Daily Archives: ஒக்ரோபர் 31, 2005

Happy Diwali 

Happy Diwali Posted by Picasa

தீபாவளி வாழ்த்துகள்

ஏபிசிடிக்கு சொன்ன தீபாவளி/தஸரா கதை

http://www.flickr.com/photos/40954626@N00/

Russian Ice Sculptures

Happy Diwali


| |

முதல்வன்

ஒரு நாள் முதன் மந்திரியாக இருந்து பார்‘ என்பதுதான் tagline-ஆக தோன்றுகிறது.

எளிமையாக்குவதில் இயக்குநர் ஷங்கரை, மணி ரத்னத்தால் கூட விஞ்ச முடியாது. ‘தளபதி’ ரஜினியை விட ‘சிவாஜி’ பாஸ் நிஜத்தை பிரதிபலிப்பார் என்று எண்ணுகிறேன்.

பஸ் ஸ்டாப்பை விட்டு பேருந்து கொஞ்சம் தள்ளி நிறுத்தப்படும். இறங்க வேண்டியவர்கள் சடுதியில் விடுபட்டவுடன், டபுள் விசிலில் வேகம் பிடிக்கும்போது, ரன்னிங்கில் கல்லூரி மாணவர்கள் ஏறிவிடுவார்கள்.

ஏறும்போது தவறி விழுந்திருந்தால், நடத்துனருக்கும் ஓட்டுனருக்கும் சம்பளமில்லா விடுப்பு முதல் தேவையில்லாத ஊடக கவனிப்பு வரை எல்லாமும் அரங்கேறி அவர்கள் வாழ்க்கை தலைவலியாகும். அந்தக் கடுப்பை, பரிட்சைக்கு நேரமான மாணவர்களிடம் காட்டுவார்கள். சாதாரண கிண்டல், கைகலப்பாக மாறி விடும்.

யூனியன் சகாக்கள், தொழிலாளியை மதிக்காதவர்களுக்கு பாடம் கற்பிக்க எண்ணுகிறார்கள். பல்லவன் பேருந்துகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்படும். மாநகர ஒண்டு குடித்தனத்தில் ஆட்டோ, ரிக்ஷா, பைக் என்று போர்ஷன்கள் நிரம்பிய ரோடு ஸ்தம்பித்துப் போய் விடுகிறது.

திருமண முகூர்த்தத்துக்கு செல்ல முடியாமல் தவிக்கிறாள் மணப்பெண். ஆம்புலன்ஸுக்கு நகர இடமில்லை. வேலைக்கான நேர்காணலுக்கு செல்ல முடியாமல் வாழ்க்கையையே இழக்கிறான். பிள்ளைத்தாச்சி முதல் பேட்டை ராப் உடன் பயணிக்கும் கடைசிப் பயணம் வரை எல்லாமே ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மூலஸ்தானமான, கல்லூரித் தேர்வுக்கு தாமதமான மாணவன் அடிபட்டு அனாதையாக விழுந்து கிடக்கிறான்.

சென்னை போலீஸ் கமிஷனர் வருகிறார். மந்திரியை தொலைபேசியில் அணுகுகிறார். அரசு ஊழியரைப் பகைத்துக் கொள்ள விரும்பாத வழவழா அரசியல். மிகப் பெரிய ஓட்டு வங்கியான மாணவர் சமூகத்தையும் விரோதிக்க விரும்பவில்லை. ‘வேடிக்கை பார்’ என்று மேலிடக் கட்டளை.

ஹாண்ட்ஸ்-ஆன் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டான கமிஷனர், இன்ஸ்பெக்டரை விட்டு மாநகரப் பேருந்துகளை அப்புறப்படுத்த செயலில் இறங்குகிறார். தண்டவாளத்துக்குத் தலையை கொடுத்த தமிழன், உணர்ச்சி பொங்க டயருக்கு தலையை நீட்டுகிறான். சாதி பிரச்சினையாக விசுவரூபம எடுக்கிறது.

சென்னையே செக்மேட் ஆன சதுரங்க ஆட்டமாக செய்வதறியாது திகைக்கிறது. கவலையில்லாமல் குறுக்கெழுத்து போட்டுக் கொண்டிருக்கும் ஐயங்கார், வட்ட மேஜை மாநாடு போட்டு முடிவெடுக்க முடியாத அரசாங்கம், குழு உணர்வு மிதமிஞ்சிப் போன அமைப்புகள், நோக்கத்தை மறந்து ஈகோவை கொடி பிடிக்கும் மனங்கள், பொதுஜனங்களின் சிக்கல்கள் என்று சுருக்கமாகவும், நுணுக்கமாகவும் பதிவாக்கப்பட்டிருக்கிறது.

கட்டளை கேட்டு அடிபணிந்து நிறைவேற்றி கொண்டிராமல், தனி அலுவலருக்கு சுதந்திரமான பணியுரிமை வழங்கியிருந்தால் எளிதில் தீர்க்கப்பட்டிருக்கக் கூடிய பிரச்சினை. காலதாமதத்திற்கு பயந்து வரம்பு மீறிய மாணவரையும், சுமையான பேருந்தை நிறுத்தாமல் ஓட்டியவரையும் கைது செய்து, வதந்தியை கட்டுக்குள் வைத்திருந்தால், இவ்வளவு பெரிய சிக்கலாக உருமாறியிருக்காது என்று இப்போது தோன்றுகிறது.

அரசியல்வாதிக்கோ சாதிச் சங்கத்தின் சார்பு வேண்டும். தீப்பொறி மாணவ சமுதாயத்துக்கு தோழனாக பாவ்லா கட்டவேண்டும். கட்சிப் பொருளாதாரத்தைக் காக்கும் தொழிலதிபர்களும் வேண்டும். அமைப்பு சார்ந்த தொழிலாள தொண்டர்களும் வேண்டும். ஆட்சி பீடத்தின் நான்கு கால்களாக இவர்களை சொல்லும் சுஜாதாவின் வசனம்.

இன்றும் இவ்வாறான நிலைமையைக் கையாளுவதற்கு தமிழக காவல்துறை எவ்வளவு தூரம் தயார் நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. காலாகாலத்துக்கும் பொருத்தமான காட்சியைக் கொண்டு வருவதில் சுஜாதா+ஷங்கர் சமர்த்தர்கள்.


| |