Daily Archives: ஒக்ரோபர் 27, 2005

குடியரசு நாயகர்

tamiloviam :: இப்பொழுதுதான் ஜான் கெர்ரி தோற்ற மாதிரி இருக்கிறது. அதற்குள் அடுத்த வேட்பாளரை தயார் செய்வதற்கு அமெரிக்கா முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது.

ஜனநாயக கட்சிக்கு, செல்ல வேண்டிய பாதையும் கட்சியின் தளத்தகை (strategy) எவ்வாறு அமைய வேண்டும் என்பதிலும் ஏராளமான குழப்பங்கள் நீடிக்கிறது. தற்போதைக்கு ஜான் எட்வர்ட்ஸ் முன்னணியில் இருக்கிறார்.

குடியரசு கட்சியின் பாடுதான் திண்டாட்டமாக இருக்கிறது. வெல்ல முடியாத போர். பிடிக்க முடியாத ஒஸாமா. நிர்கதியான பேரிழப்புகளில் செயல்பாடற்ற அரசாங்கம். பல முனைகளிலும் மாற்றத்தை விரும்பும் மக்களை எதிர்நோக்குகிறது.

கடந்த முறை பில் க்ளிண்டன் தொடர்ச்சியாக எட்டாண்டுகள், இரண்டு தடவை தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவும் வேலை வாய்ப்பு அதிகரித்தல், பணவீக்கம் இல்லாத வளர்ச்சி, பங்குச்சந்தை வளம், வெளிநாடுகளுடன் நட்புறவு என்று சுபிட்சமாக இருந்தது. இருந்தாலும், அவருடைய துணை ஜனாதிபதி ஆல் கோர் தோற்றுப் போனார். கிளிண்டனுடனான உறவை போதுமான அளவு தூரபடுத்திக் காட்டிக் கொண்டும் தோல்வியை தவிர்க்கமுடியவில்லை. வாக்காளர்களுக்கு சீக்கிரமே அலுத்துவிடுகிறது.

தற்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் அப்பாதான், கடைசியாக ஜெயித்த துணை ஜனாதிபதி. ரொனால்ட் ரீகனின் கொள்கைகளை கடைபிடிப்பதாக உறுதி கூறினார். அவரைப் போலவே வருமான வரிகளை குறைக்கும் நிதித் திட்டத்தை முன்வைத்தார். அதே சமயம், தன்னை இன்னும் சூட்சுமமான, செயல்வீரனாக, காட்டிக் கொண்டார். ஈரான் ஊழல் பிரச்சினை போன்றவற்றை தவிர்க்கக் கூடியவராக, அன்றாட வேலைகளில் உள் நுழைந்து அலசி ஆராயக் கூடியவராக நிலை நிறுத்தி வெற்றியும் பெற்றார்.

குடியரசு கட்சிக்கு அடுத்த ‘புஷ்’ தேவை. ஜார்ஜ் ஆலன் மற்றும் புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ் இருவருமே கிட்டத்தட்ட இன்றைய நாயகன் புஷ் போலவே கொள்கை உடையவர்கள். எதிரி நாடுகளைப் போட்டு தாக்குவதில் ஆகட்டும்; மதத்துடன் பின்னிப் பிணைந்து சமூக அமைப்பை கொண்டு செல்வது ஆகட்டும்; பழைய மொந்தை… பழைய கள்.

கொடிவழி அறங்களை பின்பற்றுவதில் ஜார்ஜ் ஆலன் முன்னணியில் நிற்கிறார். புஷ்ஷைப் போலவே பொலிடிகலி இன்கரெக்டாக பேசுவது, அறிவு ஜீவிகளுக்கு தான் தலைவனல்ல என்று எதிர்பார்ப்பை குறைத்து மதிப்பிட சொல்வது என்று பலவகையிலும் தொடர்ச்சியை விரும்பும் வேட்பாளர்களின் நாயகனாக பார்க்க வைக்கிறார்.

இருந்தாலும் ஜனாதிபதியை விட்டு வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்ள 9 பேர் முயல்கிறார்கள். அவர்கள் குறித்த தகவல்கள்.


| |

The Cauvery river at Erode, Kerala.  

The Cauvery river at Erode, Kerala.
 Posted by Picasa

உச்சநீதிமன்ற நியமன நீதிபதி வாபஸ்

Miers withdraws nomination to Supreme Courtஅமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு ஹாரியத் மியர்ஸை (Harriet Miers) நியமனம் செய்திருந்தார் ஜார்ஜ் புஷ். எதிர்க்கட்சியான சுதந்திர கட்சி உறுப்பினர்களிடமிருந்து வழக்கமான எதிர்ப்பு இருந்தது. ஆனால், தன்னுடைய கட்சியான குடியரசு கட்சி செனேட்டர்களிடமிருந்தும், கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது.

  • புஷ்ஷின் ஆதரவாளர் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லாதவர்.
  • தற்பால் நாட்டமுடையவர்களுக்கு பரிவானவர்.
  • கருக்கலைப்புக்கு எதிரானவர்
  • நீதிபதியாக அனுபவம் இல்லாதவர்

    என்று குழப்பமாக பல பரிமாணங்கள் கொடுத்தார்கள்.

    ஸ்ரீகாந்த் மீனாக்ஷி எழுதியது போல் தன்னுடைய வலது கை கார்ல் ரோவுக்கும் இடது கை டிக் சேனிக்கும், இடது கையின் வலது கை லிப்பிக்கும் தொல்லைகள் பெருகும் இந்த வேளையில், நீதிபதி தேர்விலும் தலைவலியை உண்டாக்க விரும்பாமல் இருந்திருக்கலாம்.

    ஆலன் க்ரீன்ஸ்பானுக்கு மாற்றாக சமீபத்திய நியமனமான பென் பெர்னான்கேவை (Ben Bernanke) இன்னொரு உதாரணமாக காட்டலாம். குடியரசு கட்சி சார்புடையவர்; ஆனால், புஷ்ஷின் ஆதரவாளர் அல்ல; கென்னடி போன்ற எதிர்க்கட்சி தலைவர்களே பாராட்டும் திறமைசாலி.

    எறும்பு ஊற கல்லும் தேயும்.

    அதிகார போதையில் மிதந்தவர்கள் தரையில் இறங்க முயற்சிப்பது மகிழ்ச்சியான விஷயம்!


    | |

  • Miers withdraws nomination to Supreme Court </2005…

    Miers withdraws nomination to Supreme Court
     Posted by Picasa