் பர்னீச்சர்ஸ் உரிமையாளர். முதலீடு- ரூ.5.41 லட்சம்.

    சென்னை சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளுக்குச் சொந்தமாக 3 கிரவுண்ட் மற்றும் 2294 சதுர அடி மனையும் கட்டடமும் உள்ளது. இதன் மதிப்பு ரூ.3.02 கோடி.


    ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.1.50 கோடி: சொந்தமாக கார் இல்லை; கடன் ரூ. 6.8 லட்சம்

    திமுக துணைப் பொதுசெயலாளர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ. 1.50 கோடி என்று தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். இதில் வேளச்சேரி வீட்டு மதிப்பு ரூ. 64 லட்சம், கோபாலபுரத்திலுள்ள உள்ள வீட்டில் தனது பங்கு ரூ. 50 லட்சம் உள்ளிட்ட சொத்து விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

    மனைவிக்கு சொந்தமாக 720 கிராம் பழைய நகைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மதிப்பு ரூ. 5 லட்சத்து 2 ஆயிரம். திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சொந்தமாக 6.6 ஏக்கர் நிலம் உள்ளது. சொந்தமாக வாகனங்கள் எதுவும் கிடையாது. கடனாக ரூ. 6.88 லட்சம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஸ்டாலின் மீதுள்ள வழக்குகள்:

  • கொலை முயற்சி மற்றும் சட்டத்துக்கு விரோதமாக கூடி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பிரிவுகள் 120 (பி) 167, 147, 148, 341, 332, 307, 109, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை 7-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
  • சட்டத்துக்கு புறம்பாக கூடி அச்சுறுத்தியதாக பிரிவுகள் 147, 447, 353, 124 கீழ் சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  • அவதூறாக பேசியதாக பிரிவுகள் 500 மற்றும் 502 ஆகியவற்றின் கீழ் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
  • சென்னை 3, 4, 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன.
  • DMK Poster on ADMK Rule – Dinakaran

    dinakaran

    நன்றி: தினகரன்