10kg Rice – Free of Cost

இலவச அரிசி – ஜெயலலிதா அறிவிப்பு – BBC Tamil

எதிர்வரும் தமிழக சட்டமன்றத்தேர்தலில், அஇஅதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொதுவினியோகத்துறையில் வழங்கப்பட்டுவரும் 20 கிலோ ரேஷன் அரிசியில் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வரும் அஇஅதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெ. ஜெயலலிதா திடீரென இன்று அறிவித்துள்ளார்.

மீதமுள்ள 10 கிலோ அரிசி தற்போதைய விலையான கிலோ அரிசி 3 ரூபாய் ஐம்பது காசுகளுக்கு விற்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால், ரேஷன் அரிசி ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அந்த கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. ஆனால் அது நடைமுறை சாத்தியமற்ற போலியான வாக்குறுதி என்று ஜெயலலிதாவும் அவரது கூட்டணி கட்சியினரும் கூறிவந்தனர்.

ஆனால், ரேஷன் அரிசி ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கு வாக்காளர்களிடம் பரவலான வரவேற்பு கிடைப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் பின்னணியில், ஜெயலலிதாவின் இன்றைய திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக: 20 கிலோ ரேஷன் அரிசி = 40 ரூபாய் தேவைப்படும்.
அதிமுக: 20 கிலோ ரேஷன் அரிசி = 35 ரூபாய் தேவைப்படும்.

9 responses to “10kg Rice – Free of Cost

  1. மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல!

    இந்த ‘ஆணவம் பிடித்த’ ‘அம்மா’வையும் சரி, பேராணவம் பிடித்த ‘அப்பா’வையும் சரி, தூக்கி எறிய வேண்டிய காலகட்டத்தில்தான் தமிழகம் இன்று இருக்கிறது!

    ‘இலவசங்கள்’ மூலம் பிச்சை எடுக்கும் இந்தக் கழகங்களின் முகத்திரை கிழியும் நேரமும் இதுவே!

    சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி, இந்தப் ‘பிள்ளை’யிடம் சில நாள், அந்த ‘மகள்’இடம் சில நாள் ‘ஓசிச்சோறு’ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பகுத்தறிவாளர் வீரமணி அவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

    வரலாறு படைக்கப் போகும் தமிழ் மக்களை எண்ணும்போது, பெருமிதமாக இருக்கிறது.

    இரு கழகங்களுமே தமிழுக்கு, தமிழனுக்கு விரோதமாகத்தான் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை மறந்திட வேண்டாம்.

  2. SK அய்யா, உஙக காந்த், 15 கிலோ தர்றேன்னு சொல்றாருங்கோ!!

  3. Unknown's avatar நெருப்பு சிவா

    Ippothellaam, SK sir enga comment potaalum, immediate a padichiruven. Ena, I have finisshed seeing all the comedy clips I have. Also, they are not as interesting as you write.

    Sk sir, how could you write so seriously without a trace that you yourself are laughing while writing your comments. You have abundant skills to make everybody laugh, irrespective of their background. We are grateful to your service.

    NERUPPU

  4. கலர் டிவி வாளை சன் டிவி கேடயத்தை கொண்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரிசியை மட்டும் விடுவானே என அறிவித்துவிட்டார் போலிருக்கிறது. சிதம்பரம் வேறு 2 ருபாய்க்கு அரிசி வழங்க முடியும் என உத்தரவாதம் தந்திருக்கிறார்.

    ப.சி இதை சொல்லாமல் ஜெ 10 கிலோ அரிசி இலவசம் என அறிவித்திருந்தால் ‘திமுக’ கூட்டணிக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். சும்மா இல்லாமல் வழிமொழிந்து ஜெவுக்கு திருப்பி கேட்கும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

    மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிதம்பரம் தன் வாக்குறுதி படி மத்திய அரசு அரிசியை வழங்க வேண்டும். அப்படி தராவிட்டால் ஜெ சிதம்பரத்தை தான் கைகாட்டுவார். பலே!

  5. ஆகா.., அந்தர் பல்டின்னு இதத் தான் சொல்றாங்களோ?

    நாளைக்கு ஒரு கலர் டிவி வாங்கினால் டிவிடி ப்லேயரோடு ரைட்டரும் இன்னொரு டிவியும் இலவசம்னு சொல்லுவாங்களோ?(ஏழைகள் திருட்டு டிவிடி போட்டு பிழைத்துக் கொள்ளத்தான்!)

  6. Dear Mr. N.S,
    I am very happy to note that my posts make you laugh!

    Let us continue in the same vein and se who remains laughing in about a month!!

    In the meantime, Please continue to laugh as …..
    Laughter is the best medicine!!

    And, Mr.Krishna,
    I am sure you are intelligent enough to understand the basic differences between the ‘avaricious’ kazhagams [DMK&ADMK]who are power hungry and the Captain who wants to save the Tamils[including YOU!]from these two ‘kuuttuk kaLavaanis’

  7. Unknown's avatar சுதர்சன்

    ‘இலவசங்கள்’ மூலம் பிச்சை எடுப்பது தானே விஜயகாந்தின் கழகமும்.. 15 கிலோ அரிசியை வீடு தேடி வந்து இலவசமாக கொடுப்பாராம். ஜோசியர் சொன்னார் என்று திராவிடத்தையும் கழகத்தையும் கட்சியின் பெயரில் கட்டிக் கொண்டு அலையும் கோமாளிதான் தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறாராம். :))

  8. ‘இட்லிவடை’யாரின் பதிவில் சொன்ன பதிலைத்தான் இங்கும் இடுகிறேன்:

    >>சிதம்பரம் வேறு 2 ருபாய்க்கு அரிசி வழங்க முடியும் என உத்தரவாதம் தந்திருக்கிறார். >>

    “சிதம்பரம் இவ்வாறு அரிசி கொடுப்பது சாத்தியமே” என்றுதான் சொன்னார்.

    மத்திய அரசு இதில் நேரடியாகச் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை.

    மாநில அரசின் செலவினத்தில்தான் அந்தக் கூடுதல் மானியம் சேரும். அதாவது வருடத்துக்கு சுமார் 550 கோடி ரூபாய்கள் (ரூ 2/- க்கு அரிசி போட்டால்).

    மாநில அரசு செய்யக் கூடியது – மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் செய்வதை விட மாநில அரசே – தமிழக விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதன் மூலம் – இத்திட்டத்துக்கான ‘அடக்க விலையைக்’ குறைக்க முயற்சி செய்வதன் மூலம் – அந்தக் கூடுதல் மானியச் செலவினத்துக்கான நிதி ஆதாரங்களைப் பெறுவதுதான்.

    இது மாநில அரசின் கொள்கை முடிவு;

    இதைச் செய்வோம் என்று விரிவாக தெளிவாக கலைஞர் கூட்டத்துக்குக் கூட்டம் விளக்கி விட்டார்.

    அப்போதெல்லாம் – அவருடைய வாதத்துக்கு சரியான எதிவாதம் செய்யத் துப்புக் கெட்டவர்கள் – இந்த கொள்ளைக் கும்பல். இப்போது ‘சிதம்பரம் சொல்லிவிட்டதால்’ நாங்கள் அறிவித்தோம் என்பார்களாம்.

    அதைக் கேட்டு தலையாட்ட இங்கிருப்போர் யாரும் மடையர்கள் அல்லர்.

    தமிழின விரோதக் கும்பலுக்கு வெட்கமில்லை.

    அப்படி கலைஞர் தெளிவாக – எவ்வாறு இந்த அரிசி மானியத்துக்கு ஏற்பாடு செய்வோம் என்பதை அறிவித்த பின்னும் – “இது நடக்காது” ,”ஏமாற்று அறிவிப்பு”, “கவர்ச்சித் திட்டம்” என்றெல்லாம் அதிமுகவும் அந்த கழிசடை கோபால்சாமியும் உளறிக் கொண்டிருந்தார்கள்.

    2/- க்கு போட முடியாது என்று சொல்லிவிட்டு இப்போது 1.75/- க்கு எப்படி போட முடியும் என்று சிறு குழந்தை கூடக் கேட்டு விடும்!

    அந்தத் திட்டத்தின் அடிப்படையையே கேள்வி கேட்ட அறிவுசீவிகள் – இப்போது மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள் என்றதும் குட்டிக் கரணம் போடுவதும் – அதையும் சில திருவாளத்தான்கள் சிலாகிப்பதும் வெட்கக்கேடு.

    அடுத்து என்ன Home theater with surround sound Free -யா?!! செய்யட்டும்!

    கலைஞர் has decisively wrested the initiative!!

    tch! tch! tch! 🙂

  9. ‘இட்லிவடை’யாரின் பதிவில் சொன்ன பதிலைத்தான் இங்கும் இடுகிறேன்:

சுதர்சன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.