தசாவதார கமலின் நாயகி அஸினுக்கு பிறந்த நாள். வாழ்த்த எனக்கு வயசு போதாது.
அண்ணன் ரஜினியோடும் மருமகன் தனுஷுடனும் ஜோடி கட்டும் ஷ்ரேயா, மலையாள இறக்குமதிகள் நயன் தாரா, நவ்யா நாயர், கோபிகா, வருங்கால சிம்ரன் நமீதா, அந்தக் கால ஜோதிகா போன்ற எல்லோரையும் முந்த எல்லாம்வல்ல இறைவனிடம் மன்றாடுகிறேன்.
இந்தப் பதிவின் தலைப்பை தேடுவோருக்காக: asin(x) வளைவுகளும் 1105 ADயும்
அஸினூவில் (Asinou) பைசாண்டைன் தேவாலயம் இருக்கிறது. யுனெஸ்கோவின் தொன்மையான உலக கலாசார இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிகிடாரிக்கு (Nikitari) முன்று மைல் தெற்காக, ட்றுடோஸ் (Troodos) மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது. அஸினூ என்பது கிரேக்கத்தில் அஸின் (Asine) என்பதின் மரூஉ. கிறித்துவுக்கு முந்தைய பதினொன்றாம் நூற்றாண்டில் அர்கோலிஸ் (Argolis) நகரத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்களால் அஸின் அமைக்கப்பட்டது.
பனிரெண்டாம் நூற்றாண்டில் தேவாலயம் கட்டப்பட்டது. Byzantine mural ஓவியங்களின் காலத்தை 12 முதல் 17ஆம் நூற்றாண்டாக நிர்ணயித்துள்ளார்கள்.
தென்மேற்கு பகுதியில் காணப்பட்ட குறிப்பில் இருந்து:
“the church of the holy mother of God was painted through the donation and great desire of Nicephoros Magistros the Strong, when Alexios Comnenos was Emperor in the year 6614, indiction 14”.
இதன் மூலம் தேவாலயம் கட்டப்பட்ட காலத்தை 1099க்கு பிறகு ஆனால் 1105க்க்ள் இருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.











