Monthly Archives: ஓகஸ்ட் 2005

மங்கள் பாண்டே – எழுச்சி

அவசரத்திற்கு ஆங்கில விமர்சனம்தான் எழுத முடிந்தது.

மங்கள் பாண்டேவை வெள்ளித் திரையில் பார்க்கலாமா என்று கேட்டால், முயற்சிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்னும் அளவில் ‘ஒரு முறை சென்று ரசியுங்கள்‘ என்று சொல்லலாம்.

என்னுடைய ஆங்கில விமர்சனத்தை
இங்கே சென்றால் படிக்கலாம்.

வெள்ளி

1. இந்தியன் எக்ஸ்பிரஸ் :: குப்பைகளற்ற நகரம் கோழிக்கோடு – இந்தியாவின் முன்னோடி

2. என்.டி.டிவி :: தனியார் (சுயநிதி) கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தேவையில்லை – உச்சநீதி மன்றம்

3. இந்தியன் எக்ஸ்பிரஸ் :: நோயுற்ற பெண் யாத்திரிகருக்கு உதவ நேபாளம் மறுப்பு; சீனா ஒத்துழைப்பு – மானசரோவர்

4. புகழ்பெற்ற ஆசியர்களின் வலைப்பதிவுகள் :: நந்திதா தாஸ், தீபக் சோப்ரா, சேகர் கபூர்,… (வழி: Sambhar Mafia)

5. டைம்ஸ் ஆஃப் இந்தியா :: மேலும் மேலும் பலான வீடியோக்கள்

சாம்பார் மாஃபியாவின் சுட்டித் தோட்டத்திற்கும் ஒரு நடை எட்டிப் பார்த்துவிட்டு வரலாம்!

| |

குவாண்டம் கணினி

புத்தக விமர்சனம் ::

Venkatramanan's Quantum Computer Book Review by Divakar Ranganathan in Tamil India Today

குறிப்பு: படத்தை அழுத்தினால் பெரியதாகத் தெரியும்.

நன்றி: இந்தியா டுடே (தமிழ்)

| |

ஹோலகாஸ்ட் நினைவுச் சின்னம்

குறிப்பு: படத்தை அழுத்தினால் பெரியதாகத் தெரியும்.

  • New England Holocaust Memorial, Boston, Massachusetts
  • கடைசியாக என்னைத் தேடி வந்தார்கள :: பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
  • முகமூடிகளின் தேடுகை :: குழியும் அலையும் விரியும் குவியும்
  • அவர்களும் நானும் :: ஈழநாதன்

    |

  • AS-28 Priz பத்திரமாகத் திரும்பியது

    அப்பாடா ஒருவழியா திரும்ப வந்து சேந்தாங்க. போன மூணு நாளா இவங்க என்ன செய்றாங்க அப்படீங்கறதவிட எப்ப, எப்படித் திரும்ப வரப்போறாங்கங்கறதுதான் கவலையா இல்ல.

    கடலோடிகளுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும், ருஷிய ராணுவத்துக்கு?? – அடுத்த தடவையாவது (அப்படீன்னு ஒன்னு இருந்தா) பத்தெரமா, பாத்து செய்யுங்க.

    செய்தி உதவி: நன்றி
    படம் உதவி: Viktor Korotayev/Reuters

    | | |

    தீராநதி

    ஆகஸ்ட் 2005

  • தமிழ் அறிவுஜீவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள் :: ரமேஷ்-பிரேம்
  • பலிகடாப் பெண்களின் யதார்த்த உலகம் :: வாஸந்தி
  • சிறைவாச நாட்கள் :: கி.ரா. பக்கங்கள்
  • உயரம் தாண்டுபவர்கள் :: பாரதிபாலன் (சிறுகதை)
  • மகிழ்ச்சியான முடிவு :: லீதா பெரஸ் காசரெஸ் [Lita Pérez Cáceres] (சிறுகதை)
  • சினிமா – கலை அறம் சரித்திரம் :: காஞ்சனா தாமோதரன் (ஹோட்டல் ருவாண்டா)
  • கவிதைகள் :: உமா மகேஸ்வரி
  • கவிதைகள் :: பா தேவேந்திரபூபதி
  • நீரும் நெருப்பும் :: சி அண்ணாமலை (கடல் வீசிய வலை – ஆவணப்படம்)

    | | |

  • சம்சாரிகளின் வட்டார வழக்கு மொழி

    கழனி யூரன் ::

    மரபாக சம்சாரிகள், நெல் மகசூல் செய்யும்போது தன் வட்டார வழக்கு மொழியை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

    முதன்முதலாகச் சம்சாரிகள், கதிர் அறுத்து அடிக்கும் தானியத்தைத் ‘தலையடித்தானியம்‘ என்று கூறுவார்கள். அதில் முதல் மரக்கால் நெல்லை கடவுளுக்கு அல்லது கோயிலுக்கு என்று அளந்துவிட்டு அடுத்த மரக்கால் நெல்லை, விதைக்கு என்று அளப்பார்கள். இது விதை நெல்லாகும். தலையடித் தானியம் சாமிக்கு அடுத்தது விதைக்கு என்ற களத்தில் வைத்துச் சம்சாரி கூறுகிறான். இந்த விதை நெல்லை ‘விதை முதல்’ என்று கூறுகிறார்கள்.

    நெல் நாற்றுப் பாவ வேண்டிய நிலை வந்ததும், நெல் விதையைச் சாக்கில் போட்டுக் கட்டித் தண்ணீரில் வைக்கிறார்கள். முதல் நாள் முழுவதும் விதை சாக்கோடு நீரில் மூழ்கி இருக்கும். மறுநாள் தண்ணீரைவிட்டு எடுத்து, மேடான இடத்தில் வைத்து விடுவார்கள். மூன்றாம் நாள் விதை முளைக்கூறி வெள்ளையாக விதையாகத்தளிர் வேர் வெளியே தெரியும். அதைச் சம்சாரிகள் ‘மூன்றாங் கொம்பு’ என்று கூறுகிறார்கள்.

    நாற்றுப் பாவ நாற்றாங்காலை உழுது பக்குவப்படுத்துகிறார்கள். முறைக்கட்டிய விதையை, நாற்றாங்காலில் பாவுகிறார்கள். அளவான நீரில் நாற்றங்காலின் தொழிலில் உள்ள சகதியின் மேல் விழுந்த விதையின் வேர் மண்ணில் பற்றிக் கொள்வதைச் சம்சாரிகள் ‘விதைத் தருவுதல்’ என்று கூறுகின்றார்கள்.

    நாற்றாங்கால் விதை பாவிய பிறகு சற்றே நீர் நிற்கவேண்டும். இதை நாற்றங்காலில் விதை முளைக்கும் வரை ‘சில்லுதண்ணியா’ நிக்கனும் என்று கூறுகிறார்கள். இல்லை என்றால், “திடீரென மழை பெய்து நாற்றங்காலில் உள்ள விதைகளைக் கட்டிக் குமித்து குவித்துவிடும்” என்று கூறுகிறார்கள்.

    மறுநாள், ”விதைகால் பாவிட்டு” என்று கூறுகிறார்கள். நாலு நாள் கழித்ததும், ”நாத்து கூடிட்டு” என்று சொல்கிறார்கள். நாற்று நன்றாக வளர்ந்துவிட்டால், ”நாற்றுச் செல்லப்பிள்ளை கணக்கா வளர்ந்திருக்கு” என்று கூறுகிறார்கள். பூரணமாக வளராத நாற்றை ‘கைக்கு எட்டாத நாற்று’ என்றும் சொல்கிறார்கள்.

    நாற்றைப் பிடுங்கி முடியாகக் கட்டுகிறார்கள். இதை, ஒரு முடி நாற்று என்று கூறுகிறார்கள். நாற்றுப் பிடுங்கும் பெண்களின் இரண்டு கைகளுக்கும் இடையே உள்ள ஒருவித உத்தேச அளவைக் கொண்டு இந்த நாற்று முடி அமைகிறது.

    நாற்று நடும்போது, ‘முதலைக் குறைத்து வைத்து நெருக்க நடு’ என்று கூறுகிறார்கள். இங்கு முதல் என்பது நெல் நாற்றைக் குறிக்கிறது.

    ‘நாள் நடுகை’ என்றொரு சொல்லாட்சியை சம்சாரிகள் இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார்கள். முதன்முதலில் ஒரு சம்சாரிக்கான கழனியில் நடுகிற நடுகையை, ‘நாள் நடுகை’ என்று கூறுகின்றார்கள். அதேபோல, அந்தச் சம்சாரிக்குச் சொந்தமான கழனிகளில் கடைசியாக நடுகிற நடுகையையும் ‘நாள் நடுகை’ என்றே குறிப்பிடுகின்றார்கள்.

    நாற்று நட்டு நான்கு நாட்கள் ஆன நெல்பயிரைப் பார்த்து ‘கூன்’ நிமிர்ந்து விட்டது என்று கூறுகின்றார்கள். அதன்பிறகு நான்கு நாட்கள் கழித்த பயிரைத்தான் ‘நடுகை தழுத்துட்டு’ என்று கூறுகிறார்கள். அதன்பிறகு ஒரு வாரம் கழித்ததும், ‘பயிர் பச்சை வீசிட்டு’ என்று கூறுகின்றார்கள். அதன்பின் ஒரு வாரம் கழித்து ‘கருநடுகை’ யாயிட்டு என்று கூறுகிறார்கள். அதன்பிறகு 1 வாரம் கழித்து பயிர் மூடு கட்டிட்டு என்றும், அதன்பின் 1 வாரம் கழித்து பயிர் நிலம் அடைத்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

    அதன்பிறகு நன்கு வளர்ந்து வயிற்றில் பொதி உள்ள பயிரை ‘பொதிப்பயிர்’ என்றும், பொதி வயிற்றில் உள்ள பயிரை, ‘ஒத்த இலக்குப் பயிர்’ என்றும் கூறுகிறார்கள். பொதி வெளிவந்தும் வராமலும் இருப்பதை ‘பயிர் விக்சலும் சச்சலுமா இருக்கு’ என்று கூறுகின்றார்கள்.

    பொதி எல்லாம் வெளிவந்த பயிரைப் பார்த்து, ‘கதிர் நிரந்துட்டு’ என்று கூறுகின்றார்கள். அதன்பிறகு ‘கதிர் அன்னம் கோதுகிறது’ என்று கூறுகின்றார்கள். பிறகு, நாலுநாள் கழித்து, ‘பால் கோதிட்டு’ என்று கூறுகின்றார்கள்.

    விளையும் பயிரைப் பார்த்து பயிர் தலை கவிழ்ந்துவிட்டது என்று கூறுகின்றார்கள். நெல் விளைந்ததும் ‘கதிர் மணி பிடிச்சிட்டு’ என்று கூறுகின்றார்கள். ஆரோக்கியமாக விளைந்த நெல் கதிரை, ‘கொலைத் தாக்கு உள்ள கதிர்’ என்று கூறுகின்றார்கள்.

    இது நெற்பயிர் குறித்த விவசாயத்தில் பயிர் குறித்த சொற்கள் மட்டுமே, இதுபோல நெல் பயிரிடுவது குறித்து, சம்சாரிகள் பயன்படுத்தும் சொற்களை எல்லாம் தனியாகத் தொகுக்கலாம். இதேபோல் மற்றப் பயிர்களைப் பயிரிடும்போது சம்சாரிகள் கூறும் வட்டார வழக்குச் சொற்களைத் தனியே சேகரிக்கலாம். தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக, அல்லது வட்டாரம் வாரியாக உள்ள சம்சாரிகள் பயன்படுத்தும் வட்டார வழக்குச் சொற்களை எல்லாம் சேகரித்தால், தமிழுக்குப் புதிய புதிய அழகிய சொற்கள் கிடைக்கும்.

    ஒரு குழந்தை பிறந்தது முதல் அக்குழந்தையை, பச்சப்பிள்ளை, ஏந்துபிள்ளை, கைக்குழந்தை, பால் குடி மாறாத பாலகன், தவழும் குழந்தை, நடைபயிலும் பிள்ளை, சிறுவன், பாலகன் என்று பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பல்வேறு பெயர்களைச் சொல்லி தாய் அக்குழந்தையை அழைப்பது போல் சம்சாரியும், தான் நட்டு வளர்க்கும் நெல் பயிரை அதன் வளர்ச்சி நிலைக்கு ஏற்பப் பல பெயர்களைச் சொல்லி அழைக்கிறான்.

    பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் பெருமக்கள், குழந்தையின் வளர்ச்சி நிலைகளைத் தாலாட்டு, அம்புலி, செங்கீரை என்று பல பருவங்களாகப் பார்த்து ரசித்தது போல், சம்சாரிகளும், தான் பயிரிடும் நெற்பயிரை வளர்ச்சி நிலைக்கு ஏற்ப பல்வேறு சொற்களால் அழைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

    | | |

    சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்

    58-வது சுதந்திர நாள் விழா:

    மேலும் விவரங்களுக்கு: ஐ.ஏ.ஜி.பி.

    | |

    சென்ற பத்து (6)

    1. தீர்த்து கட்டு
    2. கடைசியிலிருந்து தொடங்குங்கள்
    3. ஜமீலா
    4. Born into brothels
    5. புத்திரை வண்ணார்
    6. ராகோல்ஸவம்
    7. கற்றதும் பெற்றதும்
    8. நிமிர வைக்கும் நெல்லை
    9. உ.வே.சாமிநதய்யர்
    10. மும்பை மழை

    | | |

    உலாக்கு உலா

    மூளை இருக்கிறதா
    Comparing Brains


    Shopping Rage: செய்யவேண்டுமே என்று சிலர் செய்வார்கள். சிலர் முகர்ந்து, நுகர்ந்து, தேய்த்து, உரசி, தட்டி, கொட்டி, நிறுத்து, அனுபவித்து வாங்குவோம். சமைப்பதற்கு நேரம் ஒதுக்காவிட்டாலும் நுண்ணலை அடுப்புக்கு தீனி போடுவதற்காகவாவது செய்தே ஆகவேண்டிய வாரந்தர கடமை. அலுவலகத்தில் காட்ட முடியாத கோபம், வீட்டில் மனவுளைச்சல், சாலை கயக்கம் எல்லாம் சேர்ந்து கடைக்கு செல்லும்போது ப்ரேகிங் பாயிண்ட்டை அடைந்து வெடித்து விடுவீர்களா என்று பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


    Origami Ships

    பெய்யாத வடகிழக்கு மழைக்காக, குறிப்பெடுக்கும் தாள்களைக் கொண்டு, ஸஹாரா பாலைவன சென்னையில், கப்பல், கத்திக் கப்பல் என்றெல்லாம் செய்து பார்ப்போம். மறந்து போனதை ‘பச்சைக் கிளிகள் தோளோடு’ மாதிரி நினைவூட்டுகிறார்.


    சுந்தர காண்டம் :: ஊர் தேடு படலம்
    அனுமன் கும்பகருணனைக் காணுதல்

    இயக்கியர், அரக்கிமார்கள், நாகியர், எஞ்சு இல் விஞ்சை
    முயல் கறை இலாத திங்கள் முகத்தியர், முதலினோரை-
    மயக்கு அற நாடி ஏகும் மாருதி, மலையின் வைகும்,
    கயக்கம் இல் துயிற்சிக் கும்பகருணனைக் கண்ணின் கண்டான். (119)

    | |