Shopping Rage: செய்யவேண்டுமே என்று சிலர் செய்வார்கள். சிலர் முகர்ந்து, நுகர்ந்து, தேய்த்து, உரசி, தட்டி, கொட்டி, நிறுத்து, அனுபவித்து வாங்குவோம். சமைப்பதற்கு நேரம் ஒதுக்காவிட்டாலும் நுண்ணலை அடுப்புக்கு தீனி போடுவதற்காகவாவது செய்தே ஆகவேண்டிய வாரந்தர கடமை. அலுவலகத்தில் காட்ட முடியாத கோபம், வீட்டில் மனவுளைச்சல், சாலை கயக்கம் எல்லாம் சேர்ந்து கடைக்கு செல்லும்போது ப்ரேகிங் பாயிண்ட்டை அடைந்து வெடித்து விடுவீர்களா என்று பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
பெய்யாத வடகிழக்கு மழைக்காக, குறிப்பெடுக்கும் தாள்களைக் கொண்டு, ஸஹாரா பாலைவன சென்னையில், கப்பல், கத்திக் கப்பல் என்றெல்லாம் செய்து பார்ப்போம். மறந்து போனதை ‘பச்சைக் கிளிகள் தோளோடு’ மாதிரி நினைவூட்டுகிறார்.
சுந்தர காண்டம் :: ஊர் தேடு படலம்
அனுமன் கும்பகருணனைக் காணுதல்
இயக்கியர், அரக்கிமார்கள், நாகியர், எஞ்சு இல் விஞ்சை
முயல் கறை இலாத திங்கள் முகத்தியர், முதலினோரை-
மயக்கு அற நாடி ஏகும் மாருதி, மலையின் வைகும்,
கயக்கம் இல் துயிற்சிக் கும்பகருணனைக் கண்ணின் கண்டான். (119)













