செவ்வாய்பேட்டை அப்புசெட்டித் தெரு
சேலம்.
நடந்து சென்று கொண்டிருந்த ஏழை கர்ப்பிணிப் பெண் நடு ரோட்டிலேயே விழுந்து பிரசவ வலியால் துடித்திருக்கிறாள். அந்த வழியாக போய்க்கொண்டிருந்த யாரும் அருகில் சென்று உதவவில்லை. வீட்டிலிருந்து கதவைத் திறந்து பார்த்த ஒரு சில பெண்களும் வெளியே வரவில்லை. கிட்டத்தட்ட அரைமணி நேரம் பிரசவ வலியால் துடிதுடித்து மயங்கியிருக்கிறாள். சற்று நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. அப்போதும் யாரும் அருகில் வரவில்லை. அந்தப் பெண்ணே கண்விழித்து, குழந்தையை எடுத்து தொப்புள் கொடியைக் கைகளினாலேயே கிள்ளியிருக்கிறாள். எல்லாம் நடந்து முடிந்த பிறகு யாரோ ஒரு புண்ணியவான் அந்தப் பெண்ணை ஒரு ஆட்டோ பிடித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
கருத்தோடை : தமிழ் | Tamil | Anniyan | Anandha Vikadan











மனிதாபிமானமா!
“அது எந்த கடையில் கிடைக்கும்?” என்று கேட்கிற லெவலுக்கு ஆகிவிட்டார்கள், இந்த இயந்திர உலகத்தில்.
மனிதர்களும் இருக்கிறார்கள். எப்போதாவது… அரிதாக…
நாசமாப் போக.
விபத்துக்குதான் உதவ வர மாட்டார்கள் என்றால் பிறப்புக்குமா?
ஆசுபத்ரிக்குப் போனாலே கேசு போட்டுருவாங்க என்ற பயத்தை மக்களிடம் யார் போக்குவது?
ஒரு Legal அமைப்புத் தொடங்க ஆசை.
அன்புடன்,
கணேசன்.
>> Legal அமைப்புத் தொடங்க ஆசை
குறிக்கோள் என்ன?
தொடக்கமாக நேரம் கிடைத்தால், voluteer-ஆக சிலவற்றில் பங்கு பெறலாம். அமெரிக்காவில் ரெட் க்ராஸ், அருங்காட்சியங்கள் போன்றவை flexible-ஆக நமக்கு நேரம் கிடைக்கும் போது சேவை செய்ய அழைப்பவை.
எதுவாக இருந்தாலும் வலைப்பதிவர்களிடமிருந்து support இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
நன்றி கணேசன், அபூ
நன்றி பாலா (boston பாலா)
என்க்கு அமெரிக்காவில் எதனையும் தொடங்க வேண்டும் என்றோ அல்லது இங்கு சேவை அமைப்புகளில் பங்கு பெறுவதைப் பற்றியோ கேள்வி/கவலை இல்லை.
சிலவற்றில் எனது பங்களிப்பும் உண்டு.
இங்கு மனிதம் நன்றாக உள்ளது (No politics . I am talking about ordinary people). எத்தனையோ வயதானவர்கள் மருத்துவமனிகளில் இலவச சேவை செய்வதைப் பார்த்து இருக்கிறேன்.
எனது நோக்கங்களைப் பற்றி பிறகு தெளிவாக எழுதுகிறேன்.
செய்ய நினைப்பது:
இந்தியாவில்–>தமிழகத்தில்–> at least நான் பிறந்த ஊரிலாவது
விபத்துக்குள்ளானவர்களை (யாராக இருப்பினும்) , அவசர உதவி தேவைப் படுபவர்களை யாரும்
எப்போதும் எந்த மருத்துவமனையில் வேண்டுமானலும் சேர்க்கலாம்.
அதனால் ஏற்படும் follow-up police,govt related issues will be handled by a dedicated volunteers.
மேற்சொன்னது கரு மட்டுமே.
அன்புடன்,
கணேசன்.