புதிய தமிழ் வலைப்பதிவுகள் திரட்டி முத்தமிழ் மன்றத்தில் கிடைத்தது. தமிழ்மணத்துடன் ஆறு வித்தியாசங்கள் போடலாம் என்று கீ-கலப்பையை முடுக்கினால், பெரியதாக ஆங்கில திரட்டி, கொட்டிகளுடன் ஒப்பிடுவதற்கு
| வசதி | முத்தமிழ் மன்றம் | தமிழ்மணம் |
என்று டேபிள் போட்டு குந்திக்கொண்டு விசைத்தறிக்கு கோட்டு சூட்டு மாட்டி ஃப்ரீயா கொடுத்த பசுமாட்டு பாலை தலை பத்து விமர்சிப்பாயா என்று பயமுறுத்தியது.
எனவே…. பால் வாங்கும் பயம் தெளியும் வரை ஆலோசனைகள் கொடுக்காமல், சில சுட்டிகள் மட்டும்:
- sunsuna.com – Indian Blogs Unveiled …: இந்தியப்பதிவுகளுக்கு இன்னொரு எளிமையான திரட்டி.
- Indibloggies 2005: பட்டியலுக்கான தமிழ் வலைப்பதிவுகளை தேர்ந்தெடுத்து தர வருவீர்களா?
- Kamat Weblogs: The Blog Portal: ஆங்கில வலைபதிவுகளுக்கான வாசல்
- IndiBloggers – Index of Indian Bloggers: இந்தியர்களால் ஆங்கிலத்தில் எழுதப்படும் அனைத்து வலைப்பதிவுகளும் வசிப்பிடம் வாரியாக இங்கே கிடைக்கிறது.
குறிப்பு: உபலம்பம் – perception, recognition.

















